தமிழுக்குப் பெருமை சேர்த்த இசையமைப்பாளர் தேவா காலமானார்[வருந்துகிறோம்].
பெரும் எண்ணிக்கையில் வருகைபுரிந்து, கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள் சொந்தபந்தங்களும் பிரபலங்களும்.
நம் முதல்வர் ஜோசப்பும் போனார்; இறந்தவருக்கு மரியாதை செலுத்துவிட்டு அவர் தன் பரிவாரங்களுடன் புறப்படும்போது, விசாரிக்க வருவோருடன் தன் துயரம் பகிர, சடலத்தின் அருகிலிருக்கக் கடமைப்பட்ட தேவாவின் மகன், ஓடோடிவந்து ஜோசப்பை வழியனுப்பி வைத்தாராம்[‘ஜோசப்பும் அவரைத் தேடினார்’ என்கிறான் ஊடகன். எதற்கு? உடன் வந்து தன்னை வழியனுப்பி மரியாதை செலுத்தவா?].
இதைச் சொல்லி ஜோசப்புக்குப் புகழ் மாலை சூட்டி அஞ்சலி செலுத்தியிருக்கிறான் ஊடகன்[தினப்புளுகன் தினத்தந்தி].
கண்டிக்கத்தக்கவன் ஊடகனா, அவனின் இழிசெயலைக் கண்டித்துக் காணொலியை ‘யூடியூப்’பிலிருந்து அகற்றாதவரும், கோவை நகரத்துக் குமரிகளால் கடவுள்[சாமி] ஆக்கப்பட்டவரும் ஆன சர்வதேசப் புகழ் ஜோசப்பா?