மோடி | பக்தி | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மோடி | பக்தி | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

'சப்கா சாத், சப்கா விகாஸ்'... “இந்த மந்திரம் நம் நாட்டின் கொள்கை” -மோடி!!!

வெள்ளிக்கிழமையன்று தனது பயணத்தின்போது, ​​பிரதமர் மோடி இசாகரில் உள்ள ஸ்ரீ பரமஹன்ஸ் அத்வைத் மந்திர் மற்றும் குருஜி மகாராஜ் கோவிலில் பிரார்த்தனை செய்தார்[ஊடகச் செய்தி].

மோடி இந்த இடத்தை, “அழியாத ஞானத்தை வெளிப்படுத்தும் ஆன்மீக மையம்” என்றார்.

மந்திரில் இருப்பதை உண்மையிலேயே பாக்கியமாக உணர்கிறேன்” என்றும் பெருமிதப்பட்டிருக்கிறார்[இந்த நாட்டின் பிரதமராக இருப்பதை அவர் பாக்கியமாகக் கருதவில்லை?]

அவர் கோயில் வளாகத்தையும் சுற்றிப் பார்த்தார்.

“ஸ்ரீ பரமஹன்ஸ் அத்வைத் மடத்துடன் தொடர்புடைய அனைவரும் ஆன்மீகப் பாரம்பரியத்தை வளர்ப்பதற்குப் பங்களித்துள்ளனர்” என்று மடத்துடன் தொடர்புடையவர்களைப் பாராட்டினார்.

ஆனந்த்பூர் தாமில் நிறுவப்பட்ட தியானத்தின் ஐந்து வழிகாட்டும் கொள்கைகளை[தியானமாம். அதில் ஐந்து கொள்கைகளாம். நம்புங்கய்யா]ப் பற்றி அவர் பேசினார்.

இந்த இடத்துடன் தொடர்புடைய துறவிகள் மற்றும் முனிவர்களின் போதனைகளையும் மரபுகளையும் பிரதமர் பாராட்டினார்.

"நமது இந்தியா, நமது சமூகம், ஒரு கடினமான கட்டத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம், இந்தப் பூமிக்கு வந்து[இவர் கடவுளால் அனுப்பப்பட்டு இங்கு வந்தது போல்] சமூகத்திற்கு ஒரு புதிய திசையை[???] வழங்குகிறார்கள்" என்று அவர் கூறியிருக்கிறார்.

"'சப்கா சாத், சப்கா விகாஸ்' என்ற மந்திரம்... எங்கள் அரசாங்கத்தின் கொள்கை[!?!?!]" என்று உலகறியப் பறைசாற்றியிருக்கிறார்.

ஒரு ‘மந்திரம்’ ஒரு பெரிய நாட்டிற்கான கொள்கையா?

ஒரு மந்திரத்தை நாட்டின் கொள்கையாக அறிவித்த முதல் பிரதமர் உலகில் இவராகத்தான் இருக்கமுடியும்.

இந்த நாட்டின் கதி?!

திங்கள், 6 மே, 2024

வாய்விட்டுச் சிரிக்கலாம்... மோடி அனுமதித்தால்!

யிர் வாழ்வதற்குப் போதுமான அளவு உணவு தேவை. சிறப்பாகச் செயல்படுவதற்கு நல்ல உடலமைப்பும், ஆழ்ந்து சிந்திப்பதற்கு முழு வளர்ச்சி பெற்ற மூளையும் தேவை.

மூளை இல்லையேல் சிந்திப்பது மட்டுமல்ல, உடம்பின் இயக்கம் முழுமையாகத் தடைப்படும்.

மனிதர்கள் என்றில்லை, கோடானுகோடி உயிர்களின் இயக்கத்திற்கும் மூளையே முழு ஆதாரம் என்று சொல்லலாம்[விதிவிலக்குகள் இருக்கக்கூடும்].

பிரபஞ்சத்திலுள்ள பொருள்களையும் உயிர்களையும் கடவுள்தான் படைத்தார் என்று கொண்டாலும், மனிதர் உட்பட ஒவ்வோர் உயிரும் தன்னிச்சையாகச் செயல்படும் வகையில்தான் அவர் படைத்திருத்தல் வேண்டும்.

குறைந்தபட்ச உணவுகூட இல்லாமல் நாம் பட்டினி கிடந்தால், சிந்திப்பது உட்பட நாம் இயங்குவது முற்றிலுமாய்த் தடைப்படுமே தவிர, “ஐயோ பாவம்” என்று இரக்கப்பட்டு, ஆவி வடிவில் அல்லது கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஓர் உருவில் நம் உடம்பில் ஒட்டிக்கொண்டு, நாம் உண்ணும்போதும் உறங்கும்போதும் உடலுறவு கொள்ளும்போதும்[ஹி... ஹி... ஹி!!!] கடவுள் நம்மைக் கண்காணித்து இயக்குவதெல்லாம் இல்லை; இல்லவே இல்லை.

உண்மை இதுவாக இருக்க, நம் பிரதமர் மோடி அவர்கள்,  பிரபல நாளேடான ‘ஈநாடு’ பத்திரிகைக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், உலகின் சூப்பர் பவராக இந்தியாவை மாற்ற ஏதோ ஒரு தெய்வீகச் சக்தி தன்னை இயக்குவதை அடிக்கடி உணர்வதாகச் சொல்லியிருக்கிறார்.


மோடியின் இந்தக் கூற்று நம்மை வாய்விட்டுச் சிரிக்கத் தூண்டுகிறது. மோடி அனுமதித்தால்.....

சிரிக்கலாம்... சிரிக்கலாம்... வாய்விட்டுச் சிரித்துக்கொண்டே இருக்கலாம்!

                                         *   *   *   *   *

https://www.etvbharat.com/ta/!bharat/divine-power-working-through-me-in-helping-india-become-a-superpower-says-pm-narendra-modi-tns24050503662