சனி, 3 அக்டோபர், 2026

தேநீர் அருந்தி டிராக்டரில் உழுத ஜோசப் இதையும் செய்திருந்தால்.....

//மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில், வரும் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், நேற்று இரண்டாவது முறையாக, மதுராந்தகம் தொகுதியில் விஜய் பிரசாரம் செய்தார்…..

மொத்தம், 35 கிராமங்கள் வழியாகப் பிரச்சார வாகனத்தில் நின்றபடி ஓட்டுச் சேகரித்தார்.


ரசிகர்கள்[விசிலடிச்சான் குஞ்சுகள்] வீசிய பரிசுப் பொருள்களை லாவகமாகப் பிடித்தல் போன்ற சாகசங்களைச் செய்து அசத்தினார்.
எல்.எண்டத்துார் கிராமத்தின் வழியே சென்றபோது, திடீரென வாகனத்தில் இருந்து கீழே இறங்கி டீக்கடைக்குச் சென்றார். அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து, டீ குடித்தபடி அங்கிருந்தவர்களிடம் உரையாடினார். 


ராமாபுரம் கிராமத்திற்கு வந்தபோது திடீரென இறங்கிய விஜய், அங்கு வயலில் உழுதுகொண்டிருந்த டிராக்டரைச் சிறிது துாரம் ஓட்டினார். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களிடம் உரையாடினார். 


வழியில் சக்கர நாற்காலியில் இருந்த, மாற்றுத்திறனாளிகளைக் கண்டதும், கீழே இறங்கி அவர்களின் குறைகளை விஜய் கேட்டறிந்தார்//[செய்தி> தினமலம்].


இப்படிப் பார்வையாளர்களைப் பெருவியப்பில் ஆழ்த்திய முதல்வர் ஜோசப் மிக முக்கியமான ஒன்றைச் செய்யத் தவறினார்.


அது…..


வீதிவலம் வரும்போது கொஞ்சமே கொஞ்சம் கவனித்திருந்தால், அரிதாகச் சில பிச்சைக்காரர்கள்[பலரைக் காவல்துறையினர் அப்புறப்படுத்தியிருப்பார்கள்] அலுமினியத் தட்டேந்தித் தரையில் அமர்ந்து பிச்சையெடுப்பதை அவர் பார்த்திருக்கலாம். 


ஜோசப்பும் அவர்களுடன் அமர்ந்து தட்டேந்திப் பிச்சை எடுத்திருந்தால், கணக்கிலடங்காத ரசிகர்களும் பொதுமக்களும் கண்ணீர் வடித்துத் தேம்பித் தேம்பித் தேம்பி அழுதிருப்பார்கள்; அந்த ஆகப்பெரிய சோகம் இடைத்தேர்தலில் ஜோசப்பின் விசில் சின்னத்தில் வாக்குகளை வாரி வாரிக் குவித்திடும் என்பது 100% உறுதி.


https://www.dinamalar.com/news/premium-news/chief-minister-vijay-holds-road-show-in-villages-of-madurantakam-constituency/4338863