நம்தமிழ் நாட்டிலோர் நடிகன் -அவன்
நாலெட்டு[32] மாதமாய் மக்களைக் கெஞ்சி
கொண்டு வந்தான்தன் ஆட்சியை -தினமும்
கூத்தாடிக் கூத்தாடி வீணாக்கினான்டி
['தவெக' தொடக்கம் பிப்ரவரி 2, 2024]
இப்பாடல் கீழ்க்காணும் பழம்பாடலை[கடுவெளிச் சித்தர்] அடியொற்றி வடிவமைக்கப்பட்டது.
"நந்த வனத்திலோர் ஆண்டி - அவன்
நாலாறு(10) மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தான்டி"
அறிவிப்பு: பயனுண்டோ இல்லையோ இடைத்தேர்தல்வரை, கூத்தாடி குறித்த இடுகைகள் வெளியாவது தொடரக்கூடும்.
