புதன், 16 ஏப்ரல், 2025

கடவுளை நம்புவதால் தடைபடும் ஆறறிவு வளர்ச்சி!!!

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன, சூரியனைச் சுற்றியுள்ள கோள்களின் சுற்றுப்பாதையில் இருந்து விண்மீன் திரள்களின் சுழற்சிவரை. 

இயங்குவது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. விண்வெளியில் அசைவில்லாமல் இருப்பது எதுவும் இல்லை. அசைவற்றிருப்பவை போல் காட்சியளிக்கிற கற்பாறை, இரும்புத்தூண் போன்றவற்றில்கூட இயக்கம்[இதன் விளைவுதான் அவற்றின் உருமாற்றம்] இடம்பெற்றிருக்கிறது.

இந்த இயக்கம்தான் அண்டவெளியின்[பிரபஞ்சம்] அடிப்படை அம்சங்களில் மிக முக்கியமானது.

கோள்கள் மட்டுமல்ல, விண்மீன்கள் மட்டுமல்ல, மிகச் சிறிய துகள்களும்கூட இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.

ஏன் இந்த இடைநிறுத்தம் இல்லாத இயக்கம்?

'விண்வெளியில் இரண்டு பொருள்கள் ஒன்றையொன்று நெருங்கி வரும்போது, ​​அவற்றின் பரஸ்பர ஈர்ப்பு விசையால் பெரும்பாலும் அவை மோதுவதற்கு அல்லது பிரிந்து செல்வதற்குப் பதிலாக ஒன்றையொன்று சுற்றி வருவதற்கு இந்த இயக்கம்தான் காரணம்'. 

இயக்கம் பிரபஞ்சத்தின் உயிர்நாடி. 

இயக்கம் என்பது ஆற்றலின் வெளிப்பாடு.

இந்த இயக்கம் தானாக நிகழ்கிறதா, நிகழ்த்தப்படுகிறதா?

“ஆண்டவனால் நிகழ்த்தப்படுகிறது என்று அறிவியலாளர்கள்[பெரும்பாலோர்] சொல்வதில்லை; சொல்லப்படுவதை ஏற்பதும் இல்லை.

ஏற்றால்.....

கேள்விக்கு விடை தேடும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி விழும். அறிவு வளர்ச்சி முற்றிலுமாய்த் தடைபடும்.

ஆகவே, இவ்வகையான எந்தவொரு கேள்விக்கும் முற்றுப்புள்ளி வைப்பதை அவர்கள் விரும்புவதில்லை.

கேட்கிறார்கள்; கேள்விகளைக் கேட்கிறார்கள். இதனால் அவர்களின் அறிவு வளர்கிறது; அறிவியலும் வளர்ச்சி பெறுகிறது.

முற்றுப்புள்ளி வைப்பவர்கள் மதவாதிகள். கடவுளின் பெயரால் கணக்குவழக்கில்லாமல் மூடநம்பிக்கைகளை உற்பத்தி செய்தவர்கள்... செய்பவர்கள் அவர்கள்!

செவ்வாய், 15 ஏப்ரல், 2025

“செருப்புப் போடமாட்டேன்”... சபதம் செய்த[மோடி பிரதமராகும்வரை] ஹரியானா பைத்தியம்!!!

‘கப்ஸா’ என்னும் அரபுச் சொல்லுக்கு, ‘மெய் என்று நம்பும் வகையில் பேசும் பொய்’ என்று பொருள்.

இதற்கு உதாரணம் தேடி நீங்கள் எங்கும் அலையவே வேண்டாம். தொடர்ந்து வாசியுங்கள்.

திமுக ஆட்சியை அகற்றும்வரை செருப்புப் போடமாட்டேன் என்று நம்ம ஊர்க் கிறுக்கன் அண்ணாமலை சபதம் செய்தது போல,  மோடியின் தீவிர ரசிகனான ராம்பால் காஷ்யப் என்பவன்[ஹரியானாவின் கைதல் மாவட்டத்தைச் சேர்ந்தவன்]. 'மோடி இந்தியாவின் பிரதமரான பிறகு அவரைச் சந்திப்பேன். அப்போதுதான் காலணிகளை அணிவேன்; அதுவரை காலணிகளை அணிய மாட்டேன்" என்று சபதம்[2011இல் சபதம்> 2025வரை>14 ஆண்டுகளாகச் செருப்பணியவில்லை] செய்தானாம்[https://www.vikatan.com].

இவனின் இந்தச் சபதம் ஏற்கத்தக்கதுதான்.

ஆனால்.....

மோடி முதன்முதலாக 2014இல் இந்தியாவின் பிரதமராகப் பதவி ஏற்றபோதே இந்த ‘மெண்டல்’ காலணி அணிந்திருக்கலாம். அல்லது, மோடியால் பாராட்டப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால் அதையும் நிறைவேற்றியிருக்கலாம்{தகவல் தெரிந்ததும் இவரின் வீடு தேடி ஓடிவந்து தன்னுடைய பொற்கரங்களாலேயே[கடவுளால் அனுப்பப்படவரின் கை சாதாரண மனிதக் கையா என்ன?] அவனுக்குக் காலணி அணிவித்திருப்பார்}.

இப்படியான நிகழ்வு ஏதும் நடைபெறவில்லை.

மாறாக.....

2011ஆம் ஆண்டிலிருந்து வெறும் காலுடனேயே இருந்துவந்த இந்த ஆளுக்கு[ராம்பால் காஷ்யப்], ஹரியானவின் யமுனா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட[2025இல்] பிறகு, மோடி புதிய ஷூவை வழங்கி “இனி இதுபோல செய்யக் கூடாது” என்று கண்டித்தாராம்[மனப்பூர்வமாக அல்ல; இம்மாதிரியான அடிமுட்டாள்கள்தானே அவருக்குத் தேவை].

2014இல் நடைபெற வேண்டிய இந்த நிகழ்ச்சி, 11 ஆண்டுகள் காலதாமதமாக 2025இல் இடம்பெற்றுள்ளது.

இந்தக் காலதாமதமே ‘பாஜக’ சங்கிகளின் திட்டமிட்ட நாடகம் இது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது.

மூடநம்பிக்கைகளை வளர்த்தும், அடுக்கடுக்காய் மக்களிடையே இட்டுக்கட்டிய பொய்களைப் பரப்பியும் ஆட்சியைக் கைப்பற்றும் இந்தப் பொய்யர்கள் அரசியல் களத்திலிருந்து விரட்டியடிக்கப்படுவது எப்போது?

* * * * *

https://www.vikatan.com/government-and-politics/modi-criticizes-volunteer-who-went-14-years-without-wearing-shoes