யாகம், ஹோமம் என்பவை பற்றி அறிந்திருப்பீர்கள்['ஹோமம் என்பது ஒரு சிறிய யாகமே ஆகும். அது ஒரு மணி நேரத்தில் இருந்து ஒரு நாளுக்குள் செய்யப்படுவது. ஹோமம் என்பது, தனிப்பட்ட மனிதர்கள் குறிப்பிட்ட நோக்கத்துக்காக, தங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டித் தங்கள் வீட்டிலோ அல்லது ஒரு ஆலயத்திலோ செய்வதாகவும் இருக்கலாம்.' -quora .
எதிரிகளை அழிப்பதற்கென்றே யாகங்களும் ஹோமங்களும் உள்ளனவாம். https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/09/16115308/1887727/Chandi-Homam.vpf
கோயில் 'குருக்கள்'களால் செய்யப்படும் யாகங்களும் ஹோமங்களும் இந்த அளவுக்குச் சக்தி வாய்ந்தவையாம். இவற்றை மங்கலகரமான நாட்களில் செய்து பாகிஸ்தான் போன்ற பிற எதிரிகளையும் ஒழித்துக்கட்டலாம்.
எதிரிகளை அழிப்பதற்கான சில ஹோமங்களும் யாகங்களும் .....
* சூலினி யாகம் https://minnambalam.com/k/2020/01/20/123
[யாக குண்டம் 6 அடி நீளம், 6அடி அகலம், 10 அடி ஆழம் இருக்கும். இதில்தான் யாகப் பொருள்களைப் போட்டுப் பிழை இல்லாமல் மந்திரம் ஓதுவார்களாம்].
சசிகலா சிறையிலிருந்து தற்போது வெளியே வராமலிருக்கவும், திமுக ஆட்சியைப் பிடிக்ககாமலிருக்கவும் தமிழ்நாட்டின் முக்கிய சில அமைச்சர்கள் கேரளாவிற்குச் சென்று இந்த யாகத்தை நடத்தினார்கள் என்பது அண்மைச் செய்தி[வதந்தி?].
* சத்ரு சம்ஹார ஹோமம் https://www.seithipunal.com/article/sasikala-mystery-pooja-at-midnight
ஓராண்டுக்கு முன்னால், தன் அரசியல் எதிரிகளை வீழ்த்த 'ராஜாதி ராஜா' இந்த ஹோமத்தை நடத்தியது நாடறிந்த செய்தி!
* சத்துரு ஜெய ஹோமம் https://www.patrikai.com/
நடிகராக இருந்து கட்சித் தலைவராகி, கிடுகிடு வளர்ச்சி கண்டு, உடல் நலமும் மன நலமும் பாதிக்கப்பட்டு, 'சடசட' சரிவை அவர் சந்திக்க... அவரின் துணைவி, ஜெயலலிதா போல் அரியணையைக் கைப்பற்றுவதற்காக அண்மையில் நடத்திய ஹோமம் இது.
* ஸத்ரு ஸம்ஹார ஸ்கந்த ஹோமம் https://www.jananesan.com/8499
ஸத்ரு சம்ஹார ஹோமத்தைக் காட்டிலும் மிகுந்த பலனை விரைவில் அளிக்கக்கூடியது இது.
* அஸ்திர ஹோமம் https://www.google.com/search?
இந்த ஹோமம் எதிரிகளை மட்டுமல்ல, தீய சக்திகளையும் அழிக்க வல்லது. கடவுள்களுக்குரிய ஆயுதங்களின் சக்திக்கு இணையான சக்தி வாய்ந்தது.
ஆக, இந்த யாகங்களாலும் ஹோமங்களாலும் விளைந்த நற்பயன்கள் அளவிறந்தன என்கிறார்கள் ஆன்மிகப் பரப்புரையாளர்கள்.
பாரத தேசத்தின் பெரும் பரப்பளவைக் கைப்பற்றி ஆண்ட மொகலாயர்களை விரட்டியடித்தது, ஆங்கிலேயர்கள் அலறியடித்துக்கொண்டு இந்தப் புண்ணிய பூமியைவிட்டு ஓட்டம்பிடிக்கக் செய்தது போன்ற வரலாற்றுச் சாதனைகள் பலவற்றை நிகழ்த்தியது இந்த ஹோமங்களும் யாகங்களும்தானாம்.
இத்தனை அதிசய மந்திர சக்திகளும், யாக ஹோம வகையறாக்களும் நம் கைவசம் இருக்கும்போது, நம் பரம்பரை எதிரிகளான பாகிஸ்தானையும் சீனாவையும் விரட்டியடிக்க, கோடானுகோடி ரூபாய்களைப் போர்க்கருவிகளுக்காகவும், போர் தொடர்பான இதர பணிகளுக்காகவும் செலவு செய்ய வேண்டுமா என்ன?!
ஆட்சியாளர்களிடம் அணுக்கமாக உள்ள பிரமுகர்கள், இந்த 'யாகஹோம' மந்திர தந்திரங்களின் மகிமைகளைப் பக்குவமாக எடுத்துரைத்து, இவற்றை முழுமையாகப் பயன்படுத்துமாறு நெறிப்படுத்தினால், அது இந்த மண்ணுக்குப் பெரும் பயன் தருவதாக அமையக்கூடும் என்பது அடியேனின் கருத்து.
மறுப்பாரும் உளரோ?! ஹி...ஹி...ஹி!!!
===============================================================