வெளி[space] குறித்து அறிவியலாளர்கள் தரும் விளக்கங்களில்[ஆங்கிலமோ அதன் மொழியாக்கமோ] போதிய தெளிவு இல்லை.
முக்கியக் காரணம், ஆய்வுகளின் மூலம் பிரபஞ்சம் இருப்பதை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ள விஞ்ஞானிகள், அதே ஆய்வுகள் மூலம் வெளி எனப்படும் வெற்றிடம் இருப்பதை இந்நாள்வரை நிரூபிக்கவில்லை.
அதாவது, வெற்றிடம் என்பது எப்படியிருக்கும் என்பதற்கு எவரும் தெளிவான விளக்கம் தந்தாரில்லை; புகைப்பட ஆதாரங்களும் வெளியிடப்படவில்லை.
இருப்பினும், கீழ்க்காணும் வகையில் இரண்டையும் வேறுபடுத்துவது ஓரளவுக்கேனும் ஏற்புடையதாக அமையக்கூடும்.
பிரபஞ்சம்(Universe>அண்டம்) என்பது காலம், கோள்கள், நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள், ஆற்றல், பருப்பொருள் என அனைத்தையும் உள்ளடக்கிய பிரம்மாண்டமான அமைப்பாகும்[AI> கூகுள் நுண்ணறிவு].
வெளி[விண்வெளி> space] என்பது பிரபஞ்சம் இடம்பெற்றுள்ள வெற்றிடத்தைக்[வெற்றிடம்(Vacuum) என்பது காற்று, வாயு அல்லது எந்த ஒரு பருப்பொருளும் இல்லாத வெற்று வெளியைக் குறிக்கும்>AI] குறிக்கிறது.
