இந்தக் காணொலிக் காட்சிக்கும் கீழ்வரும் உரைநடைக் கவிதைக்கும் எள்முனையளவும் தொடர்பில்லை.
இவர் தனது கன்னம் காட்டி அவளிடம்
‘கட்டி முத்தம்’ கொடுக்கச் சொன்னார்.
பத்தே பத்து நாட்களில்
பருவக் குமரி ஆகிப் பார்ப்போரைக்
பரவசப்படுத்தவிருக்கும்
அந்தக் கள்ளி, இவரின் கன்னத்தைக்
கிள்ளிவிட்டுக் காணாமல் போனாள்.
இளவயசுக்காரியின்
கிளுகிளு கன்னம் கிள்ளும்
கண நேரச் சந்தோசத்துக்குக்
காத்திருந்தார் இவர்.
அந்தக் குறுகுறு குறும்புக்காரி
அப்புறம் வரவே இல்லை.
ஆண்டொன்று கழிந்து இவரையொரு
குண்டுப் பையன் தேடிவர
அவனை அவளாகக் கற்பனை செய்து
அவனின் கொழு கொழு கன்னம் கிள்ளிக்
கொஞ்சமே கொஞ்சுண்டு
ஆறுதல் பெற்றார் இவர்!