செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாமே ‘அவன்’ செயலா?!?!

ஒரு சாமானியனுக்கும் சகலமும் அறிந்தவர் எனப்படும் மகானுக்கும்[நடிகர் ரஜினி அல்ல] இடையேயான ஓர் உரையாடல் இது. படித்துப் பயன் பெறுவீர்!


*கடவுள் இருப்பது உண்மையா?

உண்மை...உண்மை... உண்மை. அவர் ஆதியும் அந்தமும் இல்லாதவர்.


*கடவுள் ஒருவர்தானா?

ஒருவர் மட்டுமே.


*பருப்பொருள்கள், நுண்பொருள்கள், உயிர்கள் என்று அனைத்தையும் படைத்தவர் அவர்தானாமே?

ஆமாம்.


*அழிப்பவரும் அவரேதானா?

ஆமாம்...ஆமாம்.


*தான் படைத்ததைத் தானே ஏன் அழிக்கிறார்?

ஒப்புமை கடந்த ஒப்புரவாளன் அவன். அவனன்றி அதற்கான காரணத்தை வேறே எவரும் அறியார்.


*மழுப்புகிறீர்கள்..... விதம் விதமாய்ப் பொருள்களையும், வகை வகையாய் உயிர்களையும் கோடி கோடியாய்ப் படைத்துத் தள்ளியிருகிறார் கடவுள். படைக்கப்பட்டவற்றின் எண்ணிக்கையை நிர்ணயித்தவரும் நிர்ணயிப்பவரும் அவரே அல்லவா?

அந்த அருளாளன் தான்


*இருப்பனவற்றை அழிக்கிறார். புதியனவற்றைப் படைக்கிறார். இவற்றின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பவரும் இந்த ஒரு கடவுள்தான், இல்லையா?

இவர் மட்டுமே.


*ஒரு பொருளைப் போல இன்னொன்று இல்லை. உயிர்களும் அவ்வாறே. இது ஓர் அதிசயம். இதை நிகழ்த்துபவரும் கடவுளே என்கிறீர்கள்?

ஆமாம்.


*உயிர்களில் சிலவற்றிற்கு மிகக் குறுகிய ஆயுள். சிலவற்றிற்கு ஆண்டுக் கணக்கில். காரணம் என்ன?

விதி.


*விதித்தவர்?

எல்லாம் வல்ல அந்த முழுமுதல் கடவுள்தான்.


*இன்பம் பெறும் உயிர்கள் துன்பத்திற்கும் உள்ளாகின்றன. ஏன்?

அவை செய்யும் பாவபுண்ணியங்களின் பலன்.


*கணக்கில் அடங்காதவையாய் உயிர்கள் உள்ளன. அவற்றிற்கான பாவ புண்ணியங்களுக்குப் பட்டியல் தயாரித்து வைப்பது எளிதான செயல் அல்லதானே?

கடவுள் எல்லாம் வல்லவர். அவரைப் பொருத்தவரை எளிதானது அரிதானது என்று எதுவும் இல்லை.


*சொர்க்கம், நரகம்?

உண்டு.


*இவற்றை நிர்வகிப்பவர்?

இதெலென்ன சந்தேகம். இதைச் செய்பவரும் அவரே.


*‘எல்லாம் அவன் செயலே’ எனின், மனிதர்களைப் படைத்து, அவர்களுக்குச் சிந்திக்கும் அறிவைக் கொடுத்ததும், தன்னைப் போற்றி வழிபடச் செய்ததும் கடவுளின் செயலே அல்லவா?

அல்ல...அல்ல. இவை, மனிதர்கள் தம் சுய விருப்பத்தின் பேரில் செய்பவை.


*எல்லாம் அவன் செயலே என்று வலியுறுத்திய உங்களின் இந்த ஒரு கேள்விக்கான பதில், இதுவரை நீங்கள் முன்வைத்த கருத்துரைக்கு முற்றிலும் முரண்பட்டதாக உள்ளது; நகைப்புக்குரியதாகவும் உள்ளதே?

அது வந்து...வந்து... ஹி...ஹி...ஹி...
=====================================================================

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

விந்தணுக்கள் பாம்புகளைப் போல் நீந்துவதில்லை!...புதிய கண்டுபிடிப்பு

மனித விந்தணுக்கள் பாம்பை போல் நீந்துவதில்லை... அவை உருண்டு செல்கிறது..!

மனித விந்தணுக்கள் (Human sperm) கருமுட்டையை நோக்கிப் பாம்புகளைப் போல நீந்துகின்றன என்ற 300 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் நம்பிய கருத்து தவறானது எனவும், அவை நீர்நாயைப் போல் சுழன்று சுழன்று கருமுட்டையை அடைகின்றன எனவும் ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. இந்தப் புதிய வெளிப்பாடு பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மற்றும் மெக்ஸிகோவின் தேசியத் தன்னாட்சிப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளிடமிருந்து வந்தது. இந்த விஞ்ஞானிகள் முப்பரிமாண நுண்ணோக்கியைப் பயன்படுத்தி விந்தணு வால் இயக்கத்தைப் புனரமைத்தனர்.

