வெள்ளி, 25 ஏப்ரல், 2025

அமித்ஷாஜி அசாத்திய தைரியசாலி! மோடிஜி?!?!

“பிரதமர் மோடி சவுதிப் பயணத்தை முடித்துவிட்டு வேக வேகமாக நாடு திரும்பினார். சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்ட இடத்தை[காஷ்மீர்> பகல்காம்]ப் பார்வையிடுவார்[உள்துறை அமைச்சர் அமித்ஷா அதைச் செய்தார்] என எதிர்பார்த்தோம். ஆனால் அவரோ,

பீகார் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. இந்தத் தாக்குதலைப் பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்துகிறாரோ என்னும் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை” என்று பேசியிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள்.

திருமாவுக்கு எழுகிற சந்தேகம் நமக்கும் எழுகிறது. கூடவே.....

கலவரப் பூமியான மணிப்பூருக்கு ஒரு முறைகூடச் செல்லாத மோடி, 26 அப்பாவிப் பயணிகள் கொடூரமாகக் கொல்லப்பட்ட இடத்திற்கும் செல்லாமலிருப்பது, இவர் ஒரு பெரிய நாட்டை ஆளுவதற்குத் தேவையான மன உறுதி இல்லாதவரோ என்னும் சந்தேகத்தையும் தோற்றுவிக்கிறது![அமித்ஷாவின் மனோதிடம் பாராட்டத்தக்கது. ராகுல் காந்தியும் ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது]

* * * * *

https://www.vikatan.com/government-and-politics/policy/pahalgam-attack-modi-bihar-election-campaign-thirumavalavan

வியாழன், 24 ஏப்ரல், 2025

மோடிஜியிடம் ஒரு வேண்டுகோள்... முதலில் ‘இது’! ‘அது’ அப்புறம்!!

#உலக நாடுகள் மத்தியில் பஹல்காம் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தீவிரவாதிகளைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குத் தண்டனை வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்[https://tamil.abplive.com/news/india/pm-modi-switch-to-english-and-said-will-pursue-pahalgam-terrorists-to-the-ends-of-the-world-222059]#

மோடிஜியின் இந்த ஆவேச அறிவிப்பு அனைத்து இந்தியக் குடிமக்களையும் பேரானந்தத்தில் ஆழ்த்துவதாகும்.

தீவிரவாதிகள் உலகின் எந்தவொரு மூலைமுடுக்கில் இருந்தாலும் கண்டுபிடித்து இழுத்துவரும் வல்லமை படைத்த நம் பிரதமருக்கு, அண்டை நாடான பாகிஸ்தானில் சிறையிலிடப்பட்டுச் சித்ரவதைக்கு உள்ளாகியிருக்கும் நம் எல்லைப் பாதுகாப்புப் படை வீரரை[கீழ்க்காண்பவற்றில் ஒரு காணொலி அதை உறுதிப்படுத்துகிறது] மீட்டுவருவதென்பது மிக மிக மிக எளிது.

நம் பிரதமர் முதலில் இந்த மீட்புப் பணியைச் செய்திடல் வேண்டும் என்பது நம் கோரிக்கை.

கோரிக்கை நிறைவேறும் நாளை வெகு ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறோம்.