'வணக்கம்’ செலுத்துதல், அதாவது வணங்குதல் என்பது காலங்காலமாக ஆறறிவு மனிதர்கள் பின்பற்றும் நடைமுறைகளில் ஒன்று.
*தமிழர் மரபில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களையும், சூரியன் & சந்திரனையும் தெய்வமாக எண்ணி வணக்கம் செலுத்துதல்(உதாரணம்: பொங்கல் திருநாளில் சூரியனுக்குச் செலுத்தும் நன்றி கலந்த வணக்கம்).
*நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் பசு போன்ற விலங்குகளையும், நிழலையும் உயிர்க்காற்றையும் தரும் அரசமரம், ஆலமரம், துளசி போன்ற தாவரங்களையும் வணங்குதல்.
*நாம் கற்கும் கல்விக்கு ஆதாரமான புத்தகங்களையும், நம் பசி போக்கும் தொழிலுக்குப் பயன்படும் கருவிகளையும்(ஆயுத பூஜை] வணங்குவது.
*நம்மை வழிநடத்துவதாக நம்பும் ஆன்மீகச் சக்திகளுக்கும், நமக்கு வழிகாட்டி மறைந்த முன்னோர்களுக்கும் வணக்கம் செலுத்துதல்(இணையம்).
என்றிவ்வாறு இந்த நடைமுறை அமைந்துள்ளது.
இந்த நடைமுறையை நம்மால் எளிதாகப் புரிந்துகொள்ளவும் முடிகிறது.
கீழேயுள்ள படங்களைக் கவனியுங்கள்.

.jpg)
.jpg)
தமிழினத்தின் நிரந்தர முதல்வரான ஜோசப்பும், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினும், வேல்முருகனும்[+பிறரும்] செலுத்தும் 'வணக்கம்' புகழத்தக்கதா... அதாவது, வணக்கம் செலுத்துவது புகழ்ந்து பாராட்டுதற்குரிய ஒன்றா? உலக அளவில் புகழ் பெற்றதா?[புகழ் வணக்கம்> புகழத்தக்க, அல்லது புகழ் பெற்ற, அல்லது புகழ் வளர்க்கும் வணக்கம்].
இவர்கள் ‘புகழ்’ஐ வணங்குகிறார்களா? புகழ் வணங்குவதற்கு உரியதா?
‘புகழ்’ என்பது ஒருவரின் போற்றத்தக்க, அல்லது பாராட்டத்தக்கப் பணியை அடையாளப்படுத்தும் ஒரு சொல் ஆகும்.
பாராட்டுவதற்குப் பயன்படும்[பாராட்டத்தக்கவை மேலே பட்டியலிடப்பட்டுள்ளன] ஒரு சொல்லை வணங்குவது, அல்லது பகழ்வது என்பது அறிவுடைமை ஆகாது.
மதிக்கத்தக்க முன்னோர்களை நினைவுகூரும்போது 'வணங்குகிறோம்' என்று சொல்லி, அவர்கள் அறிவுறுத்தியபடி வாழ்ந்துகாட்டுவதுதான் முக்கியம்; ‘புகழ் வணக்கம்’ செலுத்தி, ஏற்கனவே புகழ் பெற்றுவிட்ட அவர்களின் புகழ் வளர்ப்பதாகச் சொல்லிக்கொள்வது[ம்] தேவையற்றது.
ஆக, மேற்கண்டவர்களின் செயல்பாடுகள் எவ்வகையிலும் ஏற்கத்தக்கவை அல்ல.
பொருளறிந்து சொற்களைப் பயன்படுத்துவது, பொதுமக்களுக்கு மட்டுமல்ல, பிரபல அரசியல்வாதிகளுக்கும் உரிய கடமை ஆகும்.