முதல் தடுப்பு ஊசி, வைரஸை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை உடம்புக்குக் கற்பிக்கிறது.
ஊசி போடும் இடத்தில் வலி, புண், விறைப்பு, லேசான காய்ச்சல் அனைத்தும் முதல் முறையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் எதிர்பார்க்கப்படும் அறிகுறிகளாக இருக்கலாம்.
2ஆவது தடுப்பூசிக்குப் பிறகு.....
சோர்வு, குமட்டல், தலைவலி போன்றவை அதிகமாக இருக்கலாம். இளம் வயதினருக்கும், பெண்களுக்கும் பாதிப்புகள் அதிகமாக இருந்திட வாய்ப்புகள் அதிகம். அதிகமான பக்க விளைவுகளின்போது செல்கள் அதிக ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன என்பது அறியத்தக்கது.
பக்க விளைவுகள் நீடிக்கும் கால அளவு:
பக்க விளைவுகள் தடுப்பூசி பெற்ற பிறகு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு இருக்கும். பின்னர் அவை தாமாகவே மறைந்துவிடும் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
பக்க விளைவுகள் என்பது அவசியமான ஒன்றல்ல; சிலரை அவை பாதிப்பதில்லை.
பக்க விளைவுகளே இல்லையென்றால், தடுப்பூசி வேலை செய்யவில்லை என்று கருத வேண்டியதில்லை. ஊசியின் செயல்பாடுகள் இயல்பானதாகவே இருக்கும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

