ஞாயிறு, 2 நவம்பர், 2025

வடக்கன்களை விரட்டுவதற்கு வழிகாட்டிய மோடி!!!

வயிற்றுப் பிழைப்புக்காகத் தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பீகாரிகளைத் ‘தி.மு.க.’வினர் துன்புறுத்துவதாக மோடி அபாண்டப் பழி சுமத்தியதைத் தமிழ்நாட்டுக் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டித்திருக்கிறார்கள்.

மோடியின் இந்த அண்டப் புளுகு கண்டிக்கத்தக்கது என்றாலும், ஆயிரக்கணக்கில் வந்து குவியும் வடக்கன்களை விரட்டியடிப்பதற்கான வழியறியாமல், விழி பிதுங்கித் தவிக்கும் தமிழர்களுக்கு அவர் வழிகாட்டியிருக்கிறார் என்று உறுதிபடச் சொல்லலாம்.

இந்தப் பொய்யின் மூலம் நடைபெறவுள்ள பீகார்த் தேர்தலில் பீகாரிகளின் வாக்குகளை அள்ளுவதுதான் அவர் நோக்கமே தவிர தமிழ்நாட்டிலுள்ள வடபுலத்துத் தொழிலாளிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் எண்ணமெல்லாம் அவருக்கு இல்லை என்பதால்[இருந்திருந்தால் தமிழ்நாடு அரசின் மீது நடவடிக்கை எடுத்திருப்பார்].....

வடதிசையிலிருந்து வயிற்றுப் பிழைப்புக்காகத் தமிழ்நாடு வருபவர்களை[வருங்காலத்தில் வாக்குரிமை பெற்றுத் தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றுவார்கள்]க் கொஞ்சமும் தயங்காமல் துன்புறுத்துவதற்கு மோடி வழிகாட்டியதோடு, அதற்கு அனுமதியும் வழங்கியிருக்கிறார் என்பது பலரும் அறியாத உண்மை.

வாழ்க மோடி! வளர்க அவரின் உலகளாவிய புகழ்!!

சனி, 1 நவம்பர், 2025

விஜய்க்கு[சாவு 41]க் கண்டனம்! வெங்கடேஸ்வரனுக்கு[சாவு 9]க் காணிக்கையா?!

கரூரில் நடிகர் விஜய் நடத்திய ஊர்வலத்தின்போது, கூட்ட நெரிசலில் முட்டி மோதி, விழுந்து மிதிபட்டு 41 பைத்தியங்கள் உயிரிழந்தன.

அதற்கு எவரெவரெல்லாமோ[பிரபல வலைப்பதிவர் ‘பசி’பரமசிவம் உட்பட!!!] கண்டனம் தெரிவித்து நடிகரை நிந்தித்தார்கள்[தற்கொலைக்குத் தூண்டும் அளவுக்கு].

செய்வதறியாது ஓடி ஒளிந்து, சற்றே மனம் தேறி, பாதிக்கப்பட்டவர்களை அழைத்து அவர்களின் கால்களைக் கண்ணீரால் கழுவி, அவர்கள் ஆறுதல் பெறும் வகையில் நிதியுதவியும் செய்தார் மானுடனான விஜய்.

நேற்று அதே போன்றதொரு அசம்பாவிதம்* நிகழ்ந்துள்ளது.

இந்நாள்வரை எவர் கண்ணுக்குத் தட்டுப்படாதவரான[பொன்னாலும் வைர வைடூரியங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சிலைக்குள் இருப்பவர்] ஸ்ரீகாக்குளம் மாவட்ட காசிபுக்க வெங்கடேஸ்வர சாமி என்பவரைத் தரிசிக்க கூட்டம் கூட்டமாகச் சென்று, நெரிசலில் மிதிபட்டுப் பலர் படுகாயம் அடைந்த நிலையில், 9 பக்தர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்[தப்பிப் பிழைத்தவர்கள் பணக் கட்டுகளை உண்டியலில் காணிக்கையாக்கினார்கள்].

நடிகர் விஜய்க்குக் கண்டனம் தெரிவித்த நீதிமான்களில் எவரொருவரும் வெங்கடேஸ்வரனுக்குக் கண்டனம் தெரிவித்ததாக அறியப்படவில்லை.

நம் கேள்வி:

பக்திமான்களே, இல்லாத சாமி மீது உங்களுக்கு இத்தனைப் பயமா?! நீங்கள் சிந்திக்கக் கற்பது எப்போது?

* * * * *

*https://tamil.news18.com/national/srikakulam-venkateswara-swami-temple-crowd-crush-9-dead-vjr-ws-l-1959061.html -November 01, 2025