//பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு எப்படியெல்லாம் வியக்கிறீர்கள்? உங்கள் இருப்பை இந்தப் பிரபஞ்சத்தின் இருப்போடு ஒப்புமை செய்வதுண்டா?//[‘கோரா’> quora.com தளத்தில் கேட்கப்பட்ட கேள்வி]
பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தை வியந்த செபாஸ்டியன்[‘கோரா’ எழுத்தாளர்] அவர்கள், அதனுடன் இரண்டறக் கலந்ததோடு, அவர் தன்னை ஒரு பிரபஞ்சவாசி[நாமெல்லாம் நிலவுலகவாசிகள்]யாக அறிமுகப்படுத்துகிறார்!
[‘இயந்திரப் பொறியியல்’இல் பி.இ., அண்ணா பல்கலைக்கழகம்(2015ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்).
என்[செபாஸ்டியன்] முகவரி:
செபாஸ்டின் ஜேம்ஸ், தூத்துக்குடி, தமிழ் நாடு மாநிலம், இந்தியா நாடு, ஆசியக் கண்டம், பூமி, சூரியக் குடும்பம், பால்வெளி அண்டம்(Milky Way Galaxy> பால் வழி, பால்வழிப் பேரடை)), பிரபஞ்சம்(Observable Universe].
இறுதியில், “ஏதாவது பின் கோடு இருக்குதா என்று தெரியவில்லை” என்கிறார். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லலாம். ஹி...ஹி...ஹி!!!
***நிலவுலகவாசிகளாக, அற்பப் பிரச்சினைகளுக்கெல்லாம்[வெறும் கல்தூணில் தீபம் ஏற்றி அதைப் புனிதம் ஆக்குவது, இன்ன பிற] அடித்துக்கொள்கிற அடிமுட்டாள்களாகிய நாமெல்லாம் செபாஸ்டியன்[அறிவுஜீவி] போல் பிரபஞ்சவாசிகளாக ஆவது எப்போது?