திங்கள், 2 நவம்பர், 2026

அரசுச் செலவில் அனுபவியுங்க ஜோசப், ஆசைதீர அனுபவிச்சுடுங்க!

“ஜோசப் விமானம் பார்க்கவே பயங்கரமா இருக்கு!” என்று ஜோசப் திருச்சிக்குப் பயணித்த விமானத்தைப் பார்த்துப் பிரமிக்கிறார் அவரின் ஒரு ஊடக ஊதுகுழலார்.

ஒற்றை நபராகச் சென்னையிலிருந்து[?] திருச்சி வருவதற்கு இவருக்கு இத்தனைப் பெரிய ஜெட்[?] விமானமா என்னும் கேள்வி எழும்பியபோது, எம் அடிவயிறு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடம்பும் தீப்பற்றி எரிவது போல் தகித்தது.

அரசாட்சி செய்பவர் அரசுப் பணத்தை, எப்படியும் எவ்வளவும் சுயநலத்துக்காகப் பயன்படுத்தலாமோ என்று கேட்டு எம் அடிமனம் அங்கலாய்த்தது.

எம்மைப் போன்ற அனாமதேயங்கள் கேட்பதால் பயன் ஏதுமில்லை.

கேட்க வேண்டியவர்கள் பொதுமக்கள்.

எப்போது கேட்பார்கள்? எப்போது கிளர்ந்தெழுந்து போராடி, முதல்வரென்பவர் அந்தரத்திலிருந்து குதித்த அதிசயப் பிறவியல்ல, மக்கள் பணியாற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதாரணத் தொண்டர் என்பதை ஜோசப்புக்கு உணர்த்துவார்கள்?! 

தனி விமானதில் பறந்துவந்தது.....
புதுக்கோட்டை அப்பிராணிகளை அகலக் கை விரித்து அரவணைத்து வாக்குச் சேகரிக்கத்தான்!

ஞாயிறு, 1 நவம்பர், 2026

அதென்ன 'ப்ரூரிட்டஸ் அனி'(pruritus ani]?!

மலக்குடல் பகுதியில் ஏற்படும் அரிப்புதான் 'ப்ரூரிட்டஸ் அனி'  என்று அழைக்கப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, ஆண்களில் மூன்றில் இரு பங்கினருக்குப் 'ப்ரூரிட்டஸ் அனி'(pruritus ani) பாதிப்பு ஏற்படலாம். இது இரவு நேரங்களிலோ அல்லது மலம் கழித்த பிறகோ தீவிரமடையக்கூடும்.

சரியான சுகாதாரத்தைப் பேணாததும், சில குறிப்பிட்ட உணவுகள் & பானங்களால் ஏற்படும் ஒவ்வாமையும் இதற்கான காரணங்கள் ஆகும். சில உடல்நலப் பிரச்சினைகளும் காரணமாக அமையலாம்.

மலக்குடல் பகுதியில் ஏற்படும் அரிப்பு குறித்து மற்றவர்களிடம் பேசுவதை யாரும் விரும்பாததால், இந்தப் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை குறையாமலிருக்கிறது.


இது எந்த வயதினருக்கும் ஏற்படலாம் என்றாலும், 40 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்களிடையே இது மிகவும் பொதுவாகக் காணப்படுகிறது.


மூலம்(hemorrhoids), மலக்குடல் பகுதியில் ஏற்படும் வெடிப்புகள்(anal fissures), நீரிழிவு நோய், எக்ஸிமா(eczema), சோரியாசிஸ்(psoriasis) போன்ற தோல் பாதிப்புகள் உள்ளவர்களுக்கு இது ஏற்பட வாய்ப்பு அதிகம்.


சிறு குழந்தைகள் உள்ள குடும்பங்களில் பொதுவாகக் காணப்படும் ஒரு வகை ஒட்டுண்ணிப் புழுக்களும்(threadworms) இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். 


அரிப்பு ஏற்படும்போது அதைச் சொறிய வேண்டும் என்று தோன்றலாம். ஆனால் அவ்வாறு செய்வதைத் தவிர்ப்பதே நல்லது; ஏனெனில், இது தோலில் பாதிப்பை ஏற்படுத்தி, தொற்றுநோய்க்கும் வழிவகுக்கக்கூடும்.


கிளீவ்லேண்ட் கிளினிக்கின்(Cleveland Clinic), "ஆசனவாயிலில் ஏற்படும் அரிப்பு, அந்த இடத்தை மீண்டும் மீண்டும் சொறிய வேண்டும் என்ற கட்டுப்படுத்த முடியாத தூண்டுதலை உருவாக்குகிறது. இருப்பினும், சொறிவதால் நீண்ட கால நிவாரணம் கிடைக்காது” என்கிறது.


"ஆசனவாய்ப் பகுதியைச் சொறிவது மேலும் எரிச்சலை உண்டாக்கி, அரிப்பைக் குறைப்பதற்குப் பதிலாக அதை மோசமாக்கக்கூடும். இப்பகுதியில் உள்ள தோல் மிகவும் மென்மையானது. அதே சமயம் நம் நகங்கள் தோலைவிட வலிமையானவை என்பது அறியத்தக்கது.


எவ்வளவு அரிப்பு இருந்தாலும், அந்தப் பகுதியைச் சொறியாமல், மருத்துவரை அணுகுவதே ஏற்புடையது.


சிகிச்சையைப் பொருத்தவரை, முதல் படியாக ஆசனவாய் பகுதியைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். மலம் கழித்த பிறகு அந்தப் பகுதியை நன்கு சுத்தம் செய்து, உலர வைத்து, மருந்துகள் கலக்காத டால்கம் பவுடரைப்(talcum powder) பயன்படுத்தலாம். அந்தப் பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சனை தீரவில்லை என்றால், பிரத்யேகமான கிரீம்கள், களிம்புகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள்(antibiotics), பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.


இது விசயத்தில், 'மெத்திலீன் புளூ'(methylene blue) என்னும் ஊசி போடும் சிகிச்சையை மருத்துவர்கள் கையாளுகிறார்கள். 


ஆக, அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகுவதே பாதுகாப்பானது.


https://www.msn.com/en-gb/health/diseases-and-conditions/two-thirds-of-men-have-medical-condition-known-as-pruritus-ani-here-s-who-s-most-at-risk/ar-AA2gli5Q?ocid=msedgdhp&pc=U531&cvid=1cba54134005436be17d4f607381c691&ei=74