எனது படம்
ஒருவன் கெட்டழிவதற்கான சூழ்நிலை உருவானால், “அவனுக்கு இப்போது கேடுகாலம்” என்பார்கள் நம் முன்னோர்கள். அது வெறும் அனுமானம்தான் என்றாலும், இப்போதைய அரசியல் சூழ்நிலை தமிழினத்துக்கான கேடுகாலம் நெருங்குகிறதோ என்று எண்ணத் தூண்டுகிறது!

திங்கள், 15 ஜூன், 2026

‘முகாம்பிகைக்கு ஜோசப் வெள்ளி வாள் காணிக்கை’... அலங்கரிக்கவா, அடகு வைக்கவா, விற்கவா?!

கோயில்களுக்குச் செல்லும் பக்தர்கள் உண்டியலில் பணம் போடுகிறார்கள்; தங்களின் எடைக்கு ஈடாக[துலாபாரம்] விரும்பும் பொருளைச் சாமிகளுக்குச் சமர்ப்பிக்கிறார்கள்; முடிக் காணிக்கை செலுத்துவதும் வழக்கத்தில் உள்ளது.

இவையெல்லாம் பொதுவாக மக்களுக்கோ, குறிப்பாகப்  பக்தர்களுக்கோ பயன்படுத்தப்படுகின்றன என்று நம்பலாம்.

அண்மையில், முகாம்பிகை[கர்னாடகா]யை வழிபடச் சென்ற நம் முதல்வர் ஜோசப் அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட மரியாதைகளை ஏற்றுக்கொண்டதோடு, ​​1.6 கிலோ எடையுள்ள வெள்ளி வாள்[ரூ. 4,32,000] ஒன்றைக் கோயிலுக்குக் காணிக்கையாக[நன்கொடை] வழங்கினார் என்பது செய்தி.

எதற்கு இந்த வெள்ளி வாள் காணிக்கை?

//வெற்றி மற்றும் தர்மத்தின் அடையாளமாக 1.6 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான வெள்ளி வாளைக் காணிக்கையாகச் செலுத்தினார் முதல்வர் ஜோசப். மேலும், தனது ஜாதகத்தில் சுக்கிரத் தசை நடைபெறுவதால், அதற்கான பரிகாரமாக இந்த வெள்ளி வாளை[இது எதற்கு? வெற்று அலங்காரத்திற்கா? அம்மன் அரக்கர்களுடன்(!)போர் புரிவதற்கா? கோயிலுக்கு வருமானம் குறைந்தால் அடகு வைக்கவா, அல்லது, விற்றுப் பணம் பண்ணவா?] அம்மனுக்கு சமர்ப்பித்துச் சிறப்பு வழிபாடுகளையும் அவர் மேற்கொண்டார்// என்பது ஊடகங்கள் வாயிலாக அறியப்படும் காரணம் ஆகும்.

மூடநம்பிக்கைகளின் ஒட்டுமொத்தப் புகலிடமா இவர்? இவரா இன்னும் ஐந்தாண்டுகளுக்கு நம்மை ஆளப்போகிறார் என்று அளப்பரிய வேதனையுடன் கேட்கத் தோன்றுகிறது.

நாம் கேட்கவில்லை. கேட்க வேண்டியவர்கள் நம் மக்கள். இவர்கள் ஒருபோதும் கேட்கமாட்டார்கள் என்பது முதல்வர் ஜோசப்புக்கு அத்துபடியாய்த் தெரியும். 

                                 =====================     

https://www.msn.com/en-in/money/topstories/cm-vijay-offers-prayers-at-kollur-mookambika-temple-donates-1-600-kg-silver-sword/ar-AA25yvDg?ocid=msedgdhp&pc=NMTS&cvid=6a2eb17708144679a2be748a977a0711&ei=92