செவ்வாய், 30 ஜூன், 2026

‘பராக்கு’ப் பார்க்கும் முதல்வர்! பாவம் தமிழர்கள்!!

கண்களில் அறிவுஜீவிக் களை இல்லை.

எப்போதும் எங்கோ ‘பராக்கு’ப் பார்க்கும் பரிதாபப் பார்வைக்குரியவர்.

நெற்றியில் அழுத்தமாகப் பதிந்த வாழ்க்கை அனுபவ ரேகைகள்? காணோம்.

முற்போக்குச் சிந்தனையாளனுக்குரிய முக பாவனை? ஊஹூம்.

தோற்பினும் அஞ்சாத ‘சிங்கநோக்கு’ சிறிதுமில்லை.

வகை வகையாய்ப் பக்தி வேடம் தரிக்கும் சுயநலப் பிரியர்; போலித் தமிழ்ப் பற்றாளர்.

பதவி நியமனங்களில் தற்சார்பாளர்.

திருவிழாக் கூட்டத்தில் பெற்றோரைத் தவறவிட்ட சிறுவனைப் போன்றது இவரின் முகத்தோற்றம்[நன்றி: எழுத்தாளர் பழ.கருப்பையா].

இவரா தமிழ்நாட்டை ஆளும் தலைவன்?

“ஐயோ பாவம் தமிழினத்தோர்” என்று அனுதாபப்படத் தோன்றுகிறது.

===========

முக்கியக் குறிப்பு: தனிப்பட்ட முறையில், ஜோசப்பை விமர்சிப்பது நாகரிகம் அல்ல; முதல்வர் என்பதாலேயே இந்தப் பதிவாக்கம்.

திங்கள், 29 ஜூன், 2026

அடிவயிற்றில்[குடல் பகுதி] அதிக அளவில் மலம் தேங்கினால்.....?

 இது 53 வயதான ஆஸ்திரேலிய நபர் ஒருவரின் எக்ஸ்-ரே(X-ray) படம். 

கால்கள் செயலிழந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது, ​​அவரது கால்கள் உணர்ச்சியற்றும் குளிர்ந்த நிலையிலும் இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். நோயைக் கண்டறிய எக்ஸ்-ரே எடுத்தபோது, ​​அவரது குடலில் பெருமளவில் மலம் தேங்கியிருப்பது தெரியவந்தது. 

அதனால், ‘வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட அதிகப்படியான உள்-அழுத்தம்['அப்டாமினல் கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம்'> ACS] காரணமாக அவரது உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு, கடுமையான வலியும் கால்கள் செயலிழப்பும் உண்டாயின. கால்களுக்கு ரத்தத்தை விநியோகிக்கும் தமனி அழுத்தப்பட்டதால், அவரது கால்களுக்குத் தேவையான ரத்தம் கிடைக்கவில்லை.....

.....கால்கள் செயலிழந்தது மட்டுமின்றி, வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட அதிகப்படியான அழுத்தத்தால் தேங்கியிருந்த மலம் அவரது சிறுநீரகங்களையும் பாதித்தது’.

மலம் இயற்கையாக வெளியேறாத நிலையில், அறுவைச் சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வாக அமைந்தது. 

மொத்தம் 2 லிட்டர் அளவுள்ள மலம் அகற்றப்பட்டது. அவர் மீண்டும் நடக்கும் நிலையை அடைய, தீவிரச் சிகிச்சைப் பிரிவில்(ICU) 4 நாட்களும், அதன்பின் குணமடைய மேலும் 13 நாட்களும் தேவைப்பட்டன. 

அந்த நோயாளி குறைந்தது ஒரு மாதம்[இரண்டு நாட்களைக் கடந்தாலே மலம் கெட்டுவிட வாய்ப்புள்ளது] மலம் கழிக்காமல் இருந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் மதிப்பிட்டனர்.

                                            ==================

https://www.quora.com/?qv_src=email