வியாழன், 2 மார்ச், 2023

புணர்ச்சி சுகமும் புரியாத முரண்பாடுகளும்!!!


உடலுறவு வேட்கை என்பது இயற்கையானது.

இது ஆண், பெண் என்னும் இருபாலினத்தவருக்கும் பொதுவானது.

வேட்கையைத் தணித்திடவே இருவரும் உடலுறவு கொள்கிறார்கள். இதன் மூலம் இருவருமே இன்பம்[அளவு வேறுபடக்கூடும்] பெறுகிறார்கள் என்பதும் உண்மையே. ஆனால்.....

இங்கே முகிழ்க்கும் ஒரு முரண்பாடு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

சிறிது சிந்தித்தாலே அந்த முரண்பாடு என்னவென்று புரியும்.

ஆணைப் பொருத்தவரை, பெண்ணுடன் இணைவது இந்தச் சுகானுபவத்திற்காக மட்டுமே.

பெண்ணின் நிலை இதுவல்ல. 

அவன் மூலம் இவள் சிலவோ பலவோ பிள்ளைகளைப் பெற்ற பிறகு அவனால் கைவிடப்பட்டால், வயிற்றுப்பாட்டுக்காக இதைச் செய்வதும் நிகழ்கிறது[ஆடம்பர வாழ்வின் மீதான மோகம் காரணமாகப் பிற ஆடவருடன் உறவு  கொள்கிற பெண்களும் உளர். இது விதிவிலக்கானது].

பாதுகாப்பற்ற சூழலில் வாழும் பெண்கள் கடத்தப்பட்டுப் பரத்தையர்  ஆக்கப்படும் அவலமும் அரங்கேறுகிறது.

ஒரு காலக்கட்டத்தில், இவர்கள் இறைப்பணிக்கு அர்ப்பணிக்கப்பட்டு ஆடவரின் சரச சல்லாபத்துக்கு உட்படுத்தப்பட்டக் குரூரங்களும் நிகழ்ந்தன.

உடலுறவு கொள்வது இயற்கையோ, இறைவனின் திருவிளையாடலோ, ஆடவனைப் பொருத்தவரை ‘அது’ முடிந்த பிறகு அதற்கான பின்விளைவு ஏதுமின்றிச் சுதந்திரமாகச் செயல்படுகிறான்.

அந்தச் சுதந்திரம் பெண்ணுக்கு இல்லை; கருவுற்று, பல மாதங்கள் அதைச் சுமந்து, பல துன்பங்களை அனுபவித்து ஈன்று புறம் தருதல் என்னும் கடமையைச் செய்கிறாள்.

படைப்பில் ஏனிந்த முரண்பாடு?

படைத்தவன் கடவுள் என்றால் அவன் பண்பற்றவன் என்றாகிறதே!

இப்படிப் பாரபட்சம் காட்டும் அவனை, ஆண்களைக் காட்டிலும் அதிகம் நம்பி வழிபடுபவர்கள் பெண்களே என்னும் உண்மை நம்மைப் பெரு வியப்பில் ஆழ்த்துகிறது!!

புதன், 1 மார்ச், 2023

'ஆயுர்வேதக் கல்வியில் ஜோதிடம்’... மூடநம்பிக்கை வளர்ப்பில் இந்தியா ‘நம்பர் 1’!!!

ஜோதிடம் அறிவியல் சார்ந்ததா அல்லவா என்னும் விவாதம் நீண்ட நெடுங்காலமாக நடைபெறுகிறது. இன்றளவில் அது தொடர்கிறது. எனினும், கோள்களின் இருப்பும் இயக்கமும் மனித வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதற்கு அறிவியல் அடிப்படையிலான ஆதாரங்கள் எவையும் இன்றளவும் முன்வைக்கப்படவில்லை.

இயற்கைச் சீற்றங்களால் நிகழுந்துள்ள எத்தனையோ பேரழிவுகள், மனிதர்களைத் தாக்கும் எதிர்பாராத புதிய புதிய நோய்கள் பற்றிய முன்னறிவிப்புகளை ஜோதிடர்கள் கணித்துச் சொன்னதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனி மனிதர் வாழ்விலும் ஜோதிடர்களின் கணிப்புகள் பெரும்பாலும் பொய்த்துவிடுகின்றன.

