‘சுழற்சி மூச்சுப் பயிற்சி’யைச் செய்யும் முறை:
இதற்குத் தண்ணீர் நிரப்பிய ஒரு குவளையும் ஒரு உறிஞ்சு குழலும்(ஸ்ட்ரா) தேவை.
உறிஞ்சு குழலின் ஒரு முனையை வாயில் வைத்து, அதன் இன்னொரு முனையைக் குவளையில் உள்ள தண்ணீருக்குள் செலுத்துக.
இந்நிலையில், உறிஞ்சு குழலை வாயிலிருந்து அகற்றாமல், மூக்கின் வழியாக நன்றாக மூச்சை இழுத்து, வாயில் உள்ள அதே உறிஞ்சுகுழல் வழியாக, அதிக அளவிலான காற்றை ஊதி வெளியேற்றுக. இப்போதும் குவளை நீரில் குமிழிகள் தோன்றுவதைக் காணலாம்.
ஓரிரு மணித்துளிகள் இப்பயிற்சியைச் செய்திடுக. ஓய்வு நாட்களில் கூடுதல் நேரம் ஒதுக்கலாம.
பயிற்சியின் பயன்கள்:
*சீரான மேற்கண்ட சுவாச முறை பதற்றத்தைக் குறைத்து மனதில் அமைதி நிலவச் செய்கிறது.
*தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதோடு, உடல் உறுப்புகளின் இயக்கங்களைச் சீராக்கி இழந்த ஆற்றலை மீட்டெடுக்க உதவுகிறது.
*நுரையீரலின் காற்றை இழுத்து வெளியேற்றும் திறனை அதிகரிக்கிறது(Lung capacity).
*உடலுக்குத் தேவையான உயிர்க் காற்றைச் சேமிக்கிறது; கெட்ட காற்றை வெளியேற்றுகிறது.
*முகம் & வாய்த் தசைகளை வலுவடையச் செய்கிறது.
*இந்தப் பயிற்சியின் மூலம் கவனத்தை ஒருமுகப்படுத்த இயலும்.
முயலுக; உடல் & மன நலத்தை மேம்படுத்துக!
