திங்கள், 13 மே, 2024

ஆன்லைனில் [திரு]அண்ணாமலையாரின் திவ்வியத் தரிசனம்?

அண்ணாமலையார் கோயிலுக்குக்[திருவண்ணாமலை] குடும்பத்துடன் திடீர்ப் பயணம் மேற்கொண்டேன்; முதல் முறைப் பயணமும்கூட.

முட்டி மோதி, நெருக்கியடித்து வரிசைகளில் அண்ணாமலையாரைத் தரிசிக்க அங்குலம் அங்குலமாக நகரும் பக்தர்கள் கூட்டம் என் மனதை நெருடியது. அழுகிற, எதற்கோ அடம்பிடிக்கிற குழந்தைகளைச் சுமப்பவர்கள் வேறு. கணிசமான அளவில் சிறுசுகளும் பெருசுகளும்.


கண்ணில்பட்ட அத்தனை முகங்களுமே, “இத்தனைக் கூட்டமா?” என்று மலையளவுக்குக் கவலையைப் பிரதிபலித்தன. “எப்படியும் ஆண்டவனைத் தரிக்கத்தானே போகிறோம்” என்று அவர்கள் தங்களைத் தாங்களே ஆற்றுப்படுத்திக்கொள்வதையும் உணரமுடிந்தது.


பிரபலமான கோயில் என்றால் இந்தச் சிரமங்கள் தவிர்க்க இயலாதவைதான். ஆனாலும், புதிய நடைமுறைகளைக் கையாள்வதன் மூலம் இவற்றைப் பெருமளவில் குறைக்கலாமே என்று எண்ணினேன்.


அதிக அளவில் நோயாளிகளை எதிர்கொள்ளும் மருத்துவர்கள் பலரும், இணையம் வழியாக ‘முன் பதிவு செய்தல்[Appointment] முறையைக் கையாளுகிறார்களே, அதைப் பிரபலக் கோயில்[திருப்பதி, பழனி, திருவண்ணாமலை, சபரிமலை போன்றவை] நிர்வாகங்கள் பின்பற்றினால் என்ன என்றொரு கேள்வி என்னுள் முகிழ்த்தது.


நோயின் தாக்கத்தைப் பொருத்து, உரிய அவகாசத்துடன் நோயாளிக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்கிறார்; நோயாளியும் பயனடைகிறார்[பெரும்பாலும்?]. 


கடவுளைத் தரிசிக்கவரும் பக்தரும் நோயாளிதான்; அதாவது மனநோயாளி. தான் நாடிவந்த சாமியைத் தரிசித்துச் செல்ல அவர் படும் தொல்லைகள் அளப்பரியன.


கோயில் நிர்வாகத்திடம், முன்கூட்டித் தரிசனத்திற்கான நேரத்தைப் பக்தர்கள் அறிந்துகொள்ளும் முறை[சந்திப்பு நேரம்>Appointment] பின்பற்றப்பட்டால், சிரமமின்றிச் அவர்கள் சாமியைத் தரிசித்துச் செல்வது சாத்தியப்படும்.


இம்முறை மூலம், ஒரு பக்தர் குறைந்தபட்சம் அரை நிமிடமாவது சாமியைத் தரிசித்து இன்புறலாம்.


தரிசனத்துக்கான நேரத்தை அதிகாலை முதல் இரவு பத்து மணிவரை என்று வரையறுத்தால் ஒரு நாளில் சில ஆயிரம் பேராவது[நடைமுறைப்படுத்தும்போது சரியான எண்ணிக்கை தெரியும்; குறைகளையும் சரி செய்யலாம்] பயனடைவார்கள்.


விசேட நாட்களில், முழு இரவும் பக்தர்களை அனுமதிக்கலாம்.


கோயிலிலும், ஊடகங்களிலும் உரிய முறையில் அறிவிப்புச் செய்வதன் மூலம் இந்த முறையைப் பக்தர்களுக்குப் பழக்கப்படுத்துவது எளிதானதுதான்.


