வெள்ளி, 15 மார்ச், 2024

மோடி வென்றால்... எங்கும் எதிலும் ‘ஒரே’... ‘ஒரே’... ‘ஒரே’!!!

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’... 19 ஆயிரம் பக்க அறிக்கையைக் குடியரசுத் தலைவரிடம் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்’ என்பது அனைத்து ஊடகங்களிலும் வெளியாகியுள்ள செய்தி.

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் ‘பாஜக’ மோடி வென்று மீண்டும் பிரதமர் ஆனால்[ஆனால் என்ன ஆனால்... அவரின் வெற்றி 100% உறுதி].....

ஒரே நாடான இந்தியாவில் இனி தேர்தலே நடைபெறாது. அந்த ‘ஒரே’ தேர்தலோடு[2024] தேர்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

தேர்தலே நடைபெறாது என்பதால், இனி இந்த நாட்டின் ‘ஒரே’ பிரதமர்[சர்வாதிகாரி? அதிபர்?] மேதகு மோடிதான்.

இங்கு வாழும் அனைவரும் ‘ஒரே’ இனம்தான்[“நான் தமிழன், நான் கன்னடன்...” என்றெல்லாம் எவனும் வாய் திறந்து சொல்லக்கூடாது. சொன்னால்.....

என்ன தண்டன என்று முடிவு செய்யும் ஒரே நிரந்தரப் பிரதமரும்  அவர்தான்[ஒப்புக்கு சில நீதிமன்றங்களும் நீதிபதிகளும் இருக்க வாய்ப்புள்ளது].

அவர் பிறப்பிக்கவுள்ள மேலும் பல சட்டங்கள்:

ஒரே இனத்தவரான இந்தியரின் ‘ஒரே’ மொழியும் இந்திதான். 

இந்தியருக்கு ‘இந்து’ என்னும் ஒரே மதம்தான்.

நாட்டில் ராமன் என்னும் ஒரே கடவுளுக்கு மட்டுமே கோயில் கட்டலாம்.

குடும்பக் கட்டுப்பாடுச் சட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்தியும் மக்கள் தொகை உயர்ந்துகொண்டே போகிறது. அதைத் தவிர்க்க, நாட்டின் எந்தவொரு குடிமகனும் ‘ஒரே’ திருமணம்தான் செய்துகொள்ளலாம்[இன்றுள்ள சட்டத்தில் நெளிவும் சுழிவும் இருப்பதால், அவனவன் ஒன்றென்ன, 9 கல்யாணம்கூடக் கட்டுகிறான் என்பது காரணம்].

குடும்பத்தார், ஆணோ பெண்ணோ ஒரே ஒரு பிள்ளைக்கு மேல் பெற்றுக்கொள்ளுதல் கூடாது. 

ஆண்கள் அத்தனை பேரும் ராமனைப் போல ஏகப்பத்தினி விரதர்களாகவும், கற்புக்கு அரசர்களாகவும் வாழ வேண்டும். 

மேற்கண்ட சட்டங்களை அமல்படுத்துவது எளிது என்றாலும், கடைசிச் சட்டத்தின்படி ஏகப்பத்தினி விரதர்களாக வாழ்வது நம் ஆட்களுக்குச் சாத்தியப்படாது என்பதால்.....

ஓர் ஆண் ‘ஒரே’ ஒரு வைப்பாட்டி வைத்துக்கொள்வதற்குப் பிரதமர் அனுமதிப்பார்.

மேலும்.....

வைப்பாட்டி என்பவள் ஏறத்தாழ ஒரு பெண்டாட்டிதான் என்பதால், அவளிடம் பெறும் அந்தரங்கச் சுகம் கள்ளக்காதலி தரும் சுகத்துக்கு ஈடாகாது என்பதால், ஒரு குடும்பத் தலைவர் ஒரே ஒரு கள்ளக்காதலியைச் ‘செட்டப்’ செய்து கொள்வதற்கு மோடி வாய்மொழியாய் அனுமதி வழங்குவார் என்பது உறுதி. 

