வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

கருணைக் கடவுள்களும் கொடுத்துவைத்த கழுதையும்!!!

விநாயகர்: எலி(மூஞ்சூறு)

முருகன்: மயில்

சிவன்: காளை(நந்தி)

மகா விஷ்ணு: கருடன்(பறவை) மற்றும் ஆதிசேஷன்(பாம்பு)

துர்கை / பராசக்தி: சிங்கம்

சரஸ்வதி: அன்னப்பறவை

மகாலட்சுமி: ஆந்தை

சனி பகவான்: காகம்

மகேஸ்வரன் / பைரவர்: நாய்

எமதர்மன்: எருமை

இந்திரன்: ஐராவதம்(வெள்ளை யானை)  

விநாயகர் முதலான கடவுள்களைச் சுமந்து திரிந்த… திரியும்[?] எலி முதலான மேற்கண்ட விலங்குகளும் பறவைகளும் கொடுத்துவைத்தவை எனலாம்.

இவற்றுக்கான நல்வாய்ப்பை எண்ணி எண்ணி நான் வியப்பதுண்டு.

இதற்கிடையே, பொறுமையின் மகத்தான அடையாளமும், பொதி சுமப்பத்தில் ஈடு இணையற்றதும், குப்பை மேட்டிலும் சாம்பல் குவியலிலும் உருண்டு புரண்டு குதூகலித்துச் சுகம் காணுவதுமான கழுதையை, எந்தவொரு இந்துமதக் கடவுளும் தன் வாகனமாகப் பயன்படுத்தாது ஏன் என்னும் கேள்வி, என் அடி நெஞ்சை நெருடி நீங்காத பெரும் கவலையில் ஆழ்த்துவதும் உண்டு.சற்றும் எதிர்பாராத வகையில், ‘கடவுள்களும் கழுதை வாகனமும்’ என்று கூகுளில் தட்டச்சு செய்து தேடியபோது கிடைத்த தகவல்கள் என்னை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கின.

தகவல்கள்:

பெரியம்மை போன்ற நோயிலிருந்து காக்கும் சீத்தலா தேவி கழுதையை வாகனமாகக் கொண்டுள்ளார். நவராத்திரியில் வணங்கப்படும் காளராத்ரி தேவி கழுதையின் மீது பவனி வருவது வழக்கம். ரிக் மற்றும் இதர வேதங்களின்படி இந்திரனுக்கும் அக்னி பகவானுக்கும்கூட இந்தக் கழுதைதான் வாகனம்.

தேடக் கிடைத்த இன்னொரு தகவலால் நீங்காத பேரின்பத்தில் திளைத்தேன் நான். அது…..

இயேசுநாதர்[பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இவர் கடவுளின் மகனாக அவதரித்தார் என்று நம்புகின்றனர்> விக்கிப்பீடியா].  எருசலேமுக்குச் செல்லும்போது எளிய முறையில் பயணம் செய்யக் கழுதையைப் பயன்படுத்தியுள்ளார்[https://www.quora.com/Did-Jesus-ride-both-a-donkey-and-a-colt-into-Jerusalem].

மேற்கண்ட தகவல்களைப் படித்ததிலிருந்து இந்த வினாடிவரை, அற்ப மானிடனாகப் பிறக்காமல், மேற்கண்ட உயிரினங்களில் ஒன்றாகவோ, குறைந்தபட்சம் ஒரு கழுதையாகவோ நான் பிறந்திருக்கலாம். அவ்வாறு பிறக்காததால் உண்டான ஏக்கம் என்னை வருத்திக்கொண்டிருக்கிறது.

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

‘கடவுளின் கடவுள்!!!’... கூகுள் ஜெமினி[Ask Gemini] அளித்த மதிப்புரை!

 //கடவுளின் கடவுள்!!! https://kadavulinkadavul.blogspot.com வலைப்பக்கத்திற்கு ஒரு மதிப்புரை// -இது ‘கூகுள் ஜெமினி[Ask Gemini]யிடம் வைத்த வேண்டுகோள்[13.08.2026]. அது அளித்த பதில்[திருத்தம் ஏதும் செய்யப்படவில்லை]: 

கடவுளின் கடவுள்! வலைப்பதிவு (kadavulinkadavul.blogspot.com) பற்றிய ஒரு விரிவான மதிப்புரை

மையப்பொருள் & நோக்கம்

இந்த வலைப்பதிவு முக்கியமாக பகுத்தறிவு, ஆன்மீகம், அறிவியல், மனித உளவியல் மற்றும் சமூக சிந்தனைகளை மையமாகக் கொண்டு இயங்குகிறது. 'கடவுள்', 'ஆன்மா', 'மூடநம்பிக்கை' போன்ற மரபு சார்ந்த தலைப்புகளைப் பகுத்தறிவுப் பார்வையுடன் கேள்விக்குட்படுத்துவதும், சிந்திக்கும் ஆற்றலைத் தூண்டுவதுமே இதன் முதன்மை நோக்கமாகும்.

உள்ளடக்க சிறப்பம்சங்கள்

பல்வேறு தலைப்புகள்: கடவுள் மற்றும் பகுத்தறிவு மட்டுமின்றி, தமிழ்/தமிழர் பண்பாடு, பெண் விடுதலை, காதல்/காமம், கதைகள் மற்றும் உடல்நலம் போன்ற பரந்த அளவிலான தலைப்புகளில் கட்டுரைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

  • எளிய நடை & கவித்துவ சிந்தனை: "நான் பொறாமையில் புழுங்குகிறேன்" போன்ற பதிவுகளில், நிலையாமையையும் கடவுள் குறித்த கருத்தையும் எளிய வரிகளில் கவித்துவமாக வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.

  • அறிவியல் & ஆரோக்கியம்: "சிந்திக்கும் ஆற்றலை அதிகரிக்க உதவும் பயிற்சிகளும் உணவுகளும்" போன்ற பதிவுகள் வழியாக டோபமைன் (Dopamine) நரம்புக்கடத்தி, உடற்பயிற்சி மற்றும் உணவுகளின் முக்கியத்துவத்தை அன்றாட வாழ்க்கைக்கு உதவும் வகையில் எளிமையாக விளக்குகிறது.

நிறைகள்

தொடர்ச்சி (Consistency): பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருவது ஆசிரியரின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.

  • சிந்தனைத் தூண்டல்: வாசகர்களை எதையும் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்க தூண்டும் வகையில் வினாக்களையும் கருத்துகளையும் முன்வைக்கிறது.

மேம்படுத்தக்கூடிய இடங்கள்

பக்க வடிவமைப்பு (Layout): பிளாக்கரின் (Blogger) பழைய பாணி வடிவமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதால், நவீன மொபைல் போன்களுக்கு ஏற்ப வாசிப்பு அனுபவத்தை (Mobile Responsiveness) இன்னும் மேம்படுத்தலாம்.

பகுத்தறிவுச் சிந்தனைகளையும், அன்றாட ஆரோக்கிய விழிப்புணர்வையும் ஒரே இடத்தில் விரும்பி வாசிக்கும் வாசகர்களுக்கு இது ஒரு பயனுள்ள வலைப்பதிவு.