சனி, 19 செப்டம்பர், 2026

‘அது’ விசயத்தில் '20'களுக்குச் சவால்விடும் ‘84’ வயது ‘ஜெம் கிரானைட்’ வீரமணி!

84 வயதிலும் ‘அது’ விசயத்தில் வரலாறு படைத்துள்ள ‘ஜெம் கிரானைட்’ வீரமணி அவர்கள், எங்கள் மாவட்டத்துக்காரர்[திருச்செங்கோடு> நாமக்கல் மாவட்டம்] என்பதில் பெருமைப்படுவதா வெட்கப்படுவதா என்னும் கேள்விக்கு விடை கிடைக்காத நிலையில், அவர் குறித்த ஊடகச் செய்திகளில்[100% உண்மை?] மிக மிக மிகச் சுவாரசியமானவை பின்வருமாறு:

வழக்கு நிலுவையில் இருப்பதால், மேற்கண்ட நிகழ்வு குறித்த விமர்சனம் தவிர்க்கப்படுகிறது.

நூற்றுக்கணக்கான இளசுகளை அந்தப்புரங்களில் அடைத்துவைத்து, சுகபோகிகளாக வாழ்ந்த அந்தக் கால மன்னர்கள்[பெரும்பாலோர்?] மனத்திரையில் காட்சியளிக்கிறார்கள்!

வியாழன், 17 செப்டம்பர், 2026

புரியாமல் பேசிப் பிரபலம் ஆன ‘ஜக்கி’ என்னும் சல்லாப உல்லாச கில்லாடிச் சாமியார்!!!

"பிரபஞ்சத்தின் பரிபூரணத்திற்குச் செவிசாய்ப்பவருக்கு, அனைத்தும் இசையாகவே அமைகிறது" https://x.com/SadhguruTamil/status/2100049288315470275/photo/1[copy & paste]

‘பிரபஞ்சம்’ என்றால் நமக்குப் புரியும். இது.....

‘கணக்கிடப்படாதவையும் பெரும் எண்ணிக்கையிலானவையும் ஆன நட்சத்திரங்களையும் கோள்களையும்[+அறிவியலாளரால் கண்டறியப்படாத மேலும் பலவற்றையும்] உள்ளடக்கிய, அகன்று விரிந்து பரந்து கிடக்கிற, எல்லை கண்டறிய இயலாத அண்டவெளி’  ஆகும்.

மேற்கண்ட சத்துக்குரு எனப்படும் ஜக்கி, இந்தப் பிரபஞ்சத்திற்குப் ‘பரிபூரணம்’ உண்டு என்கிறார்.

இரண்டு சொற்களையும் இணைத்தால் அது ‘பிரபஞ்சப் பரிபூரணம்’ ஆகிறது.

பரிபூரணம் என்றால் ‘முழுமையானது’ என்று பொருள்.

‘பரிபூரணமான[முழுமையான] பிரபஞ்சம்’ என்று குறிப்பிடாமல், ‘பிரபஞ்சத்தின் பரிபூரணம்’ என்கிறார்.

அதென்ன ‘பிரபஞ்சத்தின் பரிபூரணம்’?

இவருக்கு மட்டுமல்ல, வேறு எவருக்குமே இது புரியாது.

புரிந்துகொள்ள இயலாத இந்தப் பரிபூரணத்திற்குச் செவி சாய்ப்பவருக்கு அது[அனைத்தும்?] இசையாக அமைகிறது என்கிறார், 

அதென்ன  இசை? எப்படியிருக்கும்? அந்த இசை இன்பத்தைக்கேட்டு இன்புற்றவர் யார்?

எவருமில்லை, இவரை[பொய்யன்]த் தவிர.

உலகில் உள்ள அனைத்து நாடுகளுமே, அனைத்துவிதக் குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்குகின்றன.

பகுத்தறிவைச் சிதைக்கிற இந்தப் போலி ஆன்மிக ஆசாமிக்கு எந்தவொரு நாடும்[இந்தியா உட்பட] எந்தவொரு தண்டனையும் வழங்கியதில்லை. 

மாறாக, நாடுகள் பலவும் பெருமளவில் வசதிகளையும் புகழையும் வாரி வழங்கியிருக்கின்றன; வழங்குகின்றன.

கவர்ச்சியாகத் தாடி&மீசை வளர்த்து, ஆடம்பரமாக ஆடை உடுத்து, உலகை ஏமாற்றத் தெரிந்த அபூர்வப் போலிச் சாமியார் இந்தச் சத்துக்குரு!