“ஈ.வி.எம். எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சதிவேலைகள் செய்து மோசடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் மோடி” என்று அழுத்தம் திருத்தமாகவும் ஆவேசமாகவும் பேசியிருக்கிறார் தமிழன் திருமாவளவன்[தினத்தந்தி, பிப்ரவரி 19, 10:49 am].
‘ஈ.வி.எம். பிரதமர் மோடி’ என்பது வட இந்தியர்கள் மோடிக்கு வைத்துள்ள 'நிக் நேம்' என்றும் சொல்லியிருக்கிறார் அவர்.
‘நிக் நேம்’ என்பதைத் தமிழில் ‘புனைப் பெயர்’ என்பார்கள்.
மோடியைப் பொருத்தவரை, இது[ஈ.வி.எம்] அவர் புனைந்துகொண்ட பெயர் அல்ல என்பதால், இதைச் ‘செல்லப் பெயர்’[மக்கள் செல்லமாக அழைக்கும் பெயர்] என்பதே சரி.
ஈ.வி.எம்.'ஐ எதிர்த்து வட இந்தியாவில் போராட்டம் வலுக்கிறதாம். தன் கட்சியும் மிகப் பெரும் போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறார் திருமா.
வரவேற்கிறோம்! போராட்டம் வெற்றி பெற்றிட வாழ்த்துகிறோம்!!
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ’ஈ.வி.எம்.பிரதமர் மோடி’, ‘மாஜி ஈ.வி.எம்.மோடி’ ஆவார் என்பது நம் அசைக்க முடியாத நம்பிக்கை!!!
* * * * *