வெள்ளி, 25 செப்டம்பர், 2026

ஜோசப் மதுராந்தகம் பரப்புரை... ‘அனுமதி 5000 பேருக்கு மட்டும்’ என்னும் கட்டுப்பாடு ஏன்?

 பிரபல நடிகரும் ஒப்பற்ற உலகப் புகழ் தமிழினத் தலைவரும் ஆன ஜோசப்பின் பரப்புரைக் கூட்டம் என்றாலே, லட்சக்கணக்கில் மக்கள் வந்து குவிந்து, அவரின் அழகு முகத்தைக் கண்டு கண்டு புளகாங்கிதப்படுவதும், தேர்தலில் தவறாமல் அவரின் விசில் சின்னத்திற்கே வாக்களிப்பதும் வழக்கமான ஒன்று.

ஆயிரக் கணக்கில் காவல்துறையினரைக் குவித்துக் கட்டுப்படுத்த முயன்றாலும் அது முழுத் தோல்வியில்தான் முடியும்.

இது தெரிந்திருந்தும், ரசிகப் பெருமக்களின் எண்ணிக்கையை 5000 என்று மட்டுப்படுத்தியதற்கான காரணம், கூட்ட நெரிசலைக் குறைத்து அசம்பாவிதங்களைத் தவிர்க்க என்று கூறப்பட்டாலும் அது ஏற்கத்தக்கது அல்ல.

அது ‘தவெக’ தலைவருக்கும் புஸ்ஸி, ஆதவ் என்னும் பக்கவாத்தியங்களுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.

அந்த ரகசியம்.....

‘ஜோசப் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததால் கொலை, கொள்ளை, போதைப்பொருள் புழக்கம் போன்றவையும், பாலியல் குற்றங்களும் அதிகரித்துள்ளதாகச் சொல்லப்படும் நிலையில், தனக்குள்ள செல்வாக்கு மிகவும் குறைந்து, பரப்புரைக் கூட்டத்திற்கு வருவோரின் எண்ணிக்கை வெகுவாகச் சரியும்’ என்னும் அச்சம்தான்!

அந்த அச்சமே ‘5000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்’ என்னும் அறிவிப்புக்கான காரணம் ஆகும்!