ஞாயிறு, 8 ஜூன், 2025

கோவை[தெற்கு] ‘பாஜக’காரர்கள் அத்தனைப் பேரும் கன்னடர்களா?!

'தமிழ் எங்கள் உயிர், கன்னடம் எங்கள் தாய்மொழி, கன்னட மொழி விரோதி கமலஹாசன் என்றெல்லாம் குறிப்பிட்டு, அவரை மட்டுமல்லாமல் ‘தி.மு.க’ வையும் கண்டித்துப் ‘பா.ஜ.க’ வினர் கோவையில் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது' என்பது செய்தி[https://tamil.indianexpress.com]

சுவரொட்டி[போஸ்டர்]:


‘கவுடா’என்னும் பெயரே இந்தப் போஸ்டர் அடித்த நபர் கன்னடன் என்பதை உறுதிப்படுத்துகிறது; ‘கன்னடம் எங்கள் தாய்மொழி’[தமிழ் உயிர் மொழியாம். யாரை முட்டாளாக்க?] என்கிறார்.

இவருக்கு[கவுடா]க் ‘கன்னடம்’தான் தாய்மொழி என்பது சொல்லித் தெரிவதில்லை. 

கமல்காசனை மட்டுமல்ல, ‘தி.மு.க.’வையும் கண்டிப்பது இவர் நோக்கம். கண்டிக்கட்டும். அது அவர் ஆசை.

போஸ்டரில் இடம்பெற்றுள்ள, ‘கன்னடம் எங்கள் தாய்மொழி’ என்னும் சொற்றொடரில் உள்ள ‘எங்கள்’ என்னும் ஒரு சொல்தான் நம் நெஞ்சில்  நெருடலை உண்டுபண்ணுகிறது.

அந்த ‘எங்கள்’ கோவை[தெற்கு] ‘பாஜக’ கட்சியினரைத்தான் குறிக்கிறது. ‘கவுடா’விடம் நாம் கேட்க விரும்புவது.....

“கன்னட கவுடரே,

கோவை, தெற்கிலுள்ள அத்தனைப் ‘பாஜக’ காரர்களுமே கன்னடர்கள் என்கிறீரா?”

“ஆம்” என்பதுதான் கன்னடனான உம்முடைய பதிலாக இருக்கமுடியும். 

கவுடாவிடம் மட்டுமல்ல, கோவையிலுள்ள ’பாஜக’ கட்சித் தமிழர்களிடமும் நாம் கேட்க விரும்புவது.....

“தமிழர்களே, கன்னடன் சந்திரசேகர் கவுடா சொல்வதை நீங்கள் ஏற்கிறீர்களா?”

                                      *   *   *   *   *

சனி, 7 ஜூன், 2025

கடும் எச்சரிக்கை... வடக்கன்களுடன் ‘கூட்டு’ தமிழினத்திற்கு ‘வேட்டு’!!!

2026இல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து, தமிழ்நாட்டிலுள்ள ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் முனைப்புடன் களத்தில் இறங்கியுள்ளன.

மற்றக் கட்சிகளுடன் ஒப்பிடும்போது, அதிகாரப் பலத்துடன் அதீதப் பண பலமும்[கோடி கோடி கோடி கோடியோ கோடி] பெற்றுள்ள ‘பாஜக’, ஆளும் ‘தி.மு.க.’வுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் தன்வசப்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறது[இன்று அமித்ஷா தமிழ்நாடு வருவது கட்சித் தலைவர்களுடன் பேரம் பேசுவதற்காகவே].

எதிர்க்கட்சிகளில், பணபலமும் பெருமளவில் தொண்டர் எண்ணிக்கையும் கொண்டது ‘அதிமுக’ என்பது யாவரும் அறிந்ததே.

இக்கட்சி தவிர, ‘பாமக’[அன்புமணி அணி], ‘தேமுதிக’, ‘அமமுக’, ‘தவெக’, 'ஓபிஎஸ்'[ஒற்றை நபர் கட்சி] ஆகியவையும் ‘பாஜக’ அணியில் இணைந்துவிட்டதற்கான அறிவிப்பு.....

தனித்தனியாக இதன் தலைவர்களுடன் அமித்ஷா நடத்தும் ‘பேரம்’ முடிந்தவுடன், சில தினங்களில் வெளியாகக்கூடும்.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, தமிழர் நலனில் பெரிதும் அக்கறைகொண்ட இணைய எழுத்தாளனான நான், மேற்குறிப்பிட்ட கட்சிக்காரர்களை[பாஜக நீங்கலாக] மிகக்  கடுமையாக எச்சரிக்க விரும்புகிறேன்.

‘பாஜக’வினர்[குறிப்பாக, மோடி. அமித்ஷா போன்ற அதன் தலைவர்கள்] இந்தி வெறியும் ஆதிக்க வெறியும் கொண்டவர்கள் என்பது 100% உண்மை[ஏராளமான ஆதாரங்கள் உள்ளன> தளத்தில் இடம்பெற்றுள்ள இந்தித் திணிப்பு குறித்த புள்ளிவிவரப் படம் காண்க].

தன்மானத்திடனும் முழுச் சுதந்திரத்துடனும் வாழ்ந்திட விரும்பும் தமிழர்களை, தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றுவதன் மூலம் அடிமைகளாக்கி, மொழியையும் இனவுணர்வையும் அழித்தொழிப்பதே இவர்களின் திட்டம்[இது வழக்கமாக என் பதிவுகளில் இடம்பெறும் எச்சரிக்கைதான்].

இந்தவொரு திட்டத்துடன்தான் எடப்பாடியார் முதலானவர்களை விலைபேசி நிரந்தர அடிமைகளாக்க இருக்கிறார்கள் மேற்கண்ட ‘பாஜக’ தலைவர்கள்.

இந்த அவலமானதும் ஆபத்தானதுமான சூழ்நிலையில் மேற்கண்ட கட்சியினருக்கு[‘பாஜக’ தவிர] அடியேன் செய்யும் எச்சரிக்கை.....

“பாஜக’வுடன் இணைந்து 2026 தேர்தலில் வென்று, ஆட்சியைக் கைப்பற்றி, அதில் ‘பாஜக’வினருக்கும் பங்களிப்பீர்களேயானால், அது தமிழர்களுக்கு நீங்கள் செய்த மாபெரும் துரோகமாக அமையும். வெற்றியோ தோல்வியோ தமிழின உணர்வுள்ள கட்சிகளோடு மட்டும் இணைந்து போட்டியிடுங்கள்; ‘பாஜக’வின் சூழ்ச்சிக்குப் பலியாகாதீர்கள்!”