புதன், 10 ஏப்ரல், 2024

'ஞான நோய்' மருத்துவர் ஜக்கி வாசுதேவ்!!![கதை > சிரிக்கவும் சிந்திக்கவும்]

மனநல மருத்துவர் மாசிலாமணியிடம் சிகிச்சை பெறக் காத்திருந்தவர்களில் ஆரோக்கியசாமியும் ஒருவர்.

தனக்கான முறை வந்ததும் மருத்துவர் அறைக்குள் சென்று அவர் சுட்டிக்காட்டிய இருக்கையில் அமர்ந்தார் சாமி.

“சொல்லுங்க, என்ன பிரச்சினை?” என்றார் டாக்டர்.

சுற்றி வளைக்காமல் நேரடியாக விசயத்துக்கு வந்தார் நம்மவர்.

“போன மாசம் திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கப் போனேன். தரிசனம் முடிந்து ஊர் திரும்பும்போது, என் உள் மனசு ஒரு கேள்வி கேட்டுது... ” -சொல்லி நிறுத்தி மருத்துவரின் முகம் பார்த்தார் சாமி.

“முழுசும் சொல்லி முடிங்க” -மருத்துவர்.

“உனக்கு வயசு எழுபது ஆகுது. சாகறதுக்குள்ளே இன்னும் எத்தனை தடவை திருப்பதி வருவேன்னு என் உள் மனசு கேள்வி கேட்டுது.”

“இதுல என்ன பிரச்சினை உங்களுக்கு?”

“பிரச்சினையே இங்கதான் ஆரம்பிச்சுது டாக்டர். இது மாதிரி கேள்வியை அடிக்கடி அது கேட்குது.”

“புரியும்படி சொல்லுங்க.”

“கடைக்குப் போய் முடி வெட்டிக்கும்போது, உன் ஆயுசுக்குள்ள இன்னும் எத்தனை வாட்டி முடி வெட்டிக்க வருவேன்னு அது கேட்குது. செட்டிநாடு ஓட்டலில் பிரியாணி சாப்பிடும்போதும் இதே கேள்விதான். குளிக்கும்போதும் சரி, பெண்டாட்டியோடு சண்டைபோடும்போதும் சரி, தலைக்கு ‘டை’ அடிக்கும்போது சரி, வேறே எதைச் செய்யும்போதும் குறுக்கிட்டு ‘இதை இன்னும் எத்தனை தடவை செய்வேன்னு கேட்டுக் கேட்டு என்னைப் பயமுறுத்துதுங்க. உங்களைப் பார்க்க வரும்போதுகூட, இனிமேலும் எத்தனை முறை இந்தப் பைத்திய டாக்டரைப் பார்க்க வருவேன்னு கேட்டுதுங்க” -குரல் தழுதழுக்கச் சொன்னார் ஆரோக்கியசாமி.

“உங்களுக்குள்ள பிரச்சினை புரியுது. இது மன நோயல்ல. என்னிடம் நீங்க வந்திருக்கக் கூடாது” -மருத்துவர் உறுதிபடச் சொன்னார்.

“வேறு எங்கே போறது?”

“இது ஒருவித ஞான நோய். ஞானிகளால்தான் இந்த நோயைக் குணப்படுத்த முடியும். ஈஷா யோகா மையம் பக்கத்தில்தானே இருக்கு. ஆதி ஞானி ஜக்கி வாசுதேவைப் போய்ப் பாருங்க” என்றார் மாசிலாமணி.

“அவர் பேசுறது எதுவுமே புரியுறது இல்லேன்னு சொல்லுறாங்களே?”

“புரியலேன்னாலும் இடைவிடாம அவர் போதனைகளைக் கேட்டீங்கன்னா அரைப் பைத்தியம் ஆயிடுவீங்க. அப்புறம் உங்க உள்மனசு இப்படிக் கேள்வி கேட்டுக் குடைச்சல் கொடுக்காது. போய்வாங்க, சாரி... போங்க” என்று தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்று[“உங்க ஆயுளில் இன்னும் எத்தனை நோயாளிகளைப் பார்ப்பீங்க?” என்று கேட்ட உள்மனதை “அடச்சீ, சும்மா இரு” என்று கடிந்துகொண்டே] கைகூப்பினார் மனநல மருத்துவர் மாசிலாமணி.

