புதன், 24 ஜூன், 2026

பெரியாரை அறியாத தற்குறி முதலமைச்சர் ஜோசப்!!!

திராவிட அரசியலின் தந்தை என்று போற்றப்படும் பெரியார் ஈ.வெ.ராமசாமியின் பரந்த சமூகக் கொள்கைகளைத் தனது கட்சி ஏற்றுக்கொண்டாலும், நாத்திகம் மற்றும் மத நம்பிக்கையை நிராகரிப்பது குறித்த அவரது கருத்துக்களை ஏற்கவில்லை என்று தமிழ்நாடு முதல்வர் சி.ஜோசப் விஜய் திங்கள்கிழமை சட்டமன்றத்தில் தெரிவித்தார்[TVK embraces Periyar's social ideals, not his atheism: Vijay in Assembly]. 

‘தமிழர் தந்தை’ என்று போற்றப்படும் பெரியாரின் சமூகக் கொள்கைகள் அனைத்துமே கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்துதான் பிறந்தன.

ஜாதியின் பெயரால் மனிதனை மனிதன் தொடக் கூடாது; கண்ணில் படக் கூடாது; தெருவில் நடக்கக் கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது; கோயிலுக்குள் நுழையக் கூடாது என்னும் இவையெல்லாம் ஆரிய வர்ணாசிரம மனுதர்மக் கோட்பாட்டின்படி கடவுளின் பெயரால் கற்பிக்கப்பட்டன… படுகின்றன. 

பிறப்பால் மனிதனின் ஏற்றத்தாழ்வு, ஜாதியப் படிநிலை, ஒடுக்கு முறைக் கட்டமைப்பு,  ஆரியச் சித்தாந்தம், வர்ணாசிரமம், மனுதர்மக் கோட்பாடு ஆகியவை கடவுளின் பெயரால் பாதுகாக்கப்பட்டன… படுகின்றன.

இக்காரணங்களால்தான் கடவுள் நம்பிக்கையைச் சாடினார் பெரியார்; வழிபாட்டைக் கண்டித்தார்[“ஜாதி என்ற கடும் விஷம் கொண்ட நாகப்பாம்பைக் கொல்வதற்காக அடித்தபோது, அது ஓடிப்போய் கோயிலின் கருவறைக்குள் நுழைந்து கொண்டது” என்றார்].

பெரியார் குறித்த உலகறிந்த இந்த உண்மைகளை அறியாமல், சட்டமன்றத்தில் உளறியிருக்கிறார் முதல்வர் ஜோசப்.

‘பெரியார்’ என்னும் சொல்லை இவர் உச்சரிப்பதுகூட அவரை அவமதிக்கும் செயலாகும்.

திங்கள், 22 ஜூன், 2026

சல்லாபச் சாமியார்கள் கும்பிடும் ‘சாமிகள்’ ஆன கதை!!!

ஒரு பொறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிச்சி, அங்கே துக்கிளியூண்டு கீத்துக்கொட்டகை போட்டு, அதில் ஒரு சாமி சிலையை வெச்சி, கையில் ஒரு வெங்கல மணியும் தீபாராதனைத் தட்டுமா தொழிலை ஆரம்பிக்கீறாங்க வேலைவெட்டி இல்லாதவனுக.

ஆரம்பத்தில் எட்ட நின்னு வேடிக்கை பார்த்துட்டுப் போற பொதுமக்கள் ‘எதுக்கும் கும்பிட்டு வைப்போம்’னு கும்பிட ஆரம்பிக்கிறாங்க.

கையில் காசு உள்ளவன் நின்னு கும்பிட்டு உண்டியலில் பணம் போட்டுட்டுப் போனா, அதைப் பார்த்துட்டு மத்தவனும்  போடுறான்.

“இந்தச் சாமியை வேண்டிகிட்டா இருக்கிற தோசம் எல்லாம் கழிஞ்சிடுது; நினைக்கிற காரியம் கைகூடுது”ன்னு நாலு முட்டாளுங்க சொல்லிவைக்க, சாரி சாரியா மக்கள் வந்து கும்பிட ஆரம்பிச்சுடுறாங்க.

சின்னஞ்சிறு உண்டியல் மாயமாகிப் பெரியதொரு ராட்சத உண்டியல் அந்த இடத்தை ஆக்கிறமிக்குது.

கீத்துக் கொட்டகை இருந்த இடத்தில்  பிரமாண்ட அடுக்குமாடிக் கோயில்! அக்கம்பக்கத்தில் இருக்கிற பயன்பாட்டில் இல்லாத அரசாங்க நிலமும் கோயிலுக்குச் சேர்க்கப்படுது[அரசாங்கம் கண்டுகொள்வதில்லை> சாமி கண்ணைக் குத்திடும்!].

நாட்கள் செல்லச் செல்ல கோயில் சொத்து கோடிக்கணக்கில் பெருகுது. கோயிலுக்கு என்பதைவிட, கோயிலை உருவாக்கிய சாமியாருக்கு என்று சொல்வதே பொருத்தமா இருக்கும். 

நம் நாட்டில் சாமியார்கள் பலர் கோடி கோடி கோடீஸ்வரச் ‘சாமிகள்’ ஆன கதை இதுதான்.