வாழ்க மோடி! வளர்க அவர் புகழ்!! வெல்க அவரின் ‘ஒரே’ கொள்கை!!!

வியாழன், 14 மார்ச், 2024

கண்ணீரை வரவழைக்கும் பதிவும் படமும்!!!

நீங்கள் மிகவும் இளகிய மனதுக்காரராக இருந்தால், ஒரு படத்தை உள்ளடக்கிய இந்தப் பதிவை வாசித்துக் கண் கலங்குவீர்கள்.

தொடர்ந்து கண்ணீர் சிந்துவதைத் தவிர்க்க நினைத்தால், மீண்டும் பதிவை வாசிக்காதீர்கள்.

பதிவின் உள்ளடக்கம் ‘B.B.C.' செய்தியின் சுருக்கம்.

* * * * *

#தன் ஒட்டுமொத்த குடும்பத்தையே அழித்துவிட்ட இஸ்ரேலின் குண்டுவெடிப்பிலிருந்து ‘அஹ்மத் அல்-குஃபேரி’ மட்டுமே தப்பினார்.

காஸா நகரில் உள்ள அவரது குடும்ப வீட்டில் குண்டுவெடித்து, அதில் அவரது 103 உறவினர்கள் கொல்லப்பட்டபோது, அவர் 50 மைல்கள்(80 கி.மீ.) தொலைவில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ஜெரிகோவில் சிக்கிக் கொண்டிருந்தார்.


டிசம்பர் 8ஆம் தேதி மாலை தாக்குதல் நடந்த நேரத்திலும் அவர் தனது மனைவி ஷிரீனிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, தான் இறப்பது உறுதி என்பது ஷிரீனுக்குத் தெரிந்துவிட்ட நிலையில், “நான் எப்போதாவது ஏதாவது தவறு செய்திருந்தால் அதை மன்னித்து விடுங்கள்” என்று அவள் அவரிடம் சொல்ல நிலைகுலைந்துபோனார் ‘அஹ்மத் அல்-குஃபேரி’.


“அப்படிச் சொல்லாதே என்று நான்[அஹமத்] சொன்னேன். அதுதான் எங்களுக்கு இடையே நடந்த கடைசி உரையாடல்" என்றார் அவர் ‘பிபிசி’யிடம்.


அன்று மாலை அவரது மாமாவின் வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய ஒரு பெரிய குண்டுவெடிப்புத் தாக்குதலில்தான், அவரது மனைவி மற்றும் அவரது மூன்று இளம் மகள்கள்[தலா, லானா, நஜ்லா ஆகியோர்] கொல்லப்பட்டார்கள்.


அஹ்மதின் தாயார், அஹ்மதின் நான்கு சகோதரர்கள், அவர்களது குடும்பங்கள், பல சித்திகள், சித்தப்பாக்கள், அத்தைகள், மாமாக்கள் ஒன்றுவிட்ட சகோதர்கள் என்று பலரும் உயிரிழந்தனர். மொத்தம் 100க்கும் மேற்பட்டோர் இதில் இறந்தனர்[பிபிசி,16 பிப்ரவரி 2024].


உறவினர்களை இழந்த காஸா தந்தையின் கண்ணீர் கதை

[இந்தக் கள்ளங்கபடமற்ற பிஞ்சுகள் குண்டு வெடிப்பில் உருக்குலைந்து சிதறியது ஆண்டுகள் பல கழிந்தாலும் மறப்பது சாத்தியமா?!]


அஹ்மத் தன்னுடைய மூன்று செல்ல மகள்களான தலா, லான, நஜ்லா[படம்] ஆகியோரின் நினைவுகளால் தான் நிலைகுலைந்து போகக்கூடாது என்பதற்காக, தன் தொலைபேசி, மடிக்கணினி ஆகியவற்றின் திரைகளிலிருந்து அவர்களின் படங்களை அகற்றிவிட்டார்.

* * * * *

பட மூலாதாரம்https://www.bbc.com/tamil/articles/c4nwnywl9l0o