வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

ஆணுறுப்பில் ‘எலும்பு முறிவு’ சாத்தியமா?

அண்மையில், முதலிரவின்போது ஆண்மகனின்[கணவன்] ஆண் உறுப்பின் எலும்பு உடைந்ததால், மனமுடைந்த அவனும் அவன் மனைவியும் தற்கொலை செய்துகொண்ட பரிதாப நிகழ்வு பற்றி[ஊடகங்கள் வாயிலாக]ப் பலரும் அறிந்திருத்தல்கூடும்.

உண்மையில் ஆணுறுப்பில் எலும்பு இல்லை என்று உடலியல் மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

எனவே, இவ்வுறுப்பில் எலும்பு முறிவதற்கான வாய்ப்பே இல்லை.

தவறான உடலுறவு முறையால் உறுப்பில் சிதைவு நேர்கிறது என்பது அறியத்தக்கது.

அதென்ன ‘சிதைவு’?

ஆணுறுப்பின் தோல் பகுதிக்குக் கீழே ரப்பர் போன்ற ‘திசு அடுக்கு’ உள்ளது. இது "துனிகா அல்புகினியா"[துனிகா அல்புஜினியா என்பது ஆண்குறியின் நீளத்தை நீட்டிக்கும் நார்ச்சத்து உறை ஆகும். இது ஒரு இரு அடுக்கு அமைப்பாகும், இதில் வெளிப்புற நீளமான அடுக்கு மற்றும் உள் வட்ட அடுக்கு ஆகியவை அடங்கும்... It is a bi-layered structure that includes an outer longitudinal layer and an inner circular layer] எனப்படும். இதுதான் உடலுறவுன்போது ஆணின் ஆணுறுப்பு அளவு அதிகரிக்கவும் குறையவும் காரணமாக அமைந்துள்ளது.

ஆணுறுப்பின் ‘திசு முறிவு’அறிகுறிகளாவன:

*ஆணுறுப்பில் சத்தம்.

*விறைப்புத்தன்மை குறைதல்

*உறுப்பில் கடுமையான வலி.

*ஆணுறுப்பில் நீல நிறமும் கறுப்பு நிறமும் தோன்றுதல்.

*எதிர்பாராத வகையில் ரத்தப்போக்கு ஏற்படுதல்.

*சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உண்டாதல்.

சிதைவைக் கண்டறிவது எப்படி?

சிறுநீர்க்குழாய் செயல்பாடு குறித்துக் கண்டறியச் ‘சிறுநீர்ப் பரிசோதனை’யும், ஆணுறுப்பில் சிதைவு ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்கச் ‘சிறப்பு வகை எக்ஸ்ரே’வும், ஆண்குறியில் அல்ட்ராசவுண்ட் அல்லது எம்ஆர்ஐ உள்ளிட்ட சோதனைகளும் செய்தல் வேண்டும்.

***இத்தகவல்கள், ஆணுறுப்புச் சிதைவு பற்றி எச்சரிப்பதற்காக மட்டுமே. அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுதல் வேண்டும்.

* * * * *

https://www.indiaglitz.com/is-it-possible-to-have-a-penis-break-during-intercourse--news-292253

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

தமிழ் வளருது... வளருது! மோடியால் வளருது!!



ணணாமலையாரின்[பாஜக] நடைப்பயணத்தில், ‘மோடி’யாரின் ஊர்ந்து செல்லும் பிரமாண்க்சிலை, சூழ்ந்து நின்று வேடிக்கை பார்க்கும் மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளதாம்.


‘மோடி உருவச்சிலை எழுந்து நிற்பது போன்றும், தலையை இரு பக்கமும் திருப்பிப் பார்த்துக் கையை அசைப்பது போன்றும் மின் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. அந்தச் சமயத்தில் பிரதமர் மோடியின் இந்தி உரை ஒலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது’ என்பது சில மணி நேரங்களுக்கு முன்னரான செய்தி[https://www.vikatan.com/government-and-politics/politics/modi-statue-in-annamalai-kanniyakumari-walk]


மோடிஜி, உடற்பயிற்சி, யோகா எல்லாம் செய்து தன் உடம்பைக் கட்டாக வைத்திருக்கிறார் என்பது உலகறிந்த செய்தி.


உலக அளவில் உலா செல்லும் இடங்களில் எல்லாம், “தமிழ் மிகப் பழமையானதொரு மொழி; மிக மிக மிக மிக மிகச் சுவையான தேனினும் இனிய மொழி; இதை நான் என் உயிரினும் மேலாக நேசிக்கிறேன்’ என்பதுபோல் தமிழுக்குப் புகழ்மாலை சூட்டவும் அவர் தவறுவதே இல்லை.


இப்படிப் பேசிப் பேசிப் பேசியே அத்தனைத் தமிழர்களின் உள்ளங்களையும் கொள்ளைகொண்டுள்ளார் என்பது நாமனைவரும் அறிந்ததே[நீங்கள் எப்படியோ, அடுத்த தேர்தலில் என் வாக்கு ‘பாஜக’வுக்குத்தான்].


இப்போது மேற்கண்ட செய்தியின் கடைசி வரியை மீண்டும் வாசியுங்கள்.


வாசிப்பின் மூலம், அவரின் இந்தி உரை ஒலிபரப்பாகும் வகையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து[இது தமிழ்நாடு என்பதால், தமிழில் “வணக்கம்” சொல்லி ஆங்கிலத்தில் பேசுவதாக, சிலையை வடிவமைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருப்பீர்கள்] பேரதிர்ச்சிக்கு உள்ளாகாதீர்.


காரணம், தமிழின் மீது மோடி கொண்டுள்ள பற்று கிஞ்சித்தும் கறைபடியாதது.


அவர் இந்தியில் உரையாற்றுவதுபோல் சிலை கட்டமைக்கப்பட்டிருப்பது…..


நடுவணரசில் தனக்கு அமைச்சர் பதவி தரவில்லை என்பதால் மனம் நொந்துபோன, தலைவர் அண்ணாமலையாரின் ‘உள்குத்து’ வேலை இது என்பதை அறிவீராக!


வாழ்க மோடி! ‘என்றுமுள தமிழ்’ போல வாழ்க!!