கடவுளின் ‘இருப்பு’ குறித்து ஆராய்வதும், மூடநம்பிக்கைகளைச் சாடுவதும், ‘மனிதம்’ போற்றும் படைப்புகளைப் பதிவு செய்வதும் இத்தளத்தின் முதன்மை நோக்கங்கள் ஆகும்.

வியாழன், 9 ஏப்ரல், 2020

அதென்னங்க ‘ரெயின் டான்ஸ்’?!

Rain dance Floor - Picture of Nandanvan Resort, Khanivade ...
இதுதாங்க!!!

சென்னையிலுள்ள சில கிளினிக்குகளில், குறிப்பாக, தி.நகர், கோடம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில்  ஒரு சுத்து வந்தபோது, கருக்கலைப்புக்காக வரும் மணமாகாத இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதை அறிய முடிந்தது என்கிறார் பிரபல வார இதழின் நிருபர்.

இவர்களில் நிறையப்பேர் கல்லூரிப் பெண்களாம். +2 மாணவிகளும் உண்டு.

‘ஏற்றுமதி’ நிறுவனங்களில் பணி செய்யும் பெண்களும் நிறைய வருகிறார்களாம்.

“என் ஃபிரண்டு ரொம்ப நல்லவன்னு நினைச்சிப் பழகினேன். அவனை நம்பி, குளிர்பானம் குடிக்க ஓட்டலுக்குப் போனேன். பானத்தில் மயக்க மருந்து கலந்திருக்கான். எனக்குத் தெரியாம போச்சு. கெடுத்துட்டான். கர்ப்பம் ஆயிட்டேன்” என்றிப்படி விதம் விதமாக நாடகம் ஆடி, தீர விசாரிச்சப்புறம், உடன்பட்டு உடலுறவு வெச்சிக்கிட்டதா உண்மை பேசி, கருக்கலைப்புச் செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கையே அதிகம்” என்கிறார் சென்னையில் கிளினிக் நடத்தும் ஒரு பெண் மருத்துவர்.

அனுபவப்பட்ட தோழியுடன் வந்து, உண்மையைப் போட்டு உடைத்து,  ‘கிளீன்’ செய்துகொண்டு போகிறவர்கள் கணிசமானவர்கள்.

சென்னையில் இதற்கென்றே சில மருத்துவமனைகள் உள்ளனவாம். ஏடகூடமாகக் கேள்விகள் கேட்காமல், கேட்கும் தொகையைக் கொடுத்துவிட்டால் ‘நான்கு’ மணி நேரத்தில் முடித்து அனுப்பிவிடுவார்களாம்.

சில இடங்களில் மருத்துவர் செய்யும் தவறுகளால் கருப்பையை நீக்கும் அவலமும் நிகழ்வதுண்டாம்.

நண்பர்களுடன் சேர்ந்து, ஸ்டார் ஓட்டல்களுக்குப் போய், நைட் பார்ட்டியில் ரெய்ன் டான்ஸ், முக்கால் நிர்வாண டான்ஸ் எல்லாம் ஆடுகிறார்கள் பெண்கள். வெறி ஏறுகிறது. உடலுறவு தவிர்க்க இயலாததாகிறது.

காலம் போகிற போக்கில்.....

இனி கற்பாவது, கருப்பாவது என்கிறார்கள் ‘அது மாதிரி’ விடுதிகளில் பணிபுரியும் ஆட்கள்! 

அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்.

=======================================================================
பழைய ‘குமுதம்’ இதழிலிருந்து தொகுத்தது. நன்றி: குமுதம்