சனி, 10 மே, 2025

போர்க்காலக் கவிதை... “பிணங்களை அகற்றுங்கள்”!

வெற்றி! வெற்றி!!

நடந்துமுடிந்த போரில் நாமே வென்றோம்.

நம்  படை வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

“வெற்றி விழா கொண்டாடுவதற்கு முன் 

ஆங்காங்கே

சிதறிக் கிடக்கும் சடலங்களைப் புதையுங்கள்.

தவறினால்

அழுகிய பிண நாற்றம் மூக்கைத் துளைக்கும்.”

வெள்ளி, 9 மே, 2025

இந்தி மட்டுமே அறிந்த ‘ஆதிக்க வெறி’ச் சங்கிகளுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி!!!

நாட்டை ஆளும் ‘பாஜக’ சங்கி அமைச்சர்களில் பெரும்பாலோருக்கு இந்தி மட்டுமே சரளமாகப் பேசவரும்[அறிவியல் மொழியாம் ஆங்கிலத்தையும்  படியுங்கள் என்றால், “அது ஆங்கிலேயனுக்கு நாம் அடிமைகளாய் இருந்ததன் அடையாளம்; இந்தியே நம் தேசிய மொழி என்பார்கள்].

அமைச்சர்களின் நிலையே இதுவென்றால், பிற வடநாட்டவன்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம்[முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் இது குறித்துத் தெளிவான அறிக்கை வெளியிட்டுள்ளார்].

ஆனாலும், இந்த அரைவேக்காடு மொழியைப் புறக்கணிக்கும் தமிழர்கள் மீது[+மலையாளிகள், கன்னடர்கள், வங்காளிகள்] இதைத் திணித்து இவர்களின் தாய்மொழிப் பற்றைச் சிதைத்தழிப்பது இவன்களின் நெடுநாள் கனவு.

தமிழனாய்ப் பிறந்த, தமிழ்நாட்டிலுள்ள இவன்களின் கொத்தடிமைகளில் ஒருவனைத்[வழக்குரைஞனாம்] தூண்டிவிட்டு, ‘தமிழ்நாடு அரசு[+கேரளா, கர்னாடகா, மேற்கு வங்காள அரசுகள்] மும்மொழிக் கொள்கையை ஏற்க உத்தரவிட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவைத்தான்கள்.

இவன்களின் இந்தி வெறிக்குச் சவுக்கடி கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

இது தொடர்பான செய்தி கீழ்க்காணும் காணொலிகளில்.