வெள்ளி, 20 ஜூன், 2025

மோடிக்குக் கூட்டம் சேர்க்க அரசு விடுமுறை! இந்த நாடு இவரின் ‘பட்டா’ நிலமா?!

//ஆட்சியமைத்த ஒரு வருடம் நிறைவு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று(20.06.2025)ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் செல்கிறார். இதனைத் தொடர்ந்து மதியத்திற்கு மேல் அரை நாள் விடுமுறை அளித்து மாநில அரசு அறிவிப்பு[கூட்ட நெரிசல் காரணமாம். நெரிசல் இல்லாத விடுமுறை நாட்களில் நடத்தலாமே?] வெளியிட்டுள்ளது. 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சாபுவனேஸ்வர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள், வருவாய் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் & அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் 20ஆம் தேதி விடுமறை அளிக்கப்பட்டுள்ளது//[மாலைமலர்].

ஆட்சியமைத்த ஓராண்டு நிறைவு விழாவாம். ‘பைசா’ பயனில்லாத வெற்று ஆடம்பர விழா இது. மோடி பெரிதாக என்ன பேசிவிடப்போகிறார்? வாயால் நிறைய வடை சுடுவார்.

மோடி கலந்துகொள்வதால், பெரிய அளவில் கூட்டத்தைக் கூட்டி[மாணவர்களையும் பல்துறை அலுவலர்களையும் அதிக அளவில் அழைத்துவரலாம்], படம் பிடித்து, “ஆகா, மோடி பேச்சைக் கேட்க இத்தனைக் கூட்டமா?” என்று செய்தி வெளியிட்டு மக்களைப் பிரமிப்பில் ஆழ்த்தி, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவன் என்னும் பிம்பத்தை உருவாக்க உதவும் நடவடிக்கையே இந்த விடுமுறை அறிவிப்பு.

சுயநலமிகள் நாட்டை ஆண்டால் இதுவும் நடக்கும்; இன்னும் என்னவெல்லாமும் நடக்கக்கூடும்!

சனநாயகம் என்னும் பெயரில் ஒரு சர்வாதிகார ஆட்சி இங்கு நடைபறுகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இந்த நாட்டு மக்கள்!

https://www.maalaimalar.com/news/national/pm-visit-odisha-declares-half-day-holiday-in-all-govt-offices-in-bhubaneswar-on-friday-777230

வியாழன், 19 ஜூன், 2025

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உள்துறை அமைச்சர்!!!

முன்னாள் அரசு ஊழியர் ஐஏஎஸ் அசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்' புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அமித்ஷா, "இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் - அத்தகையச் சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை. உறுதியானவர்களால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும். நமது நாட்டின் மொழிகள் நமது கலாச்சாரத்தின் நகைகள் என்று நான் நம்புகிறேன் என்றார்[https://www.news18.com/amp/india/those-who-speak-english-in-country-will-soon-feel-ashamed-amit-shah-ws-l-9393567.html].

உள்துறை அமைச்சர் இப்படிப் பேசியது மனப்பூர்வமானதும் உண்மையானதும் என்றால், இந்தியாவில் பேசப்படும் அத்தனை மாநில மொழிகளையும்[இந்தி அவற்றுள் ஒன்று மட்டுமே] ஆட்சிமொழிகளாக ஆக்கியிருத்தல் வேண்டும்[இன்றைய அறிவியல்&தொழில்நுட்ப வளர்ச்சியில் இது சாத்தியமே].

இவர்[கள்> +மோடி] நடைமுறைப்படுத்தியிருப்பதோ எங்கெங்கு காணினும் இந்தி... இந்தி... இந்தி... இந்தி[+சமஸ்கிருதம்] மட்டுமே!

இத்தனை வஞ்சக நெஞ்சம் கொண்டவர்களின் பிடியிலிருந்து இந்த நாட்டை மீட்டு, மாநில மொழிகளை[தாய்மொழிகள்]க் காப்பது தாய்மொழிப் பற்றும் இனப்பற்றும் கொண்டவர்களின் கடமை ஆகும்.

இந்த உண்மையை அறிந்து உணர்ந்து செயல்படுவார்களா நம் மக்கள்?