வியாழன், 12 மார்ச், 2026

கையறுநிலைப் பெண்களின் கடைசிப் புகலிடம்!!!

வந்துநின்ற ஆட்டோவிலிருந்து கிராமத்திலிருக்கும் அம்மாவும் அப்பாவும் இறங்குவதைப் பார்த்து மகிழ்ந்த மல்லிகா, அப்பா கைத்தாங்கலாகத் தன் புருசனை நகர்த்திவருவது கண்டு வருந்தினாள்.

மிதமிஞ்சிய போதையில் தெருவோரங்களில் விழுந்து கிடக்கும் குடிகாரக் கணவனை, வழக்கமாகத் தெரிந்தவர்கள் வீடு சேர்ப்பார்கள். இன்று அப்பா.

மருமகனைத் திண்ணையில் கிடத்திவிட்டு, "பார்த்த வேலையையும் பறிகொடுத்துட்டான். குடிக்க இவனுக்குப் பணம் ஏது?" என்று கேட்ட மல்லிகாவின் அப்பா மாதவன் அருகிலிருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தார். அம்மா அவரின் காலடியில் முடங்கினாள்.

"வீடு கல்யாணம்னு சமையல் வேலைக்குப் போய் நான் சம்பாதிக்கிறேன்ல." -மல்லிகா.


"இனிமே பணம் கொடுக்காதே."


"ஏற்கனவே அதைச் செய்து பார்த்துட்டேன்பா. கடன் வாங்க ஆரம்பிச்சுட்டார்."


"இது எவ்வளவு நாளைக்கு? கொடுத்த பணம் வரலேன்னா யாரும் கடன் தர மாட்டாங்க. திருந்திடுவான்."


"அப்படித்தான் நானும் நினைச்சேன். திருந்துவார்னு எதிர்பார்த்த உங்க மருமகன் டாஸ்மாக் கடை முன்னாலயே பிச்சை கேட்க ஆரம்பிச்சுட்டார். வேறு வழியில்லாம அவர் கேட்கும்போதெல்லாம் குடிக்கப் பணம் கொடுத்துடுறேன்” -ஆற்றாமையுடன் குரலில் வேதனை பொங்கச் சொன்னாள் மல்லிகா.


தலையில் கை வைத்துக்கொண்ட மாதவன், சிறிது நேர யோசனைக்குப் பிறகு சொன்னார்: “இந்தக் குடிகாரனை நம்பி மூனு பொண்ணுகளைப் பெத்துட்டே. அதுகளைப் படிக்க வைத்துக் கல்யாணம் பண்ணனும்னா ஓரளவுக்காவது சேமிக்கணும். கொடுத்து உதவுற அளவுக்கு என்கிட்டேயும் பணம் இல்ல. உனக்குச் சம்மதம்னா சொல்லு, நானே இவனை விஷம் கொடுத்துக் கொன்னுட்டு ஜெயிலுக்குப் போயிடுறேன்.”


“ஐயோ அப்பா…” -பெற்றவனின் கால்களைக் கட்டிக்கொண்டு, சற்று நேரம் கதறி அழுதாள் மல்லிகா; உங்களை ஜெயிலுக்கு அனுப்பிட்டு நாங்க உயிரோடு இருப்போமா அப்பா?” என்று தேம்பினாள்.


“இவனைத் திருத்த வேற வழி தெரியலையேம்மா?” -கட்டிலில் சரிந்தார் அவர்.


தன் பங்குக்குச் சிறிது நேரம் தலையில் அடித்துக்கொண்டு அழுது தீர்த்த அம்மாக்காரி, சுவரில் தொங்கிய சாமி படத்தைப் பார்த்து, “பிள்ளையாரப்பா, நீதான் என் மருமகனைத் திருத்தணும். கைவிட்டுடாதே சாமி” என்றவாறு படத்தின் முன்னால் நெடுநேரம் குப்புற விழுந்துகிடந்தாள்.

புதன், 11 மார்ச், 2026

மோடி ராஜினாமா சு.சுவாமி வசம்! அடுத்தப் பிரதமர் சுவாமியே!!

 

‘டிரம்ப்’புடன் மோடியைச் சமரசம் செய்துகொள்ள வைத்த அந்த ரகசியத்தைச்[...Modi is compromised by what and whom...]சு.சுவாமி உரிய ஆதாரங்களுடன் வெளியிடுவாரேயானால், மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என்பது உறுதி[‘எஃப்ஸ்டீன்’ கோப்பில் நம் அவதாரம் மோடியின் பெயரும் இடம்பெற்றுள்ளது என்பது உலகறிந்த ரகசியம்தான் -https://www.youtube.com/watch?v=TwsnwAUCNgw&t=375s].

ஆனால், அவர் வெளியிடத் தயங்குவது புரியாத புதிராக உள்ளது. சுப்பிரமண்யன் சாமி ஒரு கோழை அல்ல. மோடிக்குப் பல பெண்களுடன் தொடர்பு உண்டு[https://www.youtube.com/watch?v=LsytAt_fiY8] என்று ஏற்கனவே பகிரங்கமாக அவர் அறிவித்ததே அதற்கான ஆதாரம்.

மோடி பதவி விலகினால், இந்திய நாட்டின் பிரதமர் பதவி தன்னைத் தேடி வரும் என்பதைச் சாமி அவர்கள் அனுமானிக்கத் தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.

ராகுல் காந்திக்கும், காங்.தலைவர் கார்கேவுக்கு[மோடியைப் பதவி நீக்கம் செய்யாமல் சாகமாட்டேன் என்று சபதம் செய்தவர்] மோடியை ஆட்சிப் பொறுப்பிலிருந்து ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும் என்பதுதான் குறிக்கோளே தவிர, பதவி ஆசையெல்லாம் இல்லை.

எனவே, மோடியின் விலகலுக்குப் பிறகு, ராகுலும் காங்கிரசாரும் மட்டுமல்ல, அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்ட ஒட்டுமொத்த இந்திய மக்களும், சு.சாமியை ஒன்றிய அரசின் அரியணையில் ஏற்றுவார்கள்.

ஆகவே, சு.சுவாமி அவர்களிடம் நாம் வைக்கும் கோரிக்கை.....

“மோடி குறித்த அந்த அசிங்க ரகசியத்தை உடனடியாக அம்பலப்படுத்துங்கள்[முழுமையாக] சுப்பிரமண்யன் சுவாமிஜி”!