ஞாயிறு, 25 அக்டோபர், 2026

முதல்வர் ஜோசப் தன் கால்களால் நடந்து அசத்தினார்! காணொலி காண்க!!


முதல்வர் ஜோசப் இரண்டு கால்களால்தான் நடக்கிறார்; தலைகீழாக இரண்டு கைகளை ஊன்றி நடக்கவில்லை.
கெத்தா நடந்தாராம்[கால்களால்]!!!

ஏண்டா இப்படி அக்கிரமம் பண்றீங்க தற்குறிகளா?

உங்க அடாவடித்தனத்துக்கு ஓர் அளவே இல்லையா?

நீங்கள் அடிக்கும் கொட்டங்களையெல்லாம் நைனார் நாகேந்திரன் அவர்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்!

கோவையில் மூனுஷா ரோடுஷோ! எல்லாம் ‘அவன்’ செயல்!!


‘அவன்’ என்பதற்குத் தப்பாகப் பொருள்கொண்டு, தமிழினத்தைக் காக்கவந்த அருளாளனாராம் ஜோசப்பிடம் அடியேனைக் கைது செய்யும்படி[‘நாதக’ கார்த்திகா கைது செய்யப்பட்டதை நினைவுகூர்க] எவரும் கோரிக்கை வைத்துவிட வேண்டாம். சிறைக்குப் போய், சோளக்களி தின்பது இந்த வயசாளியின் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது.

இங்கே ‘அவன்’ என்பது, அனைத்து உயிர்களையும் படைத்து, ஒன்றோடொன்று போராடவிட்டு ‘மேலே’ இருந்து வேடிக்கை பார்க்கிற எல்லாம் வல்ல இறைவனை[‘அவன்’ இன்றி அணுவும் அசையாது]க் குறிக்கும்.

ஜோசப்பின் நல்லாட்சி சிறக்கவும், அவரின் செல்வாக்கு வளரவும், இடைஞ்சல் ஏதுமின்றி அவர் தமிழ்நாட்டை ஆட்சிபுரியவும்  அயராமல் பாடுபடும்[ரோடுஷோக்கள் நடத்துவதன் மூலம்] உலகப் பேரழகி ‘திரிஷா’ வாழ்க!

அழகு சிதையாமலும், கவர்ச்சி குறையாமலும் அவர் வளமுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்! 

வாழ்த்துங்கள்!!