பக்கவாதம்(Stroke) என்பது மூளை & இரத்த நாளங்கள் சார்ந்த ஒரு தீவிரமான நோய்(Cerebrovascular Disease) ஆகும். இது அவசர மருத்துவச் சிகிச்சையால்(Medical Emergency) மட்டுமே முழுமையாகக் குணப்படுத்துவதற்கான நோய் ஆகும்.
பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
செவ்வாய், 22 செப்டம்பர், 2026
தற்காலிகப் பக்கவாதம்(Transient Ischemic Attack - TIA / Mini-Stroke)?
மருத்துவ ரீதியாக, மூளையின் ஒரு பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படும்போது அல்லது மூளையில் உள்ள இரத்த நாளம் வெடித்து இரத்தக்கசிவு ஏற்படும்போது இந்நோய்[பக்கவாதம்] ஏற்படுகிறது. இதனால் மூளைச் செல்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனும் ஊட்டச்சத்துக்களும் கிடைக்காமல், அவை சில நிமிடங்களிலேயே இறக்கத் தொடங்குகின்றன. இக்காரணத்தால்தான் அவசரக் காலச் சிகிச்சை[தாகுதலுக்கு உள்ளான சில மணி நேரங்களில் மருத்துவரை அணுகுதல் அவசியம்] தேவைப்படுகிறது.
பக்கவாதத்தில் முக்கியமாக மூன்று வகைகள் உள்ளன:
1.இஸ்கிமிக் பக்கவாதம்(Ischemic Stroke): இரத்த உறைவால் மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு உருவாதல்(இதுவே பெரும்பாலானோருக்கு ஏற்படுகிறது) காரணம் ஆகும்.
2.ஹெமராஜிக் பக்கவாதம்(Hemorrhagic Stroke): மூளையில் உள்ள இரத்தக் குழாய் வெடித்து ரத்தக்கசிவு ஏற்படுவது காரணம்.
3.தற்காலிக அல்லது நிலையற்ற இஸ்கிமிக் தாக்குதல் (Transient Ischemic Attack - TIA / Mini-Stroke). இது மூளைக்கான இரத்த ஓட்டம் மிகச் சில நிமிடங்களுக்கு மட்டும் தடைப்பட்டுப் பின் சரியாகும் நிலையாகும்.
இவற்றின் முக்கிய அறிகுறிகள்:
*சிரிக்கும்போது ஒரு பக்க முகம் கோணலாக மாறுதல்.
*மேலே உயர்த்த முடியாத அளவுக்குக் கைகள் பலவீனமடைதல்.
*பேசுவதில் தடுமாற்றம் அல்லது வார்த்தைகள் தெளிவில்லாமல் இருத்தல்.
இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக(தாமதிக்காமல்) மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு(சர்க்கரை நோய்), அதிகக் கொலஸ்ட்ரால், புகைபிடித்தல் போன்றவை பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் இதன் தாக்குதலிலிருந்து பாதுகாத்தலும் முழுமையாகக் குணமடைதலும் சாத்தியமாகும்.
பின்னெச்சரிக்கை:
திங்கள், 21 செப்டம்பர், 2026
‘சமூக நீதி’யின் பொருள் அறியாத தற்குறிகளின்[ஜோசப் தலைமை] வெற்றிக் கூட்டணி!
சமூக நீதி என்பது சாதி, மதம், இனம், பாலினம் போன்ற எந்தவித வேறுபாடும் இன்றி, சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமமான உரிமைகளும் வாய்ப்புகளும் கிடைப்பதை உறுதி செய்வதாகும்[கூகுள்***].
எனவே, ‘மதச் சார்பின்மை’ என்பது ‘சமூக நீதி’க்குள் அடங்கும்.
இதைப் புரிந்துகொள்வதற்கான அறிவு ‘தவெக’ ஜோசப் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்களில் எவருக்கும் இல்லை.
இருந்திருந்தால்.....
அவர்கள் அவர்களின் கூட்டணிக்கு, ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி'[காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்> IUML ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன] என்று பெயர் சூட்டியிருக்கமாட்டார்கள்[‘சமூக நீதிக் கூட்டணி’ என்னும் பெயரே போதுமானது].
கூட்டணிக்கு ‘வெற்றி’ சேர்த்திருக்கிறார்கள்.
அரசியல்வாதிகள் ‘வெற்றி’ பெறுவதைத்தான் விரும்புவார்கள். தோல்வியைத் தழுவுவதற்குக் கூட்டணி[தோல்விக் கூட்டணி] உருவாக்குவார்களா என்ன?
சிந்திக்கும் அறிவில்லாத கட்சித் தலைவர்கள் இப்படிப் பெயர் சூட்டியிருப்பதறிந்து, தமிழ்நாட்டவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக மக்களும் நகைக்கிறார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

.jpg)