ஞாயிறு, 4 மே, 2025

‘பஹல்காம் படுகொலைகள்’... வேண்டாம் வெற்று ஆரவாரம்; வெறிக் கூச்சல்!!!

‘22.04.2025ஆம் நாள் பஹல்காமில்[காஷ்மீர்] தீவிரவாதிகள் தாக்கி 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டது  நிகழ்ந்து 12 நாட்கள் கடந்துவிட்டன.

     [இது சாத்தியமா? சாத்தியம் என்றால் இந்தியாவின் நிலை?]

சம்பவம் நிகழ்ந்த சூட்டோடு இந்த அட்டூழியத்திற்குக் காரணம் பாகிஸ்தானே என்று குற்றம் சாட்டிய நம் இந்திய அரசு அதற்கான உறுதியான ஆதாரங்களை இன்றுவரை கண்டறியவில்லை.

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எத்தனைப்பேர்[மூவர் அல்லது நால்வர் என்பது வெறும் யூகமே] என்பதுகூட அறியப்படவில்லை.

தாக்குதலின் ‘உள்நோக்கம்’ பற்றியும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

இவையெல்லாம் நம் ஒன்றிய அரசின் இயலாமையை வெளிப்படுத்துகின்றன என்று இகழ்ந்துரைப்பது நம் நோக்கமல்ல.

காரணங்கள்.....

கொலைகாரர்களின் திட்டமிடல் அதி புத்திசாலித்தனமானதாக இருக்கலாம்.

அவ்வப்போதோ எப்போதாவதோ தாக்குதல் நடத்துகிறவர்கள் அத்தனைப் பேரையும் கண்டுபிடித்துத் தண்டிப்பது அரசுக்குச் சாத்தியமும் அல்ல.

ஆக, இன்றளவும் 26 பேர் சாவுக்குக் காரணமான கொலைகாரர்கள் கைது செய்யப்படாத நிலையில்.....

தினம் தினம் பாகிஸ்தானைக் கலங்கடிக்கும் வகையில் நம் அரசு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஊடகங்கள் செய்தி[முழுவதும் உண்மையானவை அல்ல] பரப்புவதும், ‘கொலைகாரர்களைக் கூண்டோடு எமனுலகுக்கு அனுப்புவோம்; பாகிஸ்தானை மண்ணோடு மண்ணாக்குவோம்’  என்பன போல் தலைவர்கள் வெற்றுக் கூச்சல் எழுப்புவதும் உண்மையான நாட்டுப் பற்று உள்ளவர்களைக் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன.

“குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க இயன்றவரை முயலுங்கள். வெறும் வெறிப் பேச்சு வேண்டாம்” -இதுவே நம்மை ஆளுவோருக்கு நாம் வழங்கும் பரிந்துரை ஆகும்.

தொடர்புடைய இடுகை:

https://kadavulinkadavul.blogspot.com/2025/05/blog-post.html

சனி, 3 மே, 2025

ஊடக அதர்மங்கள்!!!

ஊடகங்களின் உயிர்நாடிக் கொள்கை ‘நடுநிலை’ பிறழாமல் செய்தி வெளியிடுவது.

பகைவர்களோ நண்பர்களோ அவர்கள் குறித்த செய்திகளை வெளியிடுவதில் ‘தன்னலம்’[தற்சார்பு]தவிர்க்கப்படுதல் மிக முக்கியம்.

தவறினால்.....

வாசகர்கள் உண்மைச் செய்தியை அறிவது சாத்தியப்படாது.

தற்சார்பு, அல்லது தன்னலப் போக்குடன்[‘பாஜக’ ஆதரவு] தமிழில் செய்தி  வெளியிடும் ஊடகங்களில்[தினமலர் உட்பட] தினத்தந்தியும் ஒன்று.

//நாட்டின் இறையாண்மை & பாதுகாப்பிற்காக நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம்” என்று பாகிஸ்தான் ராணுவச் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி கூறியுள்ளார்// என்பது அண்மைச் செய்தி

இதிலுள்ள ‘கூறியுள்ளார்’ என்பதற்குப் பதிலாக, ‘கொக்கரித்துள்ளார்’[எதிரி தவறு செய்தால் திருத்தலாம்.; தீங்கு செய்தால் தண்டிக்கலாம். வீணே வெறுப்பை வளர்ப்பது தேவையற்றது] என்னும் சொல் சேர்த்துச் செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி.

தன்னைத் திருத்திக்கொள்வது தந்திக்கு மட்டுமல்ல, ஊடகத் துறைக்கும் இந்த நாட்டுக்கும் நன்மை பயப்பதாக அமையும்.

                                       *   *   *   *   *

https://www.dailythanthi.com/news/world/you-choose-where-war-starts-well-decide-where-it-ends-dg-ispr-to-india-1155609