மக்கள் ஜோதிடர்களை அணுகித் தம் எதிர்காலம் குறித்து அறிவது தொடர் நிகழ்வாக இருப்பினும், ஜோதிடத்தை முழுதும் நம்பத்தக்க ஒரு கலையாக ஏற்று, கல்வி நிலையங்களில் ஒரு பாடமாகக் கற்பிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.

தனியாரால் நிர்வகிக்கப்படும் சில நிறுவனங்களில் ஜோதிடம் கற்பிப்பதும் அரிதான நிகழ்வாக இருக்கும் நிலையில், மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் இதற்கான வாய்ப்பு இல்லை என்றே சொல்லலாம்.

இந்நிலையில்.....

இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசியக் கவுன்சில்(NCISM) இந்த ஆண்டு இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை(BAMS)த் திட்டத்தில் ஜோதிடத்தை விருப்பப் பாடமாக அறிமுகப்படுத்தியுள்ளது.[https://timesofindia.indiatimes.com/education/news/ncism-introduces-medical-astrology-for-better-diagnosis-in-ayurveda-treatment/articleshow/98226677.cms]

அறிஞர்களிடையே இதற்குக் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

மக்களிடையே மூடநம்பிக்கைகளை விதைத்து ஆட்சியைக் கைப்பற்றிய ‘பாஜக’, மேலும் அவர்களை மூடர்களாக்குவதற்கான திட்டமிட்ட சதியே இது என்பது அவர்கள் கருத்து.

ஜோதிடம் கற்பிப்பது அனுமதிக்கப்பட்டால், எதிர்காலத்தில், செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், ஆவி, பூதம், பேய், பிசாசு போன்றவை பற்றிக் கற்பிப்பதும் கல்வி நிலையங்களில் பரவலாக்கப்படலாம் என்கிறார்கள்.

இந்தியா, வளரும் நாடுகளில் முன்னிலை வகிப்பதாகச் சொல்லப்படுகிறது. 

மூடநம்பிக்கை வளர்ப்பிலும் இது முன்னிலை பெற்றுள்ளது என்று இனி தயங்காமல் சொல்லலாம்!

====================================================================================================

தொடர்புடைய இடுகைகள்:

https://kadavulinkadavul.blogspot.com/2016/11/blog-post_24.html [ஜோதிடம்... கொஞ்சம் புரிதல்! கொஞ்சம் ஆராய்ச்சி!!

https://kadavulinkadavul.blogspot.com/2016/11/blog-post_15.html [நம்பாதீர், நம்பாதீர்!... ஜோதிடத்தை நம்பாதீர்!!

https://kadavulinkadavul.blogspot.com/2021/06/blog-post_30.html [நாடி ஜோதிடம் கேடிகளின் புகலிடமா?]

https://kadavulinkadavul.blogspot.com/2020/04/blog-post_22.html [தாஜ்மகால் இடியும்! பாகிஸ்தான் மூன்றாக உடையும்!!...

https://kadavulinkadavul.blogspot.com/2017/10/blog-post_16.html [ஜோதிடம் பற்றி நாடகத் தந்தை சம்பந்த முதலியார்...]

https://kadavulinkadavul.blogspot.com/2017/09/blog-post_84.html [டுபாக்கூர் வாஸ்துவும் டூப்லிகேட் கடவுளும்...]

https://kadavulinkadavul.blogspot.com/2019/03/blog-post_25.html [‘கிலி’ ஜோதிடம்!]

https://kadavulinkadavul.blogspot.com/2019/07/blog-post_27.html [பட்டும் திருந்தாத கர்னாட அமைச்சர்!]

https://kadavulinkadavul.blogspot.com/2015/10/blog-post_9.html [நவக்கிரகக் கடவுள்களின் அவதாரக் கதைகள்!]

https://kadavulinkadavul.blogspot.com/2015/09/100.html [ஜோதிடம் பொய்...பொய்...பொய்யே!