திருப்பரங்குன்றம் | தீபம் | உச்ச நீதிமன்றம் | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருப்பரங்குன்றம் | தீபம் | உச்ச நீதிமன்றம் | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 நவம்பர், 2026

திருப்பரங்குன்றம்> உச்ச நீதிமன்றம்> “ஒரு முறை மட்டும்.....”?!?!?!

ஐந்து மூலக்கூறுகளில்[பஞ்ச பூதங்கள்] ஒன்று நெருப்பு[தீ].

அடுப்பில் எரியும் நெருப்புக்கும் விளக்கில் ஏற்றப்படும் நெருப்புக்கும் அறிவியல்பூர்வமாக எந்தவொரு வேறுபாடும் இல்லை(எரிக்கும் திறன் கூடக்குறைய இருக்கலாம்).

இருட்டில் உள்ள பொருள்களைக் காண்பதற்கு வெளிச்சம் தருகிறது சிறு நெருப்பு ஏற்றப்பட்ட விளக்கு. அறிவியலின் கொடையால் நெருப்பு விளக்குகளுக்கு மாற்றாக மின்சார விளக்குகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. 

மின்சார விளக்குகள் இல்லாத கோயில்களே இல்லை என்னும் நிலையில், இன்னமும் சாமி சிலைகளின்[+படங்கள்] முன்னால் விளக்கேற்றி வழிபடுவது தேவையற்றது[மின்சாரத் தடை ஏற்படும் நேரங்களில் மட்டும் பலதரப்பட்ட விளக்குகளையும் வெளிச்சத்திற்காகப் பயன்படுத்தலாம்].

ஆனாலும், அந்த வழக்கம் இன்றளவில் தொடர்கிறது. காரணம்?

ஆன்மிகர்களின் ஆதிக்கம். இருள் நீக்கி, வெளிச்சம் பெறவும், உணவு சமைக்கவும், இன்ன பிறவற்றிற்கும் பயன்படும் நெருப்புக்குத் ‘தீபம்’ என்று பெயர் சூட்டி, அதைப் புனிதம்{விளைவு, மனித மலம் கலந்ததும், அழுகிய பிணங்கள் மிதப்பதுமான கங்கை புனிதம் ஆக்கப்பட்டது[+பல நிகழ்வுகள்]} ஆக்கிவிட்டார்கள்.

‘புனிதத்தன்மை’ என்பதே அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையில், புனிதத்தின் பெயரால் பக்திமான்கள் செய்யும் அடாவடித்தனங்களால் விளையும் தீங்குகள் பல[+மதக்கலவரங்கள்].

அவற்றுள், அண்மைக் காலத்தில் கொழுந்துவிட்டு எரியும் திருப்பரங்குன்றம் கல்தூணில் தீபம் ஏற்றுதலும்[சாமிகளே இல்லாத இடங்களிலும் தீபம் ஏற்றுவது பக்திப் பைத்தியம் முற்றிவிட்டதன் விளைவு] ஒன்று.

இந்தப் பிரச்சினையை அறிவியல்பூர்வமாக அணுகி, அமைதிக்கு வழிவகுப்பது நீதிபதிகளின்[நீதிமன்றங்களுக்கு மதச் சின்னங்களுடன் நீதிபதிகள் வருவது தடை செய்யப்படுதல் வேண்டும்] கடமை.

நம் நீதிபதிகளில் சிலர், நடுநிலை பிறழாமல் செயல்படுவதில்லை என்பது மக்கள் நலனுக்குப் பெரும் கேடு விளைவிப்பதாகும்.