முன்பதிவு செய்யாமல் வருவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கோயில் மண்டபங்களில் காணொலித் திரைகளில் சாமியைக் கண்டு தரிசிக்க ஏற்பாடு செய்தால் பின்னர் அவர்களும் முன்பதிவு முறையைப் பின்பற்றுவார்கள்.


ஒரு தற்காலிகப் பக்தனின்[பச்சோந்தி] இந்தப் பரிந்துரையைப் பிரபலக் கோயில் நிர்வாகிகள் பரிசீலிப்பார்களா?

                                      *   *   *   *   *

[அடியேனின் நெற்றிதான்! ஹி... ஹி... ஹி!!!]
* * * * *

*****சற்றே குறைவான கருத்துப் பகிர்வுடன் பின்வரும் காணொலி[யூடியூப்] வெளியிடப்பட்டுள்ளது.


காணொலி:


சனி, 11 மே, 2024

விஞ்ஞானிகளை மருட்டும் ஓர் அஞ்ஞானி!!!

பிரபஞ்சம்[கோள்களையும் நட்சத்திரங்களையும் பிறவற்றையும் உள்ளடக்கியது] என்பது ஒரு புள்ளியிலிருந்து ஒரு பெரிய பெருவெடிப்பின் மூலம் உருவாயிற்று’ என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அன்றிலிருந்து இது விரிவடைந்துவருகிறதாம்.

இது விரிவடைகிறது என்றால், இதற்கு ‘விளிம்பு’ இருந்தாக
வேண்டும்.

விளிம்புக்கு அப்பால் எதுவும் இருப்பது உறுதி. அந்த ‘எதுவும்’ எப்படியிருக்கும்?

எதுவும் இல்லை என்றால், விளிம்புக்கு அப்பால் இருப்பது வெற்றிடமா?TheSimplySpace> ஆங்கில மூலம் கீழே*** இடம்பெற்றுள்ளது.

நம் சந்தேகம்:

‘விளிம்பு’ம், அதற்கு அப்பால் ‘எதுவும்’ இருந்தாக வேண்டும் என்பது வெறும் அனுமானங்களே; ஆதாரங்கள் இல்லை[விரிவடைவதால் விளிம்பு இருந்தாக வேண்டும் என்று நம்புகிறார்கள்].

இந்நிலையில்.....

“தோற்றம், விரிவடைதல், விளிம்பு, எல்லை, கனபரிமானம் என்று எந்தவொன்றும் தேவைப்படாமல், எக்காலத்தும் பிரபஞ்சம் இருந்துகொண்டே இருக்கிறது. இதனுள்ளேதான் பெரு வெடிப்பு, சிறு வெடிப்பு நிகழ்வுகள் எல்லாம்” என்று சொல்லத் தோன்றுகிறது நமக்கு.

அறிவியல் ஆதாரம் ஏதுமற்ற அனுமானம் இதுவாகும்.

போதிய அளவுக்கு அறிவியல் கற்கவில்லையே என்னும் ஆதங்கத்தின் வெளிப்பாடு இது.

“அன்பு கொண்டு வாசித்து நகருங்கள்; நகைக்க வேண்டாம்” என்பது அடியேனின் அன்பான வேண்டுகோள்!

அடுத்து இடம்பெறுவது இது தொடர்பானதொரு பழைய என் பதிவுக்கான சுட்டி> https://kadavulinkadavul.blogspot.com/2019/01/blog-post_5.html <பொழுது போகவில்லையென்றால் வாசியுங்கள்.

+ + + + +

***

placeholderTheSimplySpace

3mo

What Is beyond the Edge of the Universe?

Everything supposedly began with a huge Big Bang and our universe has been


expanding ever since. But what is beyond the edge of the universe? If everything


originated from a point that is now expanding, there must be an edge to the


universe - and if there is an edge, there must logically be something beyond it.


Science provides some exciting approaches to bring us closer to the ultimate end


of our world and the afterlife - but which one is right?