கணவன் மனைவி | தகாத உறவு | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணவன் மனைவி | தகாத உறவு | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 நவம்பர், 2026

திருமணங்களும் திகிலூட்டும் ஆண்-பெண் தகாத உறவுகளும்!!![பகீர் பதிவு]

திருமணம் மீறிய உறவுகள் குறித்து உலகம் முழுவதும்
பல ஆய்வுகள் நடந்துவருகின்றன. அவற்றால்
அறியலாகும் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்: 

+++கிட்டதட்ட 20% திருமணங்கள் கள்ளக்காதலால் சிதைகின்றன.  ஐந்து திருமணங்களில் ஒரு திருமணம் ஏதேனும் ஒரு காலக்கட்டத்தில் துரோகத்தைச் சந்திக்கிறது. 


+++திருமணமான ஆண்களில் சுமார் 20 சதவீதத்தினரும், திருமணமான பெண்களில் 13 சதவீதத்தினரும்[சமன் செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை?] தகாத உறவில் ஈடுபடுகிறார்கள்.


+++18 முதல் 34 வயதுக்குட்பட்ட இளம் வயதினரிடையே துரோகத்தின் விகிதம் குறைவாக உள்ளது. வயது அதிகரிக்க அதிகரிக்க இது அதிகமாகிறது.


+++திருமணத்திற்கு முன்னரே இருபாலரும் தவறான உறவில் ஈடுபடுவது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது[ஆண்களில் ஐந்து பேருக்கு ஒருவர் மணமாவதற்கு முன்பே கள்ள உறவில் ஈடுபட்டதாகக் கூறுகிறார்].


+++இளைஞர்களைவிட வயதானவர்களே கள்ள உறவில் அதிகம் ஈடுபடுகிறார்கள். இவர்கள் தங்களைவிடவும் குறைந்த வயதுள்ள குமரிகளையே அதிகம் விரும்புகிறார்கள்[வாய்ப்புக் கிடைக்காவிட்டால், கிழவிகளுடன் கூடிக்குலாவுகிறார்கள் ஹி... ஹி... ஹி!!!].


+++வயது அதிகரிக்கும்போது பெண்கள் அதிகம் துரோகம் செய்கிறார்கள். நீண்ட கால உறவில் திருப்தியின்மை, அல்லது புதிய அனுபவங்களுக்கான ஆசை போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம்.


+++வேலை பார்க்கும் இடங்களில் இந்த இழிசெயல் அதிகமாக உள்ளது.


+++சக ஊழியர்களுடன் அதிக நேரம் செலவிடுவது இருபாலருக்குள் நெருக்கத்தை அதிகரிக்கிறது. பகிரும் அனுபவங்களும், வேலையின் அழுத்தங்களைப் பற்றிய புரிதல்களும் சக ஊழியர்களிடையே பிணைப்புகள் உருவாகக் காரணமாக அமையலாம்.


https://www.paristamil.com/news.php?u=MzU4MTI=