சனி, 14 மார்ச், 2026

அண்டம்[universe] சரி..., அதென்ன ‘வெளி’[space]?

வெளி[space] குறித்து அறிவியலாளர்கள் தரும் விளக்கங்களில்[ஆங்கிலமோ அதன் மொழியாக்கமோ] போதிய தெளிவு இல்லை.

முக்கியக் காரணம், ஆய்வுகளின் மூலம் பிரபஞ்சம் இருப்பதை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ள விஞ்ஞானிகள், அதே ஆய்வுகள் மூலம் வெளி எனப்படும் வெற்றிடம் இருப்பதை இந்நாள்வரை நிரூபிக்கவில்லை.

அதாவது, வெற்றிடம் என்பது எப்படியிருக்கும் என்பதற்கு எவரும் தெளிவான விளக்கம் தந்தாரில்லை; புகைப்பட ஆதாரங்களும் வெளியிடப்படவில்லை.

இருப்பினும், கீழ்க்காணும் வகையில் இரண்டையும் வேறுபடுத்துவது ஓரளவுக்கேனும் ஏற்புடையதாக அமையக்கூடும்.

பிரபஞ்சம்(Universe>அண்டம்) என்பது காலம், கோள்கள், நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள், ஆற்றல், பருப்பொருள் என அனைத்தையும் உள்ளடக்கிய பிரம்மாண்டமான அமைப்பாகும்[AI> கூகுள் நுண்ணறிவு].

வெளி[விண்வெளி> space] என்பது பிரபஞ்சம் இடம்பெற்றுள்ள வெற்றிடத்தைக்[வெற்றிடம்(Vacuum) என்பது காற்று, வாயு அல்லது எந்த ஒரு பருப்பொருளும் இல்லாத வெற்று வெளியைக் குறிக்கும்>AI] குறிக்கிறது.

வெள்ளி, 13 மார்ச், 2026

பதவி ஏற்றதும் பக்திமானாக அறிமுகமான அதிப் புத்திசாலி ஆளுநர்!!!

//தமிழகத்தின் புதிய பொறுப்பு ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்//[செய்தி].

மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்படுவதன் முக்கிய நோக்கம், மாநில ஆட்சியாளர்கள் தத்தம் மாநில மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் ஆட்சி நடத்துகிறார்களா என்பதைக் கண்காணிக்கவும், தவறுகள் இழைத்தால் அது குறித்து ஒன்றிய அரசுக்கு அறிக்கை அனுப்பவதற்கும்தான்.


மக்களுக்காகவே ஆளுநர்கள்.

ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றவுடன் மக்களையல்லவா சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்திருத்தல் வேண்டும்.

இந்த ஆளுநர் கோயிலுக்குச் சென்று கபாலீஸ்வரைத் தரிசித்தாராம்.

“பதிவிக்காலம் முடியும்வரை என் குடும்பத்திற்கான அதிகபட்ச வசதி[வெற்று ஆடம்பரம்]க்குப் பங்கம் நேராமல் பாதுகாப்பாய் கபாலீ” என்று வேண்டிக்கொள்ளவா?

கடவுள்களால் வேறு பயன்கள் இல்லையெனினும், ‘மோடி’க் கூட்டம் தங்களைப் பரம யோக்கியர்கள்[‘பக்தியுள்ளவன் உத்தமன்’ என்பது மக்களின் நம்பிக்கை] என்று காட்சிப்படுத்தி மக்களிடம் வாக்குப்பெற உதவுகிறார்கள்! ஹி... ஹி... ஹி!!!!!!