நான்.....

எனது படம்
ஒரு பிரபலமான நடிகனாக மக்களில் கணிசமானவர்களின் ஆதரவைப் பெற்றிருந்த விஜய், தேர்தல் பரப்புரையில் ‘ஜோசப்’ஐ மறைத்தார்[சான்றிதழில்> ஜோசப் விஜய்?]. வெற்றிபெற்று முதல்வர் ஆனதில் எவ்விதத் தவறும் இல்லை. முதல்வர் ஆன பிறகும் ‘விஜய்’ ஆகவே தன்னை முன்னிலைப்படுத்தியிருத்தல் வேண்டும். மாறாக, பெயருடன் ‘ஜோசப்’ சேர்த்துத் தன்னை ஒரு கிறிஸ்தவனாக அடையாளப்படுத்தியதோடு, சட்டமன்றத்திலேயே தன் மதத்தவரான சபாநாயகரையும் அமைச்சரையும் அதை உயர்த்திப் பேச அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது. தீவிர இந்துமதப் பற்றாளர் பிரதமர் மோடி இதைக் கண்டுகொள்ளாமலிருப்பது ஜோசப்பின் அதிர்ஷ்டம்[நல்வாய்ப்பு]. தான் செய்யும் குற்றங்களை, தன் மீது தீராத மயக்கம்கொண்ட வாக்காளர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் என்னும் ஜோசப்பின் நம்பிக்கையும் காரணமாக இருக்கலாம்.

வியாழன், 2 பிப்ரவரி, 2023

‘பாஜக’வின் சூழ்ச்சிக்குப் பலியாவாரா ‘ஓபிஎஸ்’?!

ரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தன்னுடைய அணியின் வேட்பாளரை அறிவித்ததோடு, ‘ஓபிஎஸ்’, “பாஜக சார்பில் நல்லவேட்பாளர் நிறுத்தப்பட்டால், எங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவோம்” என்று கூறி, தான் ‘பாஜக’ எஜமானர்களுக்கு ஊதியம் இல்லாத முழுநேர அடிமை என்பதைப் பறையறைந்து சொல்லியிருக்கிறார்.

பாஜக போட்டியிடவில்லை என்றால், நிச்சயம் எங்களின் வேட்பாளர் போட்டியிடுவார் என்றும் தெரிவித்திருக்கிறார்.


வேட்பாளர் செந்தில் முருகன் லண்டனில் எம்பிஏ படித்தவர் என்பதால், அவருக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் நம்புகிறார்.


பாவம் ‘ஓபிஎஸ்’! அவரின் ‘நம்பிக்கை பலிப்பதற்கு வாய்ப்பே இல்லை.

'பாஜக'வினர் தங்கள் சார்பாக வேட்பாளரை நிறுத்தப்போவதுமில்லை; இவருடைய வேட்பாளரை ஆதரிக்கப்போவதும் இல்லை.

“2024இல் தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு இப்போதிருந்தே முனைப்புடன் செயல்படவே விரும்புகிறோம். ’ஈரோடு கிழக்கு’ இடைத் தேர்தலில் நாங்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே” என்று அவர்கள் அறிவிக்கப்போகிறார்கள்.

பன்னீர் ரொம்பவே அப்பாவி; அதிர்ந்து பேசாதவர்; வல்லவரல்ல எனினும் நல்லவர்; மிக மிக மிக மென்மையானவர்; பயந்த சுபாவி.

ஆகவே, அண்ணாமலையார் மூலம் மேற்கண்ட[வெறும் பார்வையாளர்] அறிவிப்பு வெளியாகும்போது, ‘ஓபிஎஸ்’ எனப்படும் ‘ஓபசெ’ அவர்களுக்கு உடனிருந்து ஆறுதலும் தேறுதலும் சொல்லி, ‘ஓபிஎஸ்’ஐத் தங்கள் கட்சியில் சேர்க்க அவர்கள் கையாளவுள்ள ‘மிரட்டல், உருட்டல், தாஜா செய்தல்’ போன்ற சூழ்ச்சிகளுக்கு அவர் பலியாகிவிடாமல் பாதுகாப்பதும், தமிழ் மொழிப் பற்றையும் தமிழின உணர்வையும் மழுங்கடிப்பதையே முழுநேரப் பணியாகச் செய்யும் ‘பாஜக’வில் சேருவது என்ற தப்பான முடிவுக்கு அவர் வந்துவிடாமல் தடுப்பதும் அவரை உண்மையாக நேசிக்கும் தொண்டர்களின்[10 பேர் ஆயினும்] கடமையாகும்!

வாழ்க ‘ஓபிஎஸ்’! வளர்க அவரின் தமிழினப் பற்று!!

==============================================================================