புதன், 21 அக்டோபர், 2026

அரசியல் ‘அரிச்சுவடி’ப் பாடம்கூடப் படிக்காத த.நா. முதல்வர் ஜோசப்!!!

தாராபுரம் இடைத் தேர்தலின்போது, முதலமைச்சர் ஜோசப்பை ஒருமையில்['அவன்' என்று ஏகவசனத்தில்] பேசி விமர்சித்ததான குற்றச்சாட்டில், ‘நாதக’ கட்சி கார்த்திகாவை ஜோசப் அரசு கைது செய்தது என்பது செய்தி.

ஒரு மாநிலத்தை ஆளும் மாண்புமிகுவுக்கு ஏறத்தாழ  ஒரு துறவிக்குரிய மனப்பக்குவம் தேவை.

“ஜோசப் எங்கள் சாமி” என்று கோவைக் குமரிகள் கூத்தடித்துக் கொண்டாடியபோது குதூகளித்தார் ஜோசப்.

இடைத் தேர்தலின்போது, தன்னை ‘அவன்’ என்று குறிப்பிட்டு அவமானப்படுத்தினார் கார்த்திகா என்று அவரைக் கைது செய்ய ஆணை பிறப்பித்தார் இவர்.

தன்னைக் கடவுளாகக் கொண்டாடிய காட்டுமிராண்டிச்சிகளின் புகழ்மொழி இனிக்கிறது; அப்படி ஒன்றும் அநாகரிக வார்த்தை அல்லாத ‘அவன்’[அரசியல் சாக்கடையில் இதெல்லாம் வெகு சகஜம்]ஐப் பயன்படுத்தியது கசக்கிறது இவருக்கு.

ஆவேசப்பட்டிருக்கிறார் ஜோசப்! அடாவடித்தனமான செயலில் ஈடுபட்டிருக்கிறார்!!

தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்த ஒரு சாமானியப் பெண்மணியை நாடறிந்த 'பிரபலம்' ஆக்கியிருக்கிறார். 

எதிர்பாராமல் அரசியல் களத்தில் குதித்த ஜோசப், அரசியல் அரிச்சுவடிப் பாடம்கூடப் படிக்காதவர் என்று உறுதிபடச் சொல்லலாம்.