"பிரபஞ்சத்தின் பரிபூரணத்திற்குச் செவிசாய்ப்பவருக்கு, அனைத்தும் இசையாகவே அமைகிறது" https://x.com/SadhguruTamil/status/2100049288315470275/photo/1[copy & paste]
பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
வியாழன், 17 செப்டம்பர், 2026
புரியாமல் பேசிப் பிரபலம் ஆன ‘ஜக்கி’ என்னும் சல்லாப உல்லாச கில்லாடிச் சாமியார்!!!
‘பிரபஞ்சம்’ என்றால் நமக்குப் புரியும். இது.....
‘கணக்கிடப்படாதவையும் பெரும் எண்ணிக்கையிலானவையும் ஆன நட்சத்திரங்களையும் கோள்களையும்[+அறிவியலாளரால் கண்டறியப்படாத மேலும் பலவற்றையும்] உள்ளடக்கிய, அகன்று விரிந்து பரந்து கிடக்கிற, எல்லை கண்டறிய இயலாத அண்டவெளி’ ஆகும்.
மேற்கண்ட சத்துக்குரு எனப்படும் ஜக்கி, இந்தப் பிரபஞ்சத்திற்குப் ‘பரிபூரணம்’ உண்டு என்கிறார்.
இரண்டு சொற்களையும் இணைத்தால் அது ‘பிரபஞ்சப் பரிபூரணம்’ ஆகிறது.
பரிபூரணம் என்றால் ‘முழுமையானது’ என்று பொருள்.
‘பரிபூரணமான[முழுமையான] பிரபஞ்சம்’ என்று குறிப்பிடாமல், ‘பிரபஞ்சத்தின் பரிபூரணம்’ என்கிறார்.
அதென்ன ‘பிரபஞ்சத்தின் பரிபூரணம்’?
இவருக்கு மட்டுமல்ல, வேறு எவருக்குமே இது புரியாது.
புரிந்துகொள்ள இயலாத இந்தப் பரிபூரணத்திற்குச் செவி சாய்ப்பவருக்கு அது[அனைத்தும்?] இசையாக அமைகிறது என்கிறார்,
அதென்ன இசை? எப்படியிருக்கும்? அந்த இசை இன்பத்தைக்கேட்டு இன்புற்றவர் யார்?
எவருமில்லை, இவரை[பொய்யன்]த் தவிர.
உலகில் உள்ள அனைத்து நாடுகளுமே, அனைத்துவிதக் குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்குகின்றன.
பகுத்தறிவைச் சிதைக்கிற இந்தப் போலி ஆன்மிக ஆசாமிக்கு எந்தவொரு நாடும்[இந்தியா உட்பட] எந்தவொரு தண்டனையும் வழங்கியதில்லை.
மாறாக, நாடுகள் பலவும் பெருமளவில் வசதிகளையும் புகழையும் வாரி வழங்கியிருக்கின்றன; வழங்குகின்றன.
கவர்ச்சியாகத் தாடி&மீசை வளர்த்து, ஆடம்பரமாக ஆடை உடுத்து, உலகை ஏமாற்றத் தெரிந்த அபூர்வப் போலிச் சாமியார் இந்தச் சத்துக்குரு!
புதன், 16 செப்டம்பர், 2026
கூத்தாடி ஜோசப்பின் பிள்ளையார் அவதாரம்! ‘கர்த்தர்’ ஆவது எப்போது?!
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முழுமுதற் கடவுளான பிள்ளையாரை முதல்வர் ஜோசப் தோற்றத்தில் வடிவமைத்துக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்[மின்னம்பலம்,Published On: ‘தவெக’ தறுதலைகள்.
“கோடிக்கணக்கான மக்களின் பக்திக்கும் வழிபாட்டுக்கும் உரிய இறை உருவத்தை, தனிநபர் துதிபாடுவதற்காகவும், அரசியல் விளம்பரத்திற்காகவும் இவ்வாறு உருமாற்றுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்கிறார் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
முதல்வர் ஜோசப் இந்த அயோக்கியர்களின் அடாவடித்தனத்தைக் கண்டிக்காமல் மௌனம் காப்பது[ரசித்து மகிழ்கிறாரா?] கவனிக்கத்தக்கது.
தங்களின் கூத்தாடித் தலைவனை இவர்கள் ‘கர்த்தர்’ ஆகவும் உருமாற்றிக் கொண்டாடும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
