வியாழன், 12 பிப்ரவரி, 2026

“ஜனகணமன...” -இது தேசத்தைப் போற்றும் கீதமா, தெய்வத்தைத் துதி பாடும் பாடலா?

//ரவீந்திரநாத் தாகூர் எழுதிய "ஜன கண மன... " இந்தியாவின் தேசியக் கீதமாகும். இது மக்களின் மனதில் ஆட்சி செய்பவரும், பாரதத்தின் தலையெழுத்தை நிர்ணயிப்பவருமான இறைவனைப் போற்றுகிறது. 1950-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட இது, பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டியம், திராவிடம் (தென்னிந்தியா), ஒரிசா மற்றும் வங்காளம் ஆகிய பகுதிகளைக் குறிப்பிட்டு, இந்தியாவின் பன்முகத்தன்மையை வலியுறுத்துகிறது// -விக்கிப்பீடியா.

//ஜன கண மன - தேசிய கீதத்தின் தமிழ் அர்த்தம் (பொருள்):

ஜன-கன-மன-அதிநாயக ஜய ஹே: இந்திய மக்களின் மனதை ஆட்சி செய்யும் தலைவா உனக்கு வெற்றி!

பாரத-பாக்ய-விதாதா: பாரதத்தின் (இந்தியாவின்) நல்விதியை நிர்ணயிப்பவனே!

பஞ்சாப-சிந்து-குஜராத-மராட்டா-திராவிட-உத்கல-வங்க: பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டியம், தென்னிந்தியப் பகுதிகள், ஒரிசா மற்றும் வங்காளம்[உன்னைப் போற்றுகின்றன]. 

விந்திய-ஹிமாசல-யமுனா-கங்கா: விந்திய மலைகள், இமயமலைகள், யமுனை & கங்கை நதிகள்(உன்னைப் போற்றுகின்றன).

உச்சல-ஜலதி-தரங்கா: அலைகளை எழுப்பும் இந்தியப் பெருங்கடல் (உன்னைப் போற்றுகிறது).

தவ சுப நாமே ஜாகே: உனது மங்களகரமான பெயரைக் கேட்டு, அனைவரும் விழித்தெழுகின்றனர்.

தவ சுப ஆசிஷ மாகே: உனது மங்களகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றனர்.

காஹே தவ ஜய காதா: உனது வெற்றியைப் பாடுகின்றனர்.

ஜன-கன-மங்கலதாயக ஜய ஹே: மக்களின் நல்வாழ்வை அருள்பவனே, உனக்கு வெற்றி!

பாரத-பாக்ய-விதாதா: பாரதத்தின் விதியை நிர்ணயிப்பவனே, உனக்கு வெற்றி!

ஜய ஹே, ஜய ஹே, ஜய ஹே: வெற்றி! வெற்றி! வெற்றி!
  • ஜய ஜய ஜய, ஜய ஹே: வெற்றி, வெற்றி, வெற்றி, உனக்கு வெற்றி!// -விக்கிப்பீடியா.
***சிவப்பு வண்ணத்தில் உள்ள அத்தனைச் சொற்களும் சொற்றொடர்களும் கடவுளைக் குறிக்கின்றன. இந்நிலையில், நம் தேசிக் கீதம் போற்றுவது நம் தேசத்தை அல்ல, அவரை[கடவுள்] மட்டுமே என்று சொல்லலாமா?என்னும் கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

பதில்:
“மொழியாக்கம் செய்த கூகுளாருக்கு நன்றி!”[ஹி... ஹி... ஹி!!!]             

புதன், 11 பிப்ரவரி, 2026

“கடவுளை மற; மனிதனை நினை”... தேவை நினைவுகூர்தல் தினம்!

முதியோர் தினம், மகளிர் தினம், தந்தையர் தினம், அன்னையர் தினம், காதலர் தினம், காமுகர் தினம்[ஹி...ஹி...ஹி!] என்றெல்லாம் உலகளவில் சிறப்பு ‘நினைவுகூர்தல்’ தினங்கள் கொண்டாடப்படுகின்றன.

இவற்றோடு, ‘கடவுளை மற. மனிதனை நினை’ தினமும் கொண்டாடப்படுதல் வேண்டும்.

நிரூபிக்கவே இயலாத கடவுளைப் பற்றிச் சிந்தித்ததால் ஆன்மிகம் போற்றும் மதங்கள்[விதிவிலக்கானவை உள] பல தோன்றின. கருத்து வேறுபாடுகள் காரணமாக அவற்றிடையே மோதல்கள் நிகழ்ந்தன; போர்கள் வெடித்தன; உலகம் பெரும் பெரும் அழிவுகளை எதிர்கொண்டது.

சுருங்கச் சொன்னால், கடவுளைப் போற்றும் மதங்களால் விளைந்த நன்மைகளைக் காட்டிலும் நேர்ந்த தீமைகள் மிக மிக மிக அதிகம். இதைக் கருத்தில் கொண்டுதான் பெரியார், “கடவுளை மற; மனிதனை நினை” என்றார்.

ஆண்டுதோறும், பல மூடநம்பிக்கைகளுக்குக் காரணமான  கடவுளை மறந்து, ‘கடவுளை மற. மனிதனை நினை’ தினம் கொண்டாடப்பட்டால்.....

மனிதப் பண்பு சிறக்கும். சாதி, மதம், இனம், மொழி போன்றவற்றால் உருவாகும் வேறுபாடுகள் மறையும். மக்களிடையே மோதல்கள் இல்லை; போர்கள் இல்லை; பேரழிவுகளும் இல்லை என்னும் நிலை உருவாகும்.

சுருங்கச் சொன்னால்.....

மனிதர்கள் மனிதர்களுக்காகவே வாழ்வார்கள்[பிற உயிர்களுக்கு உதவுவதும் நிகழும்].

மனிதர்கள் மனிதர்களுக்காகவே வாழும் காலம் வருமா?

‘வரும்’ என்று நம்புவோம்.