புதன், 14 அக்டோபர், 2026

தெலுங்கன்[ஜோசப்] தெலுங்கில் பேசியதை ஊதிப்பெருக்கும் ஊடகங்கள்!!!

 தமிழ்நாடு முதல்வர் ஜோசப் தெலுங்கன்ர்[இவரின் தாய்மொழி தெலுங்கு> தாய் ஆந்திரா மாநிலத்தவர்] என்பது உலகறிந்த உண்மை.

ஜோசப்புக்கு ஒத்தூதும் பல ஊடகங்கள், ‘முதல்வர் தெலுங்கில் பேசி ஆந்திராவை அதிரச் செய்தார்; ஆந்திரா மக்களை ஆனந்த வெள்ளத்தில் முக்கித் திக்குமுக்காடச் செய்தார்’ என்பன போல் செய்திகள் வெளியிட்டுத் தங்களின் விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கின்றன.


ஜோசப்புக்கு, மக்களிடையேயான செல்வாக்கை அதிகரிப்பதற்காகத் தமிழ் தவிர, தெலுங்கு, இந்தி என்று இந்தியாவின் அத்தனை மொழிகளுமே[நடித்துச் சம்பாதிப்பதற்கும் அவை பயன்பட்டன]  அவசியமானவைதான். தமிழ்நாட்டில் அரசியல்[ஆட்சி] செய்வதால் தமிழில் பேசுவது தவிர்க்கவே இயலாதது.


இந்நிலையில், ‘ஜோசப் தமிழைத் தன் உயிரினும் மேலாக நேசிப்பவர்; தமிழினத்தின் மேம்பாட்டுக்காகத் தன்னையே அர்ப்பணித்தவர்’ என்பன போன்ற, தற்குறிகளின் பொய்யான பரப்புரையை இனியும் தமிழர்கள் நம்புவார்களேயானால்.....


இவர்களின் ‘தமிழன்’ என்னும் தன்மான உணர்வைத் தக்கவைப்பது ஸ்டாலின், எடப்பாடியார், தினகரன், சீமான் என்று தமிழினத் தலைவர்கள் அத்தனைப்பேரும் இணைந்து போராடினாலும் சாத்தியப்படாது!


தன்மானத்தை இழந்தால் இவர்கள், ஜோசப்[வருங்காலப் பிரதமர்?] தவிர மோடி[பாஜக], ராகுல்[காங்கிரஸ்] என்று எவருக்கு வேண்டுமானாலும் நிரந்தர அடிமைகளாக ஆகலாம்!!

செவ்வாய், 13 அக்டோபர், 2026

ஜோசப் ஜட்டி & பனியனுடன் சட்டமன்றம் வருவாரா? செங்கோட்டையனிடம் கேளுங்கள்!

முதலமைச்சர் ஜோசப் “பட்டு வேட்டி & சட்டையில் வருவது ஏன்?” என்று நிருபர்கள் கேள்வி கேட்டார்களாம்[யாரிடம் என்பது பற்றி அவரின் ‘ஊதுகுழல்’ தினத்தந்தி குறிப்பிடவில்லை].

அக்கேள்விக்கு ஜோசப்பின் ஆயுட்கால அடிமையும் கூன் முதுகருமான[ஜோசப்பைக் காணும்போதெல்லாம் குனிந்து குனிந்து குனிந்து கும்பிடுபோட்டதில் நிமிரவே இயாத அவல நிலை ஏற்பட்டது] அமைச்சர் செங்கோட்டையன்[தாமாக முன்வந்து] அளித்த பதில்:

“முதல்-அமைச்சர் விஜய் வெள்ளிக்கிழமை மட்டுமே பட்டு வேட்டி, சட்டையில் வருவார்[கேள்விக்கு உரிய பதில் அல்ல]. மற்ற நாட்களில் சாதாரணமாகத்தான் வருவார்.”

முதலமைச்சர் ஜோசப் ஜட்டி & பனியனுடன்[கீழ்த்தரமான கேள்வி தவிர்க்கப்பட்டது] எப்போது சட்டமன்றத்திற்கு வருவார்? ஒரு நாளில் எத்தனை தடவை அவர் ‘ஒன்னுக்கு’ப் போகிறார்? என்பன போல நீங்கள் கேட்கும் எந்தவொரு கேள்விக்கும் செங்கோட்டையனார் பதில் தருவார்.


கேளுங்கள்.


https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-chief-minister-vijay-appear-in-a-silk-dhoti-and-shirt-minister-sengottaiyan-responds