வெள்ளி, 2 அக்டோபர், 2026

திரிஷா முன்னிலையில் ‘திருஷ்டிப் பரிகார யாகம்’ நடத்துங்கள் ஜோசப்!

மேற்கண்ட நிகழ்வை ‘வெற்றிப் பயணம்’ தொடக்க விழா என்று சொல்வதைக் காட்டிலும், ஜோசப்பின் இடைத்தேர்தலுக்கான வெற்றிப் பயணம் என்பதே பொருத்தமாக அமையும்.

பெண்ணின் மனதைப் படிப்பதில் இவருக்கு இணை இன்றளவில் எவருமே இல்லை எனலாம்[ஸ்டாலின், எடப்பாடி எல்லாம் ஜோசப்பின் முன்னால் வெறும் கத்துக்குட்டிகள்].

கடமையே கண்ணாக ஜோசப் ‘கிளு கிளு’ குமரிகளுக்கு இலவசப் பயணச்சீட்டு வழங்குவதும், அவர்கள் ‘குளு குளு’ மனத்தராகி, பூரித்த வதனங்களில் வெட்கம் பொங்கி வழிந்திடக் குதூகளிப்பதும் நம்மைப் பரவசத்தில்ஆழ்த்தின. 

இலையுதிர் பருவக் கிழவிகள் பலரும் ஜோசப்புக்குத் ‘திருஷ்டி கழிப்பது’ நம் வாழ்நாளில் கண்டறியாத காட்சிகள்.

திமுக, அதிமுக, சீமானின் நாம் தமிழர், பொதுவுடைமைக் கட்சிகள் என்று களத்தில் உள்ள அத்தனைக் கட்சிகளும் குப்புற விழுந்து மண் கவ்வுவது 1000% உறுதி.

முதல்வருக்கு நம் பரிந்துரை.....

கிழவிகள் திருஷ்டி கழிப்பது போதாது; வீடு திரும்பியது ஜோதிடர்களை வரவழைத்து, திரிஷா முன்னிலையில் திருஷ்டிப் பரிகார யாகம் நடத்துங்கள் ஜோசப்! 

மிக முக்கியக் குறிப்பு: அவசரப் பணி நிமித்தம் நண்பரைச் சந்திக்கச் செல்கையில், ‘வரைவு’[கவனக்குறைவால் பிழைகள் திருத்தப்படாமலும் செம்மைப்படுத்தப்படாமலும்] இடுகையாகப் பதிவாகிவிட்டது[பிழைகள் மட்டும் திருத்தப்பட்டன].

மிகவும் வருந்துகிறேன்.