செவ்வாய், 9 ஏப்ரல், 2024

மோடி ஓட்டுக் கேட்க[ரோடு ஷோ] வருவது ‘பாஜக’ பிரமுகராகவா, பிரதமராகவா?!

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில்[2024] மோடியும் ஒரு வேட்பாளராகப் போட்டியிடுகிறார் என்பது யாவரும் அறிந்ததே. 

வாக்காளர்களுக்கு ‘ஷோ’ காட்டுவதற்காக அவர் இன்று சென்னை வருவது அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளியாகியுள்ளது.

அவர் இந்த நாட்டின் பிரதமர்.

பிரதமர்தான் என்றாலும், ஒரு குடிமகனாகத்தான், தன் கட்சிக்கு[பாஜக] ஓட்டுச் சேகரிக்க[‘ரோடு ஷோ’வின் மூலம்] வருகிறார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

வாக்குச் சேகரிப்பில் ஈடுபடும்போது 100% அவரும் வேட்பாளரே; ஒரு கட்சியின் தலைவரே. அல்லது தலைவர்களில் ஒருவரே.

ஆனால், அனைத்து ஊடகங்களுமே, செய்தித் தலைப்புகளில், ‘பிரதமர் மோடி’ என்றே குறிப்பிட்டுள்ளன. 

மோடி தேர்தல் பரப்புரைக்குச் செல்லும்போதெல்லாம் ஊடகங்கள் இந்தத் தவற்றைச் செய்கின்றன[‘பாஜக’ தலைவர் மோடி என்றோ, நரேந்திர மோடி என்றோ குறிப்பிடுதலே முறையானது] மோடியும் இதை அனுமதிக்கிறார்; ஒருபோதும் சுட்டிக்காட்டித் திருத்தியதில்லை.

மோடி ஒரு பிரதமராக, தன் கட்சிக்காக வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவது தன் பிரதமர் பதவிக்குள்ள அதிகாரத்தை மிகத் தவறான முறையில்[அதிகாரத் துஷ்பிரயோகம்] பயன்படுத்தும் குற்றத்திற்கு ஆளாகிறார்தானே? இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாதது ஏன்?

இந்தியாவின் வெகு சாமானியக் குடிமகனான என் சிற்றறிவில் முகிழ்த்த கேள்விகள் இவை.

எவரிடம், அல்லது எவரெவரிடமெல்லாம் கேட்டால் இவற்றிற்குப் பதில் கிடைக்கும்?!

8 மணிநேரம் முன் — பிரதமரின் ரோடு ஷோ நிகழ்ச்சி காரணமாக, சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற ...
விடுபட்டவை: இடையூறுகள் ‎| இந்த வார்த்தையின் மூலம் தேடு: இடையூறுகள்
7 மணிநேரம் முன் — PM Visits in Chennai: பிரதமர் மோடி இன்று 'ரோடு ஷோ'..சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் - விபரம் இதோ.! Karthikeyan S ...
விடுபட்டவை: இடையூறுகள் ‎| இந்த வார்த்தையின் மூலம் தேடு: இடையூறுகள்
15 மார்., 2024 — பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பாஜக தாக்கல் செய்த அவசர மனுவை ஏற்று நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் இந்த ...
Google டிரான்ஸ்லேட் செய்ததுஒரிஜினலைக் காட்டு (English)
15 மார்., 2024 — சென்னை: கோயம்புத்தூரில் மார்ச் 18-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் ரோட்ஷோ நடத்த பாஜகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ...
Google டிரான்ஸ்லேட் செய்ததுஒரிஜினலைக் காட்டு (English)
7 மணிநேரம் முன் — அங்கிருந்து மாலை 6 மணிக்கு பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி தொடங்குகிறது. பனகல் பார்க்கில் இருந்து தேனாம்பேட்டை சிக்னல் வழியாக ...
விடுபட்டவை: இடையூறுகள் ‎| இந்த வார்த்தையின் மூலம் தேடு: இடையூறுகள்
22 மணிநேரம் முன் — சென்னை: பிரதமர் 'ரோடு ஷோ' நிகழ்ச்சியை ஒட்டி, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி முதல், தியாகராய சாலையில் வாகனங்கள் செல்ல தடை ...
விடுபட்டவை: இடையூறுகள் ‎| இந்த வார்த்தையின் மூலம் தேடு: இடையூறுகள்