புதன், 21 அக்டோபர், 2026

கண்டனம் போதாது; காரியவாதியாக இருங்கள் நயினா[ர்]!

 

நயினா[ர்] நாகேந்திரன் அவர்களே,

சுயநல ஆட்சி நடத்தும் ஜோசப்பைப் பெரும்பான்மை மக்கள் மன்னிக்காவிட்டாலும், அவருக்குக் குருட்டு ரசிகர்களின் ஆதரவும், முதுகுச் சவாரி செய்வதில்[பிற கட்சிகளின் தயவு] தேர்ச்சி பெற்ற  காங்கிரசார், திருமாவளவனார், இடதுசாரிகளார் ஆகியோரின் அரவணைப்பும் உள்ளவரை அவரை ஆட்சிப்பீடத்திலிருந்து இறக்க இயலாது.

இது உங்களுக்கும் தெரியும்.

இருந்தும், ஜோசப் ஆட்சியை மிகக் கடுமையாகச் சாடுவதில், அவரின் எதிரிகளுடன் ஒப்பிடும்போது நீங்கள் முன்னிலை பெற்றிருக்கிறீர்கள்.

ஜோசப்பின் கபட நாடகத்தை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என்று சில நாட்களுக்கும் முன்பு அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

மக்களால்[ஜோசப்பை மன்னிக்காதவர்கள்] முதல்வர் ஜோசப்பைப் பதவியிறக்கம் செய்வது சாத்தியமே இல்லாவிட்டாலும், சர்வ அதிகாரம் படைத்த உங்களின் தலைவர் மோடி நினைத்தால், நீங்கள் பேசி முடித்த அடுத்த சில நிமிடங்களிலேயே, போதை மாபியாக்களுக்கு ஆதரவு அளிப்பதை மட்டுமே காரணம் காட்டி ஜோசப் ஆட்சியைக் கவிழ்த்திருக்க இயலும்.

நீங்களோ பிரதமரிடம் இது குறித்த முறையீட்டைச் செய்யாமல் வெறும் 'வாய்ச் சவடால்' வீரராகவே இருந்துகொண்டிருக்கிறீர்கள்.

உங்களிடம் எம்மைப் போன்றவர்கள் முன்வைக்கும் வேண்டுகோள்:

செயல்படுங்கள். அதற்கான ‘தில்’ இல்லையென்றால், வாய் மூடி மௌனம் சுமந்திருங்கள்.

சும்மா இருப்பது இயலாதென்றால், தெருமுனைப் பலகாரக் கடைகளில் சூடாகப் போண்டா போடுவார்கள்[இது அடைமழைக் காலம்]. வாங்கிச் சாப்பிட்டுங்கள்; நண்பர்களுடன் ‘ஊர்க்கதை’ பேசிப் பொழுதைக் கழியுங்கள்!