மனிதனின் விந்தணு பற்றிய முதல் கண்டுபிடிப்பு 1678 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இதைக் கண்டறிந்தவர் அந்தோணி வான் லியூவான்ஹூக் என்ற டச்சுக்காரர். இவர், ஆற்றல் மிகுந்த மைக்ராஸ்கோப் ஒன்றைக் கண்டுபிடித்தார். அதில், தற்செயலாகப் பாக்டீரியாவையும் கண்டறிந்தார். இந்தக் கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் ஒரு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. பின்னர், மைக்ராஸ்கோப்பை வைத்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார் ஒருநாள், விந்துவையைம் ஆய்வு செய்தார். அப்போது, மிகவும் நுட்பமான உயிரணுக்கள் இருப்பதையும் கண்டறிந்தார். அந்த விந்தணுக்கள் தலை, வாலுடன் இருப்பதாகக் கூறினார். மனித விந்தணுக்கள் பாம்புகளைப் போல் நீந்துவதில்லை... அவை உருண்டு செல்கின்றன..!

மனித விந்து கருமுட்டையை நோக்கி பாம்புகளைப் போல நீந்துகின்றன என்ற 300 ஆண்டுகளுக்கும் மேலான கருத்து தவறானது என ஆய்வில் தெரியவந்துள்ளது...!

ஆணின் விந்தணுக்கள் ஒரு பாம்பினைப் போல் வளைந்து நெளிந்து நீந்திச் சென்று பெண்ணின் கருமுட்டையுடன் இணைவதாகவும் அவர் கூறினார். UK ராயல் சொசைட்டியில் 1678 ஆம்  ஆண்டு கூறப்பட்ட ஹூக்கின் கருத்து இதுவரை மறுக்கப்படவில்லை. அவரைத் தொடர்ந்து வந்த அறிவியலாளர்கள் மைக்ராஸ்கோப் வழியாக விந்தணுவைப் பல கோணங்களில் ஆராய்ச்சி செய்தபோதும் அதில் எந்த மாறுபட்ட கருத்தையும் தெரிவிக்கவில்லை.

கடந்த 340 ஆண்டுகளாக இந்தக் கருத்து மட்டுமே எல்லோரின் மனதிலும் பதிந்துள்ளது. இந்நிலையில், விந்தணு பற்றிய ஹெர்ம்ஸ் கெடில்லா-ன் புதிய கண்டுபிடிப்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்கிலாந்தில் இருக்கும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் பாலிமேத்ஸ் ஆய்வு மையத்தின் தலைவர், விந்தணு பற்றிய புதிய கண்டுபிடிப்பு பற்றிக் கூறுகையில்... ‘‘தற்போது ஏற்பட்டிருக்கும் அதிநவீன தொழில்நுட்பமான 3D மைக்ராஸ்கோப்பியில் ஆய்வு செய்தபோது, விந்தணுக்கள் இத்தனை நாட்களாக நம்மை ஏமாற்றி வந்தது தெரிய வந்துள்ளது. எங்களின் 3D மைக்ராஸ்கோப்பில் ஆய்வு செய்தபோது, விந்தணுக்கள் தங்களது வாலைப் பயன்படுத்திப் பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்வதில்லை. அவை, தண்ணீருக்குள் இருக்கும் ஒரு நீர்நாயை போல் சுழன்று சுழன்று செல்வதைக் கண்டறிந்துள்ளோம் என்று கூறியுள்ளார். 

“தற்போது வளர்ச்சியடைந்திருக்கும் தொழில்நுட்ப உதவியுடன் அது சாத்தியமாகியிருக்கிறது. அந்த உயிரணுக்களை அதிநவீன கேமராவின் துணையுடன் சுழற்சி முறையிலும் பார்க்க முடிகிறது’’ என்கிறார் அவர்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘விந்தணுக்கள் நீந்தும் வேகத்துக்கு ஈடு கொடுத்துப் பயணிக்க, விநாடிக்கு 55 ஆயிரம் காட்சிகளைப் பதிவு செய்யும் திறன் படைத்த மைக்ரோஸ்கோப்பைன்ப் பயன்படுத்தினோம். இதன் மூலம், தொலைவில் இருந்து மட்டுமே விந்தணுக்களை வேடிக்கை பார்க்காமல், அதனுடனே இணைந்து பயணிக்க முடிகிறது. அதன் பக்கவாட்டு நடவடிக்கைகளையும் கண்காணிக்க முடிந்தது. இதில் விந்தணுக்கள் சுழலும் தன்மையுடன்தான் நகர்கின்றன என்பதைக் கண்டறிந்தோம். 2 ஆண்டுகளாக இந்த ஆய்வை நடத்தினோம்,’’ என்றார்.
===========================================================
நன்றி: zeenews.india.com
https://kadavulinkadavul.blogspot.com/2020/08/blog-post_3.html