"விஜய் வரும் வழியில் அவரது பிரச்சார வாகனத்தை யாரும் பின்தொடரக் கூடாது" என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அக்கட்சியின் தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் முக்கிய அறிவுறுத்தலையும் வேண்டுகோளையும் விடுத்துள்ளார்[செய்தி].
2ஆம் புரட்சித் தலைவர் வரும் வழியில் அதிகாலையிலிருந்தே வாகனங்கள் செல்லக்கூடாது என்கிறார் புஸ்ஸி.
இதன் மூலம் அறியத்தக்கது என்னவென்றால்.....
வேலைக்குச் செல்லாமல் மக்கள் அனைவரும் வீட்டு வாசலில் நின்று, தலைவர் பவனி வரும்போது கையசைத்து வரவேற்பதோடு, பூமாரி பொழிதல்[மொட்டைமாடியிலிருந்து> இருந்தால்] அவசியம்.
2ஆம் பு.தலைவர் வலம்வரும் ராஜபாட்டையில் எந்தவொன்றின் குறுக்கீடும் இல்லாமல் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்துக் கண்காணிப்பார்கள்.
சாலைகளின் இருபுறமும் அண்டை மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்படும் கூலிப்படையினர் குவிக்கப்படுவார்கள்.
அந்தக் காலத்து மன்னாதி மன்னர்களுக்கு இணையாக ‘மக்கள் தலைவர்’ பவனி வருவதை, தொ.க., காணொலிகள் ஆகியவற்றின் மூலமாகக் கண்டு கண்டு கண்டு களித்துக் கண்ணீர் பெருக்குவார்கள் கோடானு கோடி மக்கள்.
இடைத்தேர்தலில் மதுராந்தகத்து வாக்காளர்கள் அத்தனைப்பேரும், தலைவரின் ஆசி பெற்ற வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள்.
புதிய பு.தலைவரின் பொற்கால ஆட்சி தமிழ்நாட்டில் தொடரும்!
வாழ்க... வெல்க தமிழ்நாட்டின் நிரந்தரப் புரட்சித் தலைவர்!!
.jpg)