வழி எதுவானால் என்ன, இங்கு வாழ்ந்துகொண்டிருக்கும்போதே அங்கு இடம்பிடிப்பது அத்தனை எளிதல்லவே.
இதற்கு, யோனி[பொருள் தெரியாத சின்னஞ்சிறுசுகள் அகராதியில் தேடலாம்]யைப் பூஜித்து, உடல் மனம் ஆகியவற்றின் பிடிகளிலிருந்து விடுபட்டு ஆன்மாவில் ஒன்ற வேண்டும் என்கிறார்கள்.
இவ்வாறு ஆன்மாவுடன் ஒன்றிணைவது[!!!!!] சாத்தியமான பிறகு, அந்த நிலையிலிருந்து சற்றேனும் விடுபட்டுவிடாமல் உடலுறவில் ஈடுபடுதல் வேண்டும்.
இதைச் செய்தால்.....
ஆண் வெளிவிடும் விந்து அவனின் அந்தரங்க உறுப்பு வழியாக வெளியேறுவதற்கு மாறாக, மேல் நோக்கி[???] ஓடுமாம். இதனை, 'ஊர்த்வ ரேதஸ் 'என்கிறார்கள்.
'ஊர்த்வ ரேதஸ்'ஐக் கையாளுவதில் வெற்றி காண்பவர்கள் 'முக்தி' பெறுவது, அதாவது, சொர்க்கம் சேர்வது 100% உறுதி என்கிறது தினமலர்க் கட்டுரை[கட்டுரையின் ஒரு பகுதி] https://krishmani.wordpress.com/tag/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/
'இந்த முயற்சியில் வெற்றி கண்டு முக்தி அடைந்தவர்கள் பலர் இருந்தார்கள்; இருக்கிறார்கள்' என்று உறுதிபடச் சொல்கிறது அந்தக் கட்டுரை.
"இருக்கட்டும், விந்துவை வெளியேற்றாமல் மேலே ஏற்றுவதற்கும், சொர்க்கத்துக்குப் போவதற்கும் என்னய்யா சம்பந்தம்?" என்று கேட்டுக் கடுகடுக்க வேண்டாம். பொய்யான தகவல்களைத் 'தினமலர்' ஒருபோதும் தராது என்பதால்.....
இக்கணமே, 'ஊர்த்வ ரேதஸ்' உடலுறவு முறையைச் செயல்படுத்துங்கள். நீங்கள் சொர்க்கம் புகுவது சர்வ நிச்சயம்.
உங்களையெல்லாம் வரவேற்பதற்காக அடியேன் அங்கே காத்திருப்பேன் என்பதை அளப்பரிய ஆனந்தப்பெருக்குடன் சொல்லி இன்புறுகிறேன்!
ஹி... ஹி... ஹி!!!
==========================================================================