ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்களும், ‘பிரபஞ்சத்தில் கடுமையான குளிர் நிலவும், அந்தக் குளிரினால் மொத்தப் பிரபஞ்சமும் உறைந்துபோய் அழிவைs சந்திக்கும்[6-10 பில்லியன் ஆண்டுகளில்> நாம் பிறந்து பிறந்து பிறந்து வாழ்ந்துகொண்டே இருந்தால் அழிவை வேடிக்கை பார்க்கலாம். ஹி... ஹி... ஹி!!!]” என்றுதான் கணித்திருக்கிறார்களாம்.
“கோள்களின் எரிபொருள் தீர்ந்து அவை வெறும் இருள் மண்டலங்களாய் மாறுவதால் அழிவு ஏற்படலாம்” என்றும் அறிவியலாளர்கள் அச்சுறுத்துகிறார்கள்.
ஹாவ்கிங் கதிர்வீச்சுக் கருதுகோளின்படி, "கருந்துளைகளும், கேலக்ஸியும் ஆவியாகத் தொடங்கும். இதன் விளைவாக, பிரபஞ்சம் சடப்பொருளாக மாறும். இதன் அடர்த்தி அதிகமாகி, வெப்பம் அதிகரித்து எல்லாமே அழியும்”.
ஆக, பிரபஞ்ச அழிவுக்கு, பெரிய உறைவு(big freeze); பெரிய உடைவு(big crunch); பெரிய உதறல்(big rip); வெற்றிட அதீத ஸ்திரத்தன்மை(vacum metastability); வெப்ப இறப்பு(heat death) என்று பல காரணங்கள் கூறப்படும் நிலையில், பிரபஞ்ச அழிவு தவிர்க்கவே இயலாதது என்றே அறிவியலாளர்கள் கணிக்கிறார்கள்/அனுமானிக்கிறார்கள் என்பது உறுதி.
நம் கவலை.....
ஒட்டுமொத்தப் பிரபஞ்சமே ஒரு காலக்கட்டத்தில் அழியும் என்றால், பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மனித இனமும் அழியும் என்பதில் எள் முனையளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.
மனித இனம் முற்றிலுமாய் அழிவது உறுதியாகிவிட்ட அவலச் சூழலில்.....
இந்த இனம் இருக்கும்வரை நோய்கள், வறுமை, சூதுவாது, வஞ்சகம், போட்டி, பொறாமை போன்றவற்றிலிருந்து விடுபட்டு மன நிம்மதியுடன் வாழ்வதற்கும், நாடுகளின் ஆதிக்கப் போட்டியால் ஏற்படும் பேரழிவுகளைத் தடுப்பதற்குமான வழிகளைக் கண்டறிவதைத் தவிர்த்து, சந்திரன் செவ்வாய் புதன் சுக்கிரன் என்று பிற கோள்களில் குடியேறியும் விண்கலங்களில் தங்கியும் சொகுசாக வாழலாம் என்று சொல்கிறார்கள் அறிவியலாளர்கள்.
அங்கெல்லாம் செயற்கைக் கோள்களையும் ஆட்களையும் அனுப்பி, அதி தீவிர ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.
நாம் இருந்துகொண்டிருக்கும் பூமியைத் தூய்மைப்படுத்துவதைத் தவிர்த்து, ஆராய்ச்சி என்னும் பெயரில் அண்டவெளிக் கோள்களைத் தேடி அலைவது அறிவீனம் ஆகும்.
இனியேனும் ‘பிரபஞ்ச அழிவு’ குறித்த ஆராய்ச்சிகளைத் தவிர்த்து, மனித இனம் உள்ளவரை அமைதியாக வாழ்வதற்கான ஆராய்ச்சிகளில் மட்டுமே அறிவியலாளர்கள் ஈடுபடுதல் வேண்டும் என்பது நம் விருப்பம்; அவர்களிடம் வைக்கும் தலையாய வேண்டுகோளும்கூட!
https://tamil.boldsky.com/insync/pulse/2015/how-will-the-universe-end-008438.html
