அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 6 நவம்பர், 2020

கடவுளுடன் பேசிய அமெரிக்கப் பூசாரிணி[டிரம்ப் ஆதரவாளர்]!!!

நம் ஊர்களில், இறந்தவர்களின் ஆவிகளுடன் பேசுவதாகக் கதைவிடும் சாமியார்களைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். 

கடவுளைக் கண்டதாகச் சொன்ன சாமியார்களையும்[ராமகிருஷ்ன பரமஹம்சர்] நமக்குத் தெரியும்.

கடவுள் அசரீரியாகப் பேசி அசத்தியதையும், கனவில் வந்து காட்சியளித்ததையும் புராணங்களில் வாசித்து மெய் சிலிர்த்திருக்கிறோம். 

ஆனால், கடவுளிடம் பேசியதாகவோ, கடவுளே தம்மிடம் பேசியதாகவோ எவரும் சொன்னதாக நினைவில்லை.

அமெரிக்கத் தேர்தல் முடிவு குறித்துக் 'கூகுள் செய்தி'யில் தேடிக்கொண்டிருந்தபோது.....

அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆன்மிக ஆலோசகரான ஒரு பெண்[பூசாரிணி], கடவுளே தன்னிடம் தேர்தல் முடிவு குறித்துப் பேசியதாகக் கூறியிருப்பதை வாசித்தறிந்து பிரமித்தேன். அது குறித்த விவரம்:

#"தேவதைகளைக் களமிறக்கிவிட்டேன்... சாத்தான்கள் கதை காலி..." என்று அறிவித்திருக்கிறார் டிரம்ப்பிற்காக வழிபாடு நிகழ்த்திய 'பாவ்லா வைட்' என்னும் அந்தப் பெண்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வெற்றிக்காக அவரின் ஆன்மீக ஆலோசகர் 'பாவ்லா வைட்' நடத்திய வழிபாட்டுக் கூட்டம் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. அதிபர் டிரம்ப் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார். தற்போது நிலவரப்படி 264 வாக்குகளுடன் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

குடியரசுக் கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இந்த நிலையில் டிரம்ப்பின் வெற்றிக்காக அவரின் ஆன்மீக ஆலோசகர் பாவ்லா வைட் நடத்திய வழிபாட்டுக் கூட்டம் பெரிய வைரலாகி உள்ளது.

பாவ்லா வைட் நடத்திய கூட்டத்தின் வீடியோ, இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பாவ்லா வைட், "வெற்றி நம்முடைய பக்கம் இருக்கிறது. வெற்றியின் ஓசை எனக்குக் கேட்கிறது. எல்லாமே வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்று கடவுள் என்னிடம் கூறியுள்ளார்" என்று கூறியிருப்பது அறியத்தக்கது.

வழிபாட்டிற்கு இடையே பாவ்லா வைட் லத்தீன் மொழியில் பேசியதும், வினோதமாக இவர் நடந்து கொண்டதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்புடன் பல மேடைகளில் காணப்பட்டார். டிரம்ப் பிரச்சாரம் செய்த பல மேடைகளில் பாவ்லா வைட் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது{By Shyamsundar,  Published: Thursday, November 5, 2020, 13:17 [IST]} .

தேர்தலில், டிரம்ப் தோல்வியின் விளிம்பைத் தொட்டுக்கொண்டிருப்பதாக ஊடகங்கள் அறிவித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், கடவுளோ டிரம்ப் வெற்றி பெறப்போவதாக 'பாவ்லா வைட்'டிடம் சொல்லித் தொலைத்துவிட்டார்.

பாவம் கடவுள்!!!
=================================================================

https://tamil.oneindia.com/news/new-york/us-presidential-election-2020-trump-spiritual-advisor-paula-white-bizarre-prayer-went-viral/articlecontent-pf498406-